top of page

ஜாகீர் உசேன்(Dr. Zakir Hussain) பிப்ரவரி 8

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக்கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.

1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்' என்று கூறியவர்.

இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954) பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் 1969ஆம் ஆண்டு மறைந்தார்.
Dr. Zakir Hussain, former President of the Republic of India, was a was a gracious and sedate man, truly a picture of old-world charm and dignity. Essentially a humanist and a rationalist in thought and deed, his works shine in efficacy and acclaim. Works like ‘Capitalism: An Essay in Understanding’, Fredrich List’s ‘National System of Economics’ (translated in Urdu), and Edwin Cannan’s ‘Elements of Economics’ (translated in Urdu), reflect his training as an economist. But a few of his other works like ‘Hali: Muhibb-e-Watan’, ‘Talimi Khutabat’, and the translation of Plato’s Republic into Urdu, have become treasured pieces of Urdu literature.

Dr. Zakir Hussain’s ancestors came from Afghanistan several centuries ago and settled in Pitaura, a small village in Farrukhabad district of Uttar Pradesh. He was born in Hyderabad, Andhra, where his father practiced law. He received his early education at Etawah and then joined the M.A.O. college at Aligarh. In 1920 when he was a graduate student, the Non-co-operative movement was in full swing. The Aligarh Muslim University at that time was basking in the sunshine of British patronage and its chief purpose was to train Muslims to serve the British Government. Muslim nationalist leaders like Muhammad Ali and Abul Kalam Azad visited the campus and awakened the students. A parallel independent educational institution was established under the title of Jamia Milia Islamia. Zakir Hussain was one of the first who accepted the challenge and, quitting Aligarh, walked over to Jamia. He taught there for two years. In 1923 he left to complete his education in Germany, where he took his Ph.D. from the Berlin University. On his return to India, though he had come under the influence of Gandhi, he decided not to join the political movement to dedicate himself to the cause of education. He, therefore, took charge of the Jamia in 1926 and worked as its Vice-Chancellor till 1948. During this period the became a collaborator with Gandhi in the latter’s ‘Hindustani Talimi Sangh Plan’ at Sewagram, and made significant contributions to the evolution of a national education pattern. In 1937, when Gandhi propounded the theory of basic education Dr. Zakir Hussain played a leading role in the propagation of the concept of work-centered education. After the freedom of India, he worked as the Vice-Chancellor of A.M.U., 1948-57; member of the Rajya Sabha, 1957-57; Governor of the State of Bihar, 1957-62; and Vice-President of India, 1962-67. The Dynamic University, and Educational Reconstruction in India are the products of this period. He was awarded the highest honor of Bharat Ratna in 1963 for his distinguished services to the nation. He was elected the President of India in May, 1967. An ardent follower of Gandhi, his prose reflects Gandhian influences. His Urdu keeps close to Hindustani, which forms the common base for both Urdu and Hindi. The prose that follows is marked by a high degree of verbal economy and concentration, each word doing a full-time job while retaining a lively personal and colloquial touch. It is this quality of clothing the familiar in perfection that has won Dr. Zakir Hussain wide popularity as a prose writer.


45 views1 comment

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

1 Comment


Malathi Packiaraj
Malathi Packiaraj
Feb 08, 2022

இவரைப் போன்ற தன்னலமற்ற தலைவர்களின் வரலாறு இன்றைய தலைமுறையினருக்கு எப்போதும் வியப்பளிக்கும் விடயம்.

Like
bottom of page