பிப்ரவரி-FEBRUARY

*விஜய் சிங் பதிக்*

சுதந்திரப் போராட்ட வீரரான விஜய் சிங் பதிக் 1882ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பிறந்தார்.

இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார். இவரது இயற்பெயர் பூப் சிங் குர்ஜர். இவரது பெற்றோர் பூப் சிங் குர்ஜர் என்ற பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினர்.ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை நிறுத்த ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்ற பெயரில் சத்தியாக்கிரக இயக்கத்தை இவர் நடத்தினார்.
இவரது அயராத முனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. தன் எழுத்துக்களாலும், பேச்சாலும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை உண்டாக்கினார். அஜய் மேரு என்ற இவரது நாவல் மிகவும் பிரபலமானது.

புரட்சி வீரராக தனது வாழ்நாள் முழுவதும் தேச சேவையில் ஈடுபட்ட, தன்னலமற்று சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவருமான விஜய் சிங் பதிக் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.(26-பிப்)

*லெவி ஸ்ட்ராஸ்*

உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார்.

கலிபோர்னியாவில் 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தப்படியே இருந்தார்.
கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால்,

தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும், தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார்.

டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ளூ ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது.

தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று, வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 1902ஆம் ஆண்டு மறைந்தார்.

8 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த