top of page

மெய்ப்பொருள் காணும் ஆராய்ச்சி அறிவியல்!


"கண்ணை நம்பாதே

உன்னை ஏமாற்றும்!

உன்னை ஏமாற்றும்,

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது!


அறிவை நீ நம்பு!

உள்ளம் தெளிவாகும்!

அடையாளம் காட்டும்,

பொய்யே சொல்லாதது!"


உயிர் இயல் உயிரியல் biology

(உளவு இயல் உளவியல் = வேவு பார்த்தல் spying/espionage)

உளம் இயல் உளத்தியல் /

உளம் உள(ம்) இயல் உளவியல் psychology

நரம்பு இயல் நரம்பியல் neurology

philology = love of learning; love of words or discourse,"

apology, doxology, analogy, physiology, trilogy, etc


-logy = study = ஆராய்தல், ஆய்ந்து தீர்மானித்தல், ஆராய்ந்து பேசுதல் = -இயல்!

ஆய்தல் = மீன் ஆய்தல், கீரை ஆய்தல் போல நல்லவை கெட்டவை என 'அக்கு அக்காக' / 'அக்கு வேறு, ஆணி வேறாக'/ 'அக்குவேர் ஆணிவேராய்' பகுத்துப் பிரித்து நல்லவற்றைத் தெரிந்தெடுக்கும் அறிவு à அறிவியல்.


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு."

(திருக்குறள்: 423).


விளக்கம்: பகுத்து அறியும் அறிவு பகுத்தறிவாகும். எந்த நிலையிலும், எதிலும், சிறந்தது எது, நல்லது எது, விழுமியது எது என்றெல்லாம் உணர்ந்து அறியும் அறிவே பகுத்தறிவு எனப்படுவது. நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ளவேண்டும். யாரையும் எல்லாமறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டுவது மெய்ப்பொருள் காண்பது ஆகும். ஒரே பொருளைப் பலரும் பலவகையாகச் சொல்வர். அவற்றில் மெய்ப்பொருளைத் தேர்ந்து காணவேண்டும்.


"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு."

(திருக்குறள்: 355).


“மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று."


ஒரு நுகர் பொருளை அதன் வெளிப்படு நிறம், வடிவம், பெயர் (brand), சுவை இவற்றைப் பார்த்து அதனை ஏற்றதெனக் கொள்கிறோம். அதன் உள்ளீடு மாறாக இருக்கலாம்; பெருங்கேடு செய்வதாயிருக்கலாம். அதன் உட்பொருளை நன்கு அறிந்து எடுத்துக் கொள்வது நலன்பயக்கும். அதுபோலவே மற்றப் பொருள்களின் தன்மைகளையும் ஆராய்ந்து ஏற்கத்தக்கதானால் எடுத்துக்கொள்க என அறிவுரை கூறுகிறது இப்பாடல்.


"ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;

சேரி வரினும் ஆர முயங்கார்;

ஏதி லாளர் சுடலை போல

காணாக் கழிப மன்னே! நாண் அட்டு

நல் அறிவு இழந்த காமம்

வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே"

(குறுந்தொகை 231).


உரை: தலைவர் நம்மோடு ஒரே ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார். நாம் இருக்கும் தெருவிற்கு வந்தாலும் அவர் என்னை நன்றாகத் தழுவ மாட்டார். நாணத்தை அழித்து, நன்மை தீமைகளை உணரும் அறிவை இழந்த என்னுடைய காமம், வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, நெடுந்தொலைவில் விழுந்து அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுவது போல் நம்மைக் கண்டும் காணாதவர் போல் விலகிச் செல்கிறார்.

* காமம் அறிவைத் தொலைக்கும் என்றது.


"மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம் மலைக் கிழவோன் நம் நயந்து என்றும்

வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்

நீயும் கண்டு நுமரொடும் எண்ணி

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு

அரிய வாழி தோழி! பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே"

(நற்றிணை 32).


