தனிப்பெருங்கருணை நாள்!
சாதி, மதம்,இனம்,மொழி பார்க்காத சமர சன்மார்க்கத்தின் அருள்மொழியாம்!!
வள்ளலார் பிறந்த நாள்!!

தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர்,
பசி நெருப்பை அணைப்பதே சீவகாருண்யம் என்ற புதிய கொள்கையை தோற்றுவித்தவர், தனது தலையாய கொள்கையான சீவகாருண்யத்தின் முக்கிய நோக்கமாகிய பசிக்கொடுமையை போக்கியவர்.
இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம்,சொற்பொழிவாளர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, இதழாசிரியர், போதகர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப் பிணி போக்கிய அருளாளர், நூலாசிரியர், தீர்க்கதரிசி, தமிழ் மொழி ஆய்வாளர்..
அப்பப்பா எவ்வளவு முகங்கள்!

வயிற்று பசியை போக்கிய மகான் இவர். கடலூரை அடுத்த வடலூர் என்னும் ஊரில் பசியில் வாடும் வறியவர்களுக்கு இவர் தொடங்கிய 'சத்திய ஞான சபை' என்னும் தரும சாலை மடம் இன்று வரை சாதி, மதம், மொழி என்ற வேறுபாடு பார்க்காமல் நாடி வரும் அனைவருக்கும் பசி பிணியை போக்கி வருகிறது. இன்றளவும் இவர் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு இச்சபையின் மூலம் பசியாற்றப்படுகிறது. வடலூரில் இச்சபை இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பல்வேறு மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இவர் 1867ஆம் ஆண்டு அன்று ஏற்றிய தீப ஜோதி இன்று வரை அணையாமல் எரிந்து பலரின் பசியை போக்கி கொண்டிருக்கிறது. அந்த தீப ஜோதி, எண்ணெய்க்கு பதிலாக சாதாரண தண்ணீரில் எரிகிறது என்பது அதன் சிறப்பம்சமாகும்.

கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். அவர் ஒளியாக
உள்ளார்,அவருக்கு மனித உருவம் இல்லை, அருள் என்னும் ஆற்றல்
உள்ளது. அதற்கு பெயர் ''அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!
தனிப்பெரும் கருணை !அருட்பெரும்ஜோதி !!'' என்பதாகும்.
அந்த ஒளிதான் பல கோடி அண்டங்களையும்
இயக்கிக் கொண்டு இருக்கிறது.

என் மூதாதையர்கள் முதல் இன்று வரை அண்ணலின் அன்பான வழியில் நாங்கள் என்பதில் பெருமிதம்.எந்த பயனையும் கருதாமல் மற்றவரின் பசியை போக்கும் கருணையுள்ளம் கொண்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வள்ளலார் இன்று வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
அன்புடன், முனைவர் ஸ்ரீரோகிணி (ஈரோடு) உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம்