top of page

அமீரகத்தில் "ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி"

"உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்ற உயரிய கோட்பாட்டுக்கு உயிர் கொடுத்தவர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் விஜிபி குழும தலைவரும் கலைமாமணி செவாலியர் டாக்டர் வி ஜி சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள் அமீரகம் வந்ததில் மகிழ்ச்சியுடன் வரவேற்பும், அமீரகத்தில் "ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி "சிறப்பு பாராட்டு விழா..என் சிறுவயதில் அவரின் திருக்கரங்களால் திருக்குறள் முற்றோதல் நிகழ்விற்கு அவரிடம் ஆசியும் பரிசும் வாங்கினேன். அதன்பிறகு சென்னையில் நான் வேலை பார்த்த தருணம் ஐயா அவர்களின் நிகழ்விற்கு திருக்குறளின் செயல்களாக அவருடன் பயணித்தேன். மேலும் ஈரோட்டில் இரும்பு கடை முனுசாமி முதலியார்(என் தாத்தா) என்றால் அனைவரும் அறிந்ததே. ஈரோட்டில் நடந்த விழாவிற்கு அண்ணாச்சி ஒன்றிணைக்கும் உலகத்தமிழர்களின் உறவுப்பாலமாக தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் செய்கின்ற அளப்பரிய பங்களிப்பை நேற்று நினைவு கூறும் தருணத்தில் நெகிழ்ந்து போனேன்..

கடந்த வாரம் ‌சார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் குறளும் மொழியும் புத்தகம் ஓலை அறிக்கையில் சிறப்பாக நடந்த நிகழ்ச்சியை ஐயாவிடம் காட்டி, மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார்.ஐயா அவர்களைப்பற்றி நான் எழுதிய "இமயத்திற்கு அப்பால்" கவிதை ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி புத்தகத்தில்...நேற்று கவிதையை என்னை வாசிக்க சொல்லி அவர் ரசித்துக் கேட்டு பாராட்டினார்..

போன வருடம் இணையத்தில் இதே மாதத்தில்(18-11-2020) காணொளி நிகழ்வில் சந்தித்தேன். கடவுள் அருளால் இந்த வருடம் இதே மாதம் (19-11-2021) ஐயாவை நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி..இவருடன் இணைந்து உழைப்பு,ஒழுக்கம், அன்பு, சீரிய சிந்தனை, கனிவு என சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரர் விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குனர் விஜிபி ராஜாதாஸ் அவர்களும் அமீரகம் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.ஐயாவுடன் அவர் பெயரன் திரு.டொமினிக் அவர்களும்,

டாக்டர்.வி .ஆர்.எஸ்.சம்பத் -தலைவர் (Madras Development society) அவர்களும்,செயலாளர் திரு.பீட்டர் அவர்களும் வந்து இருந்தனர்.இந்த நிகழ்வில் ஈமான் அமைப்பு,தமிழ் சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள்,தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டனர்.தன்னம்பிக்கை, எளிமை, கருணை,அன்பு,அருள், அடக்கம்,புன்னகை பிறருக்கு உதவிடும் ஈகை குணம் இவற்றின் மொத்த உருவத்திற்கு மறுபெயர் தான் நம் அண்ணாச்சி டாக்டர் வி.ஜி சந்தோஷம் அவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் அதிர்ந்து கூட பேசாமல் கண்ணியமும் கம்பீரமும் கடமையும் கட்டோடு இணைந்த மாமனிதராக நாளும் அவர்கள் உயர்ந்து வருவது குறளை உலகமெங்கும் பரப்பும் பணியில் எவரும் வியக்கும் வண்ணம் தமிழ்த் தொண்டும் செய்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருபவர் அண்ணாச்சி அவர்கள். விஜிபி தங்கக் கடற்கரை (VGP Golden Resort)அன்றைய காலங்களில் நகரப்புறங்களில் மக்கள் பரபரப்பான சூழ்நிலையில் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குடும்பத்துடன் சென்னை வந்தாலே தங்கக் கடற்கரை தான் பெரிய கோபுரம் போல்..இப்படி பொழுதுபோக்கிற்கு இடம் அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு கடற்கரையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்து அவரது சமுதாயத்தின் மீதான அபிமானத்தை நம்பிக்கையும் காட்டுகிறது. இவரது வெற்றிக்கு 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்ற கொள்கையை அவரது தாரக மந்திரமாக இருக்கிறது.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் பண்பை உலகத்தவர் பாராட்டுவர் என்று குறள் நெறி முறையின்படி இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் தொண்டாற்றி வரும் அவரது பண்புக்கு உலகம் முழுக்க அவர் நிறுவியுள்ள வள்ளுவர் சிலைகளே சான்றாகும்.அண்ணாச்சி அவர்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் தன் குடும்பத்தினருடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். இன்னும் இவருடைய சேவைகள் தொடரவும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.வரலாற்றுக்குள் மனிதன் வாழ்வதில்லை மனிதனுக்குள் தான் வரலாறு உறைந்து கிடக்கின்றது அதை யார் அறிவாரோ அவர்களே புது வரலாறு படைக்கின்றனர்.வரலாற்று நாயகனின் ஆசியுடன் என்னுடைய வெற்றிப்பயணம்..


அன்புடன் முனைவர் ஸ்ரீரோகிணி உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம் srirohini.mr@gmail.com

Recent Posts

See All

Comments


bottom of page