நடிகர் திலகம் சிவாஜிகணேசன்| NadigarThilagam Sivaji Ganesan
இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்...
நடிப்புச் சக்கரவர்த்தி , நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று(ஜூலை 21, 2001-ம் ஆண்டு)
என் பாக்கியம் அனைத்தும் நேரில் பக்கத்திலிருந்து பார்த்தமை- அந்த மிடுக்கு நடை, நேர் பார்வை, அசாத்தியமான திறமைகள்,
எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல் தான்...

படம் :நடிகர் திலகம் ஐயாவுடன்
பூட்டனார் நடிப்பாற்றல்!
நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்தவர்..
அவருடன் ஏற்பட்ட மரியாதை,பண்பு தான் என் வாழ்க்கையை இன்றும் ஒளிமயமாக ஏற்றிக் கொண்டு இருக்கிறது.
சிறுவயதில் விடுமுறை காலத்தில் வேலூர் செல்வோம்..எங்கள் அத்தையின் நேஷனல் தியேட்டரில் 'பராசக்தி' படம் பிரவேசிக்க அன்று மீண்டும் கண்டேன் ஐயா அவர்களை..
மனதில் படிந்த ஐயா அவர்களின் உடை, ஒப்பனை போன்றவைற்றை இன்றும் கண் மூடி யோசித்தால் அப்பப்பா!! ஞாபக அலைகள்....

நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, காவல்துறை அதிகாரியோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்தவர்.
ஐயா அவர்களின் நடிப்புக்கு எந்த படத்தை சொல்ல, எதை விட? எல்லாமே முத்துக்கள்தான்.. எல்லாமே வைரங்கள்தான்.. எல்லாமே மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள்தான்..

படம் : மீனா பாட்டியுடன் அண்ணா பிரபு மற்றும் விக்ரம் பிரபு அவர்கள்
தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லும். அவர் வாய்திறந்து பேசவே தேவையில்லை... கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும்.
அவரது நடை ஒன்று போதுமே.. 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் தாங்கி தாங்கி நடப்பதாகட்டும் திருவிளையாடலில் மீனவ வேடமாகட்டும்.. 'திருவருட்செல்வர்' படத்தில் பழுத்த சிவனடியாராகட்டும்.. ஒவ்வொரு நடையிலும் அவரது தன்னம்பிக்கை தான் என்னை வியப்பூட்டுகிறது இன்றும்..
ஒவ்வொரு பொங்கல் விழாவிற்கு அனைவரும் ஒன்று கூடி விழாவை இராய வேலூரில் பெருமாள் தாத்தா வீட்டில் சந்திப்பார்..

இன்றும் அவருடைய நாற்காலி அவர் பெயர்,புகழ் பேசும் நினைவுலைகளாய்...நிறைவாக அவள்விகடன் புத்தகத்திற்கு ஒரு குடும்பப் படம்..கலை உலகத்திற்கு தமிழன்னை பெற்றுத்தந்த தவப்புதல்வன்தான் ஐயா..அனைத்துவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர்.எங்களைப் பார்த்தவுடன் வா மா,சாப்பிட்டியா? இந்தா அந்த பேனாவை எடு என்று கேட்கும் குரல்..

படம்: மீனா பாட்டி,மாமா, அண்ணா பிரபு
மரித்திருக்க மாட்டார்!
அவர் மரணத்தை தத்ரூபமாக நடித்திருக்ககூடும்!
நடித்தது போதும், எழுந்து வாருங்கள்!!
--நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் செம்மாந்த ஆளுமையின் சத்திய முகம் நினைவு நாள் ஜுலை 21--
ஐயாவின் புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும்!!!