ரஷ்யா - Russia (February 10)
ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமான போரிஸ் பாஸ்டர்நாக் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் பிறந்தார்.
இசைப் பயிற்சி பெற்ற பிறகு கலைத்துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. பிறகு 1910ஆம் ஆண்டு மாபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளின் கீழ் தத்துவம் பயின்றார்.
1914ஆம் ஆண்டு எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The Twins in the Clouds (1914), Over the Barriers (1917), My Sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மேலும் இவர் 'கடைசிக் கோடைகாலம்' (The Last Summer) மற்றும் இவரது சுயசரிதையான Safe Contact 1931) என்ற நாவலை எழுதினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

முதலாம் உலகப் போர்க் காலக்கட்டத்திலேயே இவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இவர் இப்புதினத்தை 1948ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். அதனை முடிக்க இவருக்கு சுமார் 10 வருடங்கள் ஆயிற்று.
1903ஆம் ஆண்டு வரையில் மருத்துவராகவும், கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இந்நூல் 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் பெற்றது.
கலை துறைக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்த போரிஸ் பாஸ்டர்நாக் 1960ஆம் ஆண்டு மறைந்தார்.
*************************************************************************************************************
புஷ்கின் நினைவு நாள் (1837)
சிறந்த ரஷ்ய மொழி கவிஞரான புஷ்கின் முழு பெயர் அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் என்பதாகும். இவர் சிறந்த நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியவர்.
