இரும்புமனிதர் வல்லபாய் படேல் (Sardar Vallabhai Patel)
இந்தியாவை `வலுவான தேசமாக` மாற்றிய இரும்புமனிதர் வல்லபாய் படேல் (Sardar Vallabhai Patel)பிறந்த நாள். வல்லபாய் படேலை தவிர்த்துவிட்டு இந்தியாவின் விடுதலை மற்றும் அரசியல் வரலாற்றை எழுத முடியாது.
இந்தியாவின் *'இரும்பு மனிதர்'* என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த படேல் அவர்கள், ராஜதந்திர திறன்களுக்காக நினைவுகூரப்படுகிறார். சுதந்திர இந்தியாவை ஒன்றிணைத்த பெருமை பெற்ற படேலின் அரசியல் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளால் அனைவராலும் மெச்சப்படுபவை.சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இவருக்கு ஏன் இரும்பு மனிதர் என்ற பெயர் பார்க்கும் பொழுது,நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. 565 ராஜ்ஜியங்கள் ஆண்டு கொண்டிருந்தன. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து "இரும்பு மனிதர்" எனப் பெயர் பெற்றார்.சுதந்திரத்திற்கு (independence) முன்னர் 562 சுதேச மாநிலங்களை இந்தியாவாக ஒன்றிணைத்த இரும்பு மனிதரின் வாழ்க்கை ஒரு சரித்திரம்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மகாத்மா காந்தியின் அகிம்சை சொற்பொழிவைக் கேட்கும் வரை கொந்தளிப்பான விடுதலைக் களத்தில் மகாத்மா காந்தியுடன் தனித்தும் அகிம்சைப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டதோடு சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்து அதிலும் படேலின் துணிச்சலை காணமுடிகிறது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் முதல் துணை பிரதமராக மறைந்தது வரை பல விடயங்கள் நாம் காணமுடிகிறது. பர்தோலி சத்தியாகிரகம், உப்பு வரிக்கு எதிரான உப்பு சத்தியாகிரகம், குஜராத்தில் பரவிய பிளேக் நோயின் போது செய்த தன்னலமற்ற நிவாரண பணிகள் என அனைத்திலும் படேலின் ஆளுமை புலனாகிறது. இந்திய விடுதலைக்காக தன் தொழில், வருவாய், குடும்பம் அனைத்தையும் தியாகம் செய்த படேலுக்கு இறுதியாக ஒரு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் போது காங்கிரஸ் தலைவராக இருப்பவரே சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று காங்கிரஸ் அறிவித்த போது, நேருவுக்கு என்று ஆதரவாக பெரிதாக இல்லாத நிலையில் ஆற்றல்மிக்க படேல் தான் பிரதமராவார் என்ற பெரும் நம்பிக்கையை தகர்த்து மகாத்மா காந்தி நேருவையே காங்கிரஸ் தலைவர் ஆக்கியதும் நேரு பிரதமர் ஆனதும் அன்றைய நாளில் அதிர்ச்சி கூடிய வரலாற்று நிகழ்வு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான 150 ஆண்டு கால போராட்டங்களில் மகாத்மா காந்தியின் இந்திய வருகைக்குப் இந்திய வரலாற்றுப் பதிவுகள் பலவும் நம் தமிழ் நூலில் நூலாசிரியர் செல்வமணி அவர்களின் சர்தார் வல்லபாய் படேல் என்னும் நூலிலும், ஆங்கிலத்தில்
The Man who saved India,A Far sighted luminary of India என்ற நூலிலும் அவரைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு காணமுடிகிறது.
அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி பிரபலமானார். 1917ஆம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார். 1991ஆம் ஆண்டு படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2018ஆம் ஆண்டு இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அன்புடன் முனைவர் ஸ்ரீரோகிணி உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம்