top of page

ஆபிரகாம் லிங்கன்-Abraham Lincoln-February 12

அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்த வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார்.

இவர் நியு ஆர்லியன்சில் வசித்தபோது கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என தன்னுடைய சிறு வயதில் உறுதியெடுத்தார்.

இவர் தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தோல்விகளின் செல்ல மகனாக தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து, பிறகு 25வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் வென்றார்.




1860ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டுப் போர் 4 ஆண்டுகள் நடைபெற்று, எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசிய கெஸ்டிஸ்பர்க் உரை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

1864ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய லிங்கன் 1865ஆம் ஆண்டு மறைந்தார்.

11 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page