மார்ச் இரண்டாவது வாரம்
(12-மார்ச்)
*ஏர்ல் நைட்டிங்கேல்*
புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.
பேர்ல் ஹார்பர் போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்க தொடங்கினார். 1956ஆம் ஆண்டு தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார்.
'திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்' என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது முதன்முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது.

1960ஆம் ஆண்டு லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் கார்ப்பரேஷனை நிறுவினார். 1976ஆம் ஆண்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது.
1980ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது.
ஏராளமான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989ஆம் ஆண்டு மறைந்தார்.
*யஷ்வந்தராவ் பல்வந்தராவ் சவாண்*
1913ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இந்திய அரசின் ஐந்தாவது துணை பிரதமரான யஷ்வந்தராவ் பல்வந்தராவ் சவாண் மும்பையில் பிறந்தார்.

இவர் மராட்டிய மாநில முதலமைச்சராகவும், இந்திய நடுவணரசின் துணைப்பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் நடுவணரசின் உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலும் இருந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மறைந்தார்.
(11-மார்ச்)
*மருத்துவர் வி. சாந்தா*
மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta, மார்ச் 11, 1927 – சனவரி 19 , 2021) இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மக்சேசே விருது, பத்மசிறீ, பத்ம விபூசண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய்க் கழகத்திலே 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

பிறந்தவர் சாந்தா. பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.
சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் சாந்தா. பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.அவர் தனது 94-வது அகவையில் 2021 சனவரி 19 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
(10-மார்ச்)
*பாவலரேறு பெருஞ்சித்திரனார்*
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசிய தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும்.

இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
*மார்செல்லோ மால்பிகி*
உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்ட மார்செல்லோ மால்பிகி 1628ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் பொலோக்னா என்ற ஊரில் பிறந்தார்.
பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே மருத்துவமும் மற்றும் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார்.

மைக்ரோஸ்கோப் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளையும் ஆராய்ந்தார். இவர் கருவியல், தாவர உடற்கூறியல், திசு அமைப்பியல், ஒப்பீட்டு உடற்கூறியலின் முன்னோடி எனப் போற்றப்பட்டார்.
நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதை கண்டறிந்தார். மேலும் இவைதான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் ஆராய்ந்து கூறினார்.அதன்பிறகு கண்டறியப்பட்ட பல உடல் உள்ளுறுப்புகள் மால்பிஜியன் துகள்கள், மால்பிஜியன் அடுக்கு, மால்பிஜியன் குழல்கள் என இவரது பெயரால் அடையாளம் காணப்பட்டன.
அறிவியல் வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்த மார்செல்லோ மால்பிகி 1694ஆம் ஆண்டு மறைந்தார்.