top of page

மார்ச் கடைசி வாரம்
(28-மார்ச்)

மாக்சிம் கார்க்கி.


👉 1868ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளரும், அரசியல்வாதியுமான மாக்சிம் கார்க்கி ரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தார்.


👉 இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.


👉 இவரது எழுத்துக்களின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோசலிச யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும், பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் 1936ஆம் ஆண்டு மறைந்தார்.டானியல் டென்னட்.


👉 அமெரிக்காவின் ஒரு முக்கிய மெய்யியலாளரான டென்னட் 1942ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்தார்.


👉 இவர் அறிவியல், உயிரியல் சிறப்பாக படிவளர்ச்சி உயிரியல், நரம்பணுவியல் பற்றி ஆய்பவர்.


(29-மார்ச்)

பவானி பிரசாத் மிஸ்ரா.


✍ இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியான பவானி பிரசாத் மிஸ்ரா 1913ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள டிகரியா என்ற கிராமத்தில் பிறந்தார்.


✍ இவர் பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கி விட்டார். பிரபல கவிஞர்களின் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். இவர் காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார்.


✍ இவரது நூல்கள் மொத்தம் 22 வெளிவந்துள்ளன. சம்பூர்ண காந்தி, வாங்மய, கல்பனா உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார்.


✍ இவரது புனீ ஹுயி ரஸ்ஸி படைப்புக்காக 1972ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்மஸ்ரீ, உத்தரப் பிரதேச இந்தி அமைப்பின் இலக்கிய விருது, மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


✍ இவர் இலக்கிய வட்டாரத்தில் பவானி பாய் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மிக எளிமையான, நேரில் நின்று பேசுவது போலவே காவிய நடையைப் படைக்கும் ஆற்றல் கொண்ட பவானி பிரசாத் மிஸ்ரா 1985ஆம் ஆண்டு மறைந்தார்.சாமுவேல் வால்டன்.


🏢 உலகப் புகழ்பெற்ற வால்மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் 1918ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.


🏢 இவர் ஓட்டப்பந்தய வீரராகவும் பிரகாசித்தார். 1942ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். பின்னர் ஒரு பிரபல விற்பனை நிலையத்தின் விநியோக உரிமையை பெற்றார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------


(30-மார்ச்)

ஆனந்தரங்கம் பிள்ளை.


📆 நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார்.


📆 தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். பல மொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.


📆 முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், ஜமீன்தாரராகவும் நியமிக்கப்பட்டார்.


📆 ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீக படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்று பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.


📆 மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள் கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.


📆 இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸ் என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளையை இவருடன் ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்' என போற்றப்பட்டார். நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் 1761ஆம் ஆண்டு மறைந்தார்.வின்சென்ட் வான் கோ.


🎭 1853ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவிய மேதை வின்சென்ட் வான் கோ நெதர்லாந்தில் பிறந்தார்.


🎭 இவர் 30 வயதிற்கு மேல் ஓவியம் வரைய ஆரம்பித்தாலும் வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 தூரிகை ஓவியங்களையும், 800 எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார்.


🎭 வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த இவர் தனது 37ஆம் வயதில் 1890ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.


🏢 இதுபோல பல உத்திகளை செயல்படுத்தி வெற்றி கண்டார். செல்ஃப் சர்வீஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் கிளைகள் திறந்தார். அமெரிக்காவின் நம்பர் ஒன் அங்காடியாக அது வளர்ந்தது.


🏢 1998ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை 20-ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. சிறந்த தொழிலதிபரான சாம் வால்டன் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

(31-மார்ச்)

ரெனே டெஸ்கார்ட்ஸ்.


✍ மெய்யியல் அறிஞர், கணிதமேதை, தத்துவ மேதை என போற்றப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் 1596ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.


✍ 1607ஆம் ஆண்டு இவர் லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.


✍ 1614ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின், 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் இளங்கலை பட்டமும், பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார். அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்.


✍ ஆனால், இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்பு 1626ஆம் ஆண்டு ரூல்ஸ் ஃபார் த டைரக்ஷன் ஆஃப் தி மைண்ட் என்ற நூலை எழுதினார். ஒளியியல்இ வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


✍ கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆய்வுமுறை, பகுப்பாய்வு வடிவியலை கண்டறிந்தார்.


✍ நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் 1650ஆம் ஆண்டு மறைந்தார்.ஜாக் ஜான்சன்.


👊 1878ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி உலக புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஜாக் ஜான்சன் பிறந்தார்.


👊 இவர் 1908ஆம் ஆண்டு உலகளவில் ஹெவி வெயிட் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கறுப்பினத்தவர் என்கிற பெருமையை பெற்றார். இவர் 1946ஆம் ஆண்டு ஜுன் 10ஆம் தேதி மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------


2 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

留言


bottom of page