(01-20)October
(01-அக்) *சர்வதேச முதியோர் தினம்.*


சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ஆம்தேதி 1991ஆம்ஆண்டுமுதல்கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ வசதிமற்றும் கல்விஅறிவால் மனிதனின் சராசரிஆயுட்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால்உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


வயதான மூத்த குடிமக்களுக்கு உரியஉரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும் என்பதைஉணர்த்தும் வகையிலேயே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.*உலகசைவதினம்.*


உலக சைவ தினம்அக்டோபர் 1ஆம்தேதிஉலகம்முழுவதும் கொண்டாடப்படுகிறது. வடஅமெரிக்கன் சைவகழகம் 1977ஆம்ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம்ஆண்டில் சர்வதேச சைவஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணைமற்றும் சைவவாழ்வைமேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.*தேசியதன்னார்வ இரத்தநன்கொடை தினம்.*


தேசிய தன்னார்வ இரத்தநன்கொடை தினம்அக்டோபர் 1ஆம்தேதிகடைபிடிக்கப்படுகிறது. ஒருநபரின்வாழ்வில் இரத்தத்தின் தேவைமற்றும் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் 1975ஆம்ஆண்டு The Indian Society of Blood Transfusion and Immunohaematology மூலம் இது முதன்முதலாக கொண்டாடப்பட்டது.


----------------------------------------------------------------

(01-அக்)

*சிவாஜிகணேசன்.*


புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர்சிவாஜிகணேசன் 1928ஆம்ஆண்டுஅக்டோபர் 1ஆம்தேதிவிழுப்புரத்தில் பிறந்தார். இவரதுஇயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.


தமிழ் திரையுலகில், பராசக்தி என்றதிரைப்படம் மூலமாகஅறிமுகமான சிவாஜிகணேசன்அவர்கள், 300 மேற்பட்ட தமிழ்திரைப்படங்களில் நடித்துள்ளார்.


அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னைஈடுபடுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷண் விருதுமற்றும் செவாலியர் விருதுபோன்றபலவிருதுகளை பெற்றுள்ளார். இவர் 2001ஆம்ஆண்டுமறைந்தார்.*அன்னிபெசண்ட்.*


பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னிபெசண்ட் 1847ஆம்ஆண்டுஅக்டோபர் 1ஆம்தேதிலண்டனில் பிறந்தார். அன்னிபெசண்ட் இந்தியவிடுதலை போராட்டத்திற்கு ஆதரவாககாமன்வீல்என்றவாரப்பத்திரிகையை 1913ஆம்ஆண்டுதுவங்கினார். 1917ஆம்ஆண்டில் கல்கத்தாவில் நடந்தமாநாட்டில் இந்தியகாங்கிரசின் தலைவராக ஓராண்டிற்கு தேர்வுசெய்யப்பட்டார்.


இந்திய விடுதலைக்காக பலபோராட்டங்களில் கலந்துகொண்டுசிறைக்கு சென்றஅன்னிபெசண்ட் 1933ஆம்ஆண்டுசெப்டம்பர் 20ஆம்தேதிசென்னையில் மறைந்தார்.*ராம்நாத் கோவிந்த்.*


1945ஆம்ஆண்டுஅக்டோபர் 1ஆம்தேதிமுன்னாள் குடியரசு தலைவர்ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவதுகுடியரசுத் தலைவராவர்.


இவர் 2015ஆம் ஆண்டுமுதல் 2017ஆம்ஆண்டுவரைபீகார்மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.


1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.


---------------------------------

(02-அக்) *காந்திஜெயந்தி.*


காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம்ஆண்டுஅக்டோபர் 2ஆம்தேதிபிறந்தார். இவர்சத்தியம், அகிம்சை என்னும் இரண்டுகொள்கைகளை கடைபிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என்றுஅறிவித்த ஐ.நா. சபை, காந்திபிறந்ததினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ஆம்ஆண்டுஅறிவித்தது.


இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ஆம்ஆண்டுதொடங்கப்பட்ட இந்தியதேசியகாங்கிரசில் இணைந்தார். 1930ஆம்ஆண்டுபிரிட்டிஷ் அரசுஉப்புக்கு வரிவிதித்தது. ஆனால், இதனைஏற்கமறுத்தகாந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரிவிதிப்பதா?' எனக்கருதி, சத்தியாகிரக முறையில் இதைஎதிர்க்க முடிவுசெய்தார்.


1942ஆம்ஆண்டுஆகஸ்ட் 8ஆம்தேதிஆங்கிலஅரசுக்கு எதிராக 'ஆகஸ்ட்புரட்சி' எனஅழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை காந்தியடிகள் தொடங்கி வைத்தார். காந்தியின் மனஉறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்டஆங்கிலஅரசுதிகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ஆம்ஆண்டுஆகஸ்ட் 15ஆம்நாள்இந்தியா சுதந்திரம் அடைந்தது. இவர் 1948ஆம்ஆண்டுஜனவரி 30ஆம்தேதிமறைந்தார்.*லால்பகதூர்சாஸ்திரி.*


இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி 1904ஆம்ஆண்டுஅக்டோபர் 2ஆம்தேதிஉத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள முகல்சராய் எனும்ஊரில்பிறந்தார்.


இவர் 1930ஆம் ஆண்டுஉப்புசத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனைபெற்றார். காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்கஅவர்தனதுபடிப்பை நிறுத்திக் கொண்டுநாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இவர் 1966ஆம்ஆண்டுஜனவரி 11ஆம்தேதிமறைந்தார்.*டி.வி.ராமசுப்பையர்.*


1908ஆம்ஆண்டுஅக்டோபர் 2ஆம்தேதிதினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார்.


இவர் தமிழர்களுக்காக ஒருபத்திரிக்கை வேண்டும் என்றஉந்துதலுடன் களமிறங்கினார். 'தினமலர்' பத்திரிக்கையை 1951ஆம்ஆண்டுதொடங்கினார்.


டி.வி.ஆர்எனஅறியப்படும் இவர்கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கு தமிழர்களின் குரலாகதனதுநாளிதழை ஒலிக்கச் செய்தவர்.


'தேசியமாமணி' பட்டம்உள்ளிட்ட பலகௌரவங்களைப் பெற்றவர்.


'டிவிஆர்' எனஅன்போடு அழைக்கப்பட்ட டி.வி.ராமசுப்பையர் 76வதுவயதில் (1984) மறைந்தார்.

------------------------------------

(03-அக்) *ஜான்கோரி.*


குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர்கண்டிஷன்) தந்தைஎன்றுபோற்றப்படும் ஜான்கோரி 1803ஆம்ஆண்டுஅக்டோபர் 3ஆம்தேதிஅமெரிக்காவின் தெற்குகரோலினா மாநிலம் சார்லஸ்டன் நகரில்பிறந்தார்.


சமுதாய சேவைகள் மற்றும் வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்பமண்டலநோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டார்.


மலேரியா, அறைகளை குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பலகட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரதுகட்டுரைகள் பிரபலஅறிவியல் இதழ்களில் வெளிவந்தன.


பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார்.


தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர்கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர்கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்றபெருமையைப் பெற்றார்.


கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான்கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 1855ஆம்ஆண்டுமறைந்தார்.


------------------------

(03-அக்) *உலககட்டிடக்கலை தினம்.*


கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூகஅறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒருபல்துறைக்களமாகும். சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005ஆம்ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம்முதல்திங்கட்கிழமையை (03.10.2022) உலக கட்டிடக்கலை தினமாகஅறிவித்து கொண்டாