ஜி.ஹெச்.ஹார்டி(Godfrey Harold Hardy- G.H.Hardy)

✎ கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்த ஜி.ஹெச்.ஹார்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார்.


✎ 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.


✎ இந்திய கணிதமேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.


✎ இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்' சூத்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்' என்ற நாவல் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது.


✎ இவர் ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி 1947ஆம் ஆண்டு மறைந்தார்.



30 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த