top of page

பிப்ரவரி 18- FEBRUARY 18

*ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்*

இந்திய மக்களுக்கு ஆன்மிக ஞான ஒளியாய் திகழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டத்திலுள்ள காமர்புகூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதாதர் சட்டோபாத்யாயர்.




பொருளாதார நிலை காரணமாக, தன்னுடைய சிறு வயதில் கொல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக காளி கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார்.

இவர் ஆன்மிகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பினார். இவருடைய சீடர்களுள் ஒருவர் நரேந்திரநாத் தத்தா என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் ஆவார்.

*'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்'* என்பதை தெளிவுப்படுத்திய இராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ஆம் ஆண்டு மறைந்தார்.

**********************************************************************************************************************


*அலெசான்றோ வோல்ட்டா*

மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (Electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டு முதல் மின்கலத்தை உருவாக்கினார்.




வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட் அளவி (Volt Metre) என்று அழைக்கின்றோம்.

முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 1827ஆம் ஆண்டு மறைந்தார்.

24 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page