பிப்ரவரி 14-February 14
*ஜாகிருதீன் பாபர்*
முகலாயப் பேரரசர் ஜாகிருதீன் பாபர் 1483ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் (ஆசியாவில் உள்ள) பெர்கானாப் பள்ளத்தாக்கிலுள்ள அண்டிஜான் என்னும் நகரத்தில் பிறந்தார்.

இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை அமைக்கப்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கிய பாபர் 1530ஆம் ஆண்டு மறைந்தார்.
****************************************************************************************************************
*சார்ல்ஸ் வில்சன்*
முகிலறையை (Wilson Cloud Chamber) கண்டுபிடித்த சார்ல்ஸ் தாம்சன் ரீஸ் வில்சன் 1869ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி முகிலறை. இதற்காக 1927ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.
************************************************************************************************************************
*ஃபிரிட்ஸ் ஸ்விக்கி*
கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் முக்கியப் பங்காற்றிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல்கேரியா நாட்டின் வர்னா நகரில் பிறந்தார்.

இவர் நியூட்ரான் நட்சத்திரங்களை (சூப்பர்நோவா) கண்டறிந்தார். 1933ஆம் ஆண்டு கோமா கேலக்ஸி கிளஸ்டர் தொடர்பான ஆராய்ச்சியில் கண்ணுக்குத் தெரியாத பருப்பொருள்களை (டார்க் மேட்டர்) கண்டறிந்தார். இதனால் கரும்பொருளின் தந்தை என போற்றப்படுகிறார்.
ராக்கெட் உந்துதல் தொடர்பான பங்களிப்புகளுக்காக அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வானியலில் பல்வேறு களங்களில் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
*********************************************************************************************************************
*பி.சாம்பமூர்த்தி*
1901ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞர் பி.சாம்பமூர்த்தி பிறந்தார்.

இவருக்கு 1936ஆம் ஆண்டு சங்கீத கலாசிகாமணி விருதும், 1957ஆம் ஆண்டு இசைப்பேரறிஞர் விருதும், 1972ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதும், பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இசைத்துறையில் சிறந்து விளங்கிய இவர் 1973ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் மறைந்தார்.
************************************************************************************************************************
*உலக காதலர் தினம்*
ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது என தடைவிதித்தார். ஆனால், வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.

காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
***********************************************************************************************************************
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
