மரபு அறிவியல் -ஆரோக்கியம் Healthy life
அன்று சொன்னது…..அது அர்த்தம் உள்ளது!
தமிழ் சமூகம் பன்னெடுங்காலமாக பின்பற்றி வரும் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு பின்னால் நம்பிக்கை மட்டுமல்லாமல்,, அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.
உதாரணமாக, வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளையில் உள்ள L-Dopa உருவாவதற்கு உதவி செய்து, நடுக்கு வாதம் என்ற பார்க்கின்சன் நோயை தள்ளிப்போடும். இலையிலுள்ள epigallocatechin gallate சிறந்த antioxidant ஆக செயல்படுகிறது. தரையில் சம்மணமிட்டு அமர்வதால், பல வர்மபுள்ளிகள் தூண்டப்படும், இது ஒரு யோகாசனமுமாகும்.

தினமும் பலமுறை இப்படி சம்மணமிட்டு எழுவதால், உணவில் கட்டுப்பாடும், தொப்பையில் கட்டுப்பாடும் ஏற்படும். எனவேதான், சம்மணமிடுவதை, சம்பளம்கால் போட்டு அமருதல் என்பர். அதாவது, சும்மா உட்கார்ந்தாலே, சம்பளம் (கூலி, ஆதாயம்) கிடைக்குமாம். குழந்தைகளின் கையில் வசம்புகிழங்கை கட்டிவிடுவதால், மூளை வளர்ச்சிக்கும், வயிற்று உபாதைகளை போக்கும் மூலக்கூறுகளும், குழந்தை வசம்பை கடிப்பதால் உடலில் சேர்ப்பிக்கப்படுகிறது.

தோப்புகரணம் என்னும் superbrain yoga செய்வதால், இடகலையும் பின்கலையும் ஒருங்கே தூண்டப்பட்டு, மூளையின் இரண்டு பக்கங்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டு, திறமைசாலியாக மனிதனை ஆக்குகிறது.

இணையம் - பகிர்வு.