பிப்ரவரி 25 -FEBRUARY 25
*மெஹர் பாபா*
கருணைக்கடல் என்று போற்றப்படும் மெஹர் பாபா 1894ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மெர்வான் ஷெரியர் இரானி.
இவர் தன்னுடைய 19வது வயதில், ஹஸரத் பாபாஜான் என்ற பெண் துறவியை சந்தித்தார். அது அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து விலகி துறவு மேற்கொண்டார்.

கருணை உள்ளம் படைத்தவர் என்று பொருள்படும் வகையில் சீடர்கள் இவரை 'மெஹர் பாபா' என்று அழைத்தனர். இவர் 1922ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் சேர்ந்து மும்பையில் 'மன்ஸில்-இ-மீம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
மேலும், இவர் 1925ஆம் ஆண்டுமுதல் வாழ்நாள் கடைசி வரை சுமார் 44 ஆண்டுகளுக்கு மௌனமாக இருந்தார். சைகை, எழுத்து மூலமாகவே தன் கருத்தை தெரிவிப்பார்.
ஏழை, எளியவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் எண்ணற்ற தொண்டுகள் செய்த இவர் 1969ஆம் ஆண்டு மறைந்தார்.