பிப்ரவரி 24 -FEBRUARY 24
மத்திய கலால்வரி தினம் (Central Excise Day)*
இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது.
சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும், சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்வதற்கும் மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும், இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
*இ.எஸ்.ஐ.சி நிறுவன தினம்(E. S. I. C. Day.)*

பண்டிட் ஜவஹர்லால் நேருவினால் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கான்பூரில் இ.எஸ்.ஐ.சி (Employees State Insurance Corporation) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் சமூக நோக்கத்தோடு காப்பீடு வழங்கப்படுகிறது. குறைந்த வருவாயுள்ள தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்கள் கஷ்டப்படும் நெருக்கடி காலத்தில் இ.எஸ்.ஐ.சி கழகம் உதவி செய்து வருகிறது.
*ஜெ.ஜெயலலிதா*
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.
தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
இவர் *'வெண்ணிற ஆடை'* என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான *'நதியை தேடி வந்த கடல்'* ஆகும்.

அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், ஜெயலலிதாவை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இவர் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
*ஆர்.முத்தையா*
தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார்.
1913ஆம் ஆண்டு ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயா ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அங்கு 1930ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.

ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி, அதை உருவாக்க முயற்சித்தார். தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் வைப்பது சவாலாக இருந்தது.
இறுதியாக தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கி, அதற்கு 'ஸ்டாண்டர்டு தட்டச்சு' என பெயரிட்டார். மேலும் அந்த இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.
தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளியிடுவதற்கு முன்பே மறைந்து விட்டார்.
*ஸ்டீவ் ஜாப்ஸ்*
1955ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.

இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிஸ்னி (Wall Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மறைந்தார்.