'இந்திய துணைக் கண்டம்தான் மனிதகுலத்தின் பிறப்பிடம்'-THE HISTORY OF CREATION
*எர்ன்ஸ்ட் ஹேக்கல்*-Ernst Haeckel
அறிவியலாளர், தத்துவமேதை, ஓவியர் என பலதுறைகளில் தனது பங்களிப்பை சிறப்பாக தந்த எர்ன்ஸ்ட் ஹேக்கல் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள பிரஷ்யாவின் போட்ஸ்டம் நகரில் பிறந்தார்.
இவர் 1857ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ் என்ற டார்வின் எழுதிய நூலை படித்த பிறகு இவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது.
பின்பு உயிரியலில் ஆர்வம் வந்து, 1861ஆம் ஆண்டு விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார். உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1866ஆம் ஆண்டு கேனரி தீவுகளுக்கு சென்றபோது டார்வினை சந்தித்தார்.

இவர் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார்.
பல வகையான உயிரினங்கள் குறித்த விவரங்களுடன் 'ஆர்ட் ஃபாம்ஸ் ஆஃப் நேச்சர்' என்ற நூலை எழுதினார். இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.இவர் தான் முதலில் உயிரினங்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என பிரித்தவர். மனிதரை 10 இனங்களாகப் பிரித்து, அதற்கான காரணத்தை விளக்கினார்.
'இந்திய துணைக் கண்டம்தான் மனிதகுலத்தின் பிறப்பிடம்' என்று 'தி ஹிஸ்ட்ரி ஆஃப் கிரியேஷன்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ள இவர் 1919ஆம் ஆண்டு மறைந்தார்.