top of page

(01-08)November



(01-நவ) *ஆல்ஃபிரெட் வெஜினர்.* கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் 1880ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார். இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகாலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார். கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் 'கண்டப் பெயர்ச்சி' எனக் குறிப்பிடப்பட்டது. தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915ஆம் ஆண்டு வெளியிட்டார். கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார். வாழ்நாளின் இறுதிக்காலம் வரை பல கோட்பாடுகளை கண்டறிந்த இவர் 1930ஆம் ஆண்டு மறைந்தார். *வி.வி.எஸ்.லக்ஷ்மண்.* 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார். 1996ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தேர்வு கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் நூறு தேர்வு கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களில் லக்ஷ்மணும் ஒருவர் ஆவார். இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினையும் இவர் பெற்றுள்ளார். ----------------------------------------------------------------------- (02-நவ) *மகேந்திரலால் சர்க்கார்.* ⚑ சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் 1833ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார். ⚑ ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோமியோபதிக்கு எதிராக தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காகத் நான் முதலில் அந்த நூலைப் படித்தார். ஆனால், படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்து உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். ⚑ 1876ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக 'இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்' என்ற அறிவியல் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் முக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல அறிவியல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இந்த அமைப்பு ஒரு களமாகவும் அமைந்தது. டடஞ்சண்ணழ் பழம் ⚑ சிறந்த சமூக ஆர்வலரான மகேந்திரலால் சர்க்கார் 1904ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------------------------- (03-நவ) *அமர்த்தியா சென்.* நோபல் பரிசு பெற்றடடச்ச் பொருளாதார மேதை அமர்த்தியா சென் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் பிறந்தார். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம்இ,பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. சமூகத் தேர்வு (Social choice) என்ற: கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே. உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு வேண்டும். பஞ்சம்இ வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றார் அமர்த்தியா சென். பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி, 1998ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரம் தவிர, மனிதநேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி, பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. *அன்னபூர்ணா மஹாராணா.* விடுதலைப் போராட்ட வீராங்கனை மற்றும் பெண்கள் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியான அன்னபூர்ணா மஹாராணா 1917ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார். அபார நினைவாற்றல் கொண்ட இவர் 12 வயதிலேயே பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 14 வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துக்கொண்டு முதன்முதலாக சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு காந்திஜி நடத்திய நீண்ட பாதயாத்திரையில் கலந்துக்கொண்டார். வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துக்கொண்டு பலமுறை சிறை சென்றார். இவர் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்திலும் பங்கேற்று உள்ளார். இவரது இலக்கிய சேவைகளுக்காக சரள புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. உத்கல் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவர் உத்கல் ரத்னா எனப் போற்றப்பட்டார். அர்ப்பணிப்பு உணர்வுடனும், தேசபக்தியுடனும் சேவையாற்றிய அன்னபூர்ணா மஹாராணா 2012ஆம் ஆண்டு மறைந்தார். *ஏ.கே.செட்டியார்.* 1911ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே.செட்டியார், திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தார். இவர் தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கியத்திற்கு வித்திட்டவர். இவர் இதழாசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் முதன் முதலில் மகாத்மா காந்தியின் சரிதத்தை ஆவணப் படமாக தமிழில் எடுத்தவர். தமிழில் ஆய்வுக் கட்டுரைகளையும், அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கு குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கிய இவர் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------- (04-நவ) *ஜானகி அம்மாள்.* தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார். உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுவுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார். இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவகர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951ஆம் ஆண்டு நாடு திரும்பினார். மேலும் இந்தியத் தாவரவியல் அமைப்பின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் உருவாக்க வழிவகுத்தன. 1956ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 2000ஆம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது. இந்திய பாரம்பரிய தாவரவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் 1984ஆம் ஆண்டு மறைந்தார். *சகுந்தலா தேவி.* ✎ இந்திய பெண் கணித மேதையான சகுந்தலா தேவி 1929ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் பிறந்தார். ✎ இவர் ஜூன் 18, 1980ஆம் ஆண்டு லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,686,369,774,870 x 2,465,099,745,779 = 18,947,668,177,995,426,462,773,730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, 'கின்னஸ் புத்தகத்தில்' இடம் பெற்றுள்ளது. ✎ புக் ஆஃப் நம்பர்ஸ், பெர்ஃபெக்ட் மர்டர், ஃபிங்கரிங் : தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ், இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ், அஸ்ட்ராலஜ, ஃபார் யூ போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும். ✎ ஹ்யூமன் கம்ப்யூட்டர் அதாவது *'மனித-கணினி'* என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள் 2013ஆம் ஆண்டு மறைந்தார். *வாசுதேவ் பல்வந்த் பட்கே.* 1845ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை வாசுதேவ் பல்வந்த் பட்கே மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மராட்டிய மாவீரர் ஆவார். இளைஞர்களுக்கு மல்யுத்தம், வாள் சண்டை, கத்திச் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை பயிற்சி அளிக்க *'சுதந்திர ரகசிய சங்கம்'* என்ற சங்கத்தை நிறுவினார். இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படும் வாசுதேவ் பல்வந்த் பட்கே 1883ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------- (05-நவ) *சித்தரஞ்சன் தாஸ்.* தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கிய தலைவராக உயர்ந்தார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ். ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். 1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டு வந்தவர் இவர் தான். சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். இவர் 1925ஆம் ஆண்டு மறைந்தார். *பனாரசி தாஸ் குப்தா.* சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான பனாரசி தாஸ் குப்தா 1917ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஹரியானாவில் உள்ள ஜீந்த் மாவட்டத்தில், பிவானி என்ற இடத்தில் பிறந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜீந்த் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர், சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து அதை சாதித்தார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற பிவானி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1972ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார். மின்சாரம், பாசனம், விவசாயம், சுகாதாரம் ஆகிய பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ஹரியானா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஹரியானா மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது. இவர் பாபுஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு முன்னேற்றத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர். சமூக மேம்பாடு, கல்வி, இலக்கியம் ஆகிய பல களங்களில் முனைப்புடன் பாடுபட்ட பனாரசி தாஸ் குப்தா 2007ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------- (05-நவ) *உலக சுனாமி விழிப்புணர்வு தினம்.* சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாட, ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. [06/11, 2:36 am] +91 94434 95323: *இன்றைய நாள்.* (06-நவ) *சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்.* சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் நவம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விஷமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. --------------------------------------------------------- (06-நவ) *ஜேம்ஸ் நெய்ஸ்மித்.* கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார். இவர் கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். இவர் 1861ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும் பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார். 1891ஆம் ஆண்டு இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார். இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன. 1898ஆம் ஆண்டு நெய்ஸ்மித், கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், முதல் கூடைப்பந்து பயிற்றுநராகவும் பணியாற்றினார். பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு கொண்டுவரப்பட்டது. இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார். *அடோல்ப் சக்ஸ்.* 1814ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி சாக்சபோனைக் (இசைக்கருவி) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் என்பவர் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் புல்லாங்குழல் மற்றும் கிளாரினெட் வாசிப்பவர் ஆவார். சாக்சபோனை 1840ஆம் ஆண்டு கண்டுபிடித்து அதற்கு 1846ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றார். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிய இவர் 1894ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------- (07-நவ) *சர்.சி.வி.இராமன்.* உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச்சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார். ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படி சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறையாகும். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டும், அகில 'உலக லெனின் பரிசு' 1957ஆம் ஆண்டும் அளிக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் 1970ஆம் ஆண்டு மறைந்தார். *மேரி கியூரி.* ஒவ்வொரு பெண்ணிற்கும் உதாரணமாக திகழும் அறிவியல் மேதை மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி போலந்தின் வார்சா நகரில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்துள்ளார். பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை 'கியூரி தெரபி' என்று அழைத்தனர். இவருடைய சாதனைகள் கதிரியக்கம் பற்றிய ஓர் கோட்பாடு, கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள் ஆகியனவாகும். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை 1903, 1911ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். மருத்துவ துறையில் மேன்மையை ஏற்படுத்திய மேரி கியூரி 1934ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------ (08-நவ) *உலக நகர திட்டமிடல் தினம்.* உலக நகர திட்டமிடல் தினம் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria Della Paolera என்பவரால் நிறுவப்பட்டது. *சர்வதேச கதிரியக்கவியல் தினம்.* இன்றைய நவீன மருத்துவத்துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த தினத்தின் நினைவாக 2012ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ------------------------------------------------ (08-நவ) *வீரமாமுனிவர்.* மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழ் மொழியில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார். இவர் இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு மறைந்தார். *துவாரம் வெங்கடசாமி நாயுடு.* பிரபல வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு 1893ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவருக்கு வயலின் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை அறிந்த இவரின் அண்ணன், தானே முதல் குருவாகி தம்பிக்கு கற்றுக்கொடுத்தார். இவரது இசை ஞானத்தை வளர்க்க வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றை கேட்டும், பயிற்சி செய்தும் தன் இசை ஞானத்தை பட்டை தீட்டிக்கொண்டார் வெங்கடசாமி. சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம் 'கலா ப்ரபூர்ண' என்ற கௌரவ முனைவர் பட்டம் வழங்கி இவரை சிறப்பித்தது. இப்பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவரே. இவர் 1964ஆம் ஆண்டு மறைந்தார். *ஜாக் செயின்ட் கிளேர் கில்பி.* 1923ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஒருங்கிணை சுற்றுகள் (இன்டகிரேடட் சர்க்யூட் ஐ.சி.) உருவாக்கிய ஜாக் செயின்ட் கிளேர் கில்பி அமெரிக்காவின் மிஸோரி மாநிலம் ஜெபர்சன் நகரில் பிறந்தார். 2ஆம் உலக போரின் போது தொழில்நுட்ப பொறியாளராக இந்தியாவில் உள்ள மின்னணு நிலையத்தில் பணிபுரிந்தார். பல டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஒரு மின்சுற்றை அமைத்தார். இது ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று (இன்டகிரேடட் சர்க்யூட் ஐ.சி.) என பெயரிடப்பட்டது. இவரது இந்த கண்டுபிடிப்புக்காக 2000ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கணினி துறையின் இன்றைய அபார வளர்ச்சிக்கு இவரது 'ஐ.சி' மற்றும் 'மைக்ரோசிப்' கண்டுபிடிப்புகள் மிக முக்கிய காரணம் என்பதால், நவீன கணினியியலின் முக்கிய பங்களிப்பாளராகப் போற்றப்படுகிறார். டேவிட் சார்னோஃப் விருது, எலக்ட்ரானிக் பொறியியல் துறைக்கான பல்வேறு அமைப்புகளின் கௌரவ பதக்கங்கள், அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், தொழில்நுட்பத்துக்கான தேசிய பதக்கம் என பல்வேறு விருதுகளோடு, 9 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளது. 1980ஆம் ஆண்டு இவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அமெரிக்காவில் மின்னியல் துறையில் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோ எலக்ட்ரானிக் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜாக் செயின்ட் கிளேர் கில்பி தனது 82வது வயதில் (2005) மறைந்தார்.

9 views0 comments

Recent Posts

See All
bottom of page