* என்னோடு உசாவுவதை யொழித்து நீயும் அவனை நோக்கி நின்மாட்டு அன்புடைய தோழியரோடும் ஆராய்ந்து அறிவினால் இது தக்கது இது தகாததென்பதையும் அறிந்து பின்னர் அளவளாவுதல் வேண்டும்; அவன் கூற்று மறுத்தற்கரியன காண் ! அறிவுடைய சான்றோர் தம்பாலடைந்து நட்புக் கொள்ள விரும்பினார் திறத்து முன்னர் அவருடைய குணம் செயல்களின் நன்மையை ஆராய்ந்து நட்புக்கொள்ளுவதல்லது நட்புச் செய்து பின்பு ஆராய்ந்து பாரார்;


"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,

பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேல் பால் ஒருவனும் அவன் கண் படுமே"

(புறநானூறு 183).


* ஒரே குடியில் பிறந்த பலரில்

மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும்.

மெய்ப்பொருள் காணும் ஆராய்ச்சி அறிவே அறிவியல்; பகுத்து - பிரித்து - செகுத்து அறியும் அறிவு.


"சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழுது உணரும்

சான்ற கொள்கை சாயா யாக்கை

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர்"

(மதுரைக்காஞ்சி:477 - 481).


பொருளுரை: அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள். (அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.) அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள்...இந்தக் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கின்றனர். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்.

* அறிஞர் = எல்லாம் அறிந்துணரும் இயல்பினர், சிறப்புப் பொருள்.


"முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்

வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை

மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி

நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்"

(நற்றிணை 314: 1-4).


உரை: மூத்தோர் தம் இளமை மீண்டும் வேண்டும் என்று விரும்பினாலும் இளமையைத் திரும்பப் பெறமுடியாது. வாழ்நாளை வகைப்படுத்தி அளந்து வைத்திருக்கும் அறிவுடையவர் உலகில் யாரும் இல்லை.

* அறிஞர் = அறியக்கூடியவர், இயல்பான பொருள்.

"நீயே பிறர் நாடு கொள்ளும் காலை அவர் நாட்டு

இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க

நனம் தலைப் பேரூர் எரியும் நைக்க

மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்

ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்

கடி மரம் தடிதல் ஓம்பு நின்

நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே"

(புறநானூறு 57:).


* ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க = வேல்மறவர்களைக் குத்திக் கொன்றாலும் கொல்லட்டும்.

செகுத்தல் = (உயிர்) பிரித்தல்.


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று."

(திருக்குறள்: 259).


இக்குறளின் நேரடிப் பொருள்: அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று என்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ளதால் இது புலால் உண்ணாமையை வலியுறுத்த வந்தது என்பது தெளிவு.

* செகுத்து என்பது போக்கி என்ற பொருள்பட்டு உயிர் நீக்குவதைக் குறிக்கும்.


"மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்

கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!

அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்

நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை

கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்

முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து

பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்"

(கலித்தொகை: 74: 6 -11).


* உயிர் செகுத்தல்= நஞ்சு உயிரைப் பிரிக்கும் என அறிந்திருந்தும் அதனை உண்பது போல், நீ அளி செய்யாமல் இருக்கும் உன் சொற்களை நம்பிய பெண்களும் நிறைவடைகின்றனர்.


(செகு > segment, section, insect, bisect, dissect,...).


அறிவு இயல் அறிவியல் = பகுத்து / செகுத்து (பிரித்து ஆராய்ந்து) அறிதல்.

உண்மையான அறிவு எது என்று ஆராய்வது அறிவியல்!

செகு > *skel > scire > sciens > science > scientia! (Latin). skhizein! (Greek).


science (n.)

mid-14c., "what is known, knowledge (of something) acquired by study; information;" also "assurance of knowledge, certitude, certainty," from Old French science "knowledge, learning, application; corpus of human knowledge" (12c.), from Latin scientia "knowledge, a knowing; expertness," from sciens (genitive scientis) "intelligent, skilled," present participle of scire "to know," probably originally "to separate one thing from another, to distinguish," related to scindere "to cut, divide" (from PIE root *skei- "to cut, split;" source also of Greek skhizein "to split, rend, cleave," Gothic skaidan, Old English sceadan "to divide, separate").Comments


bottom of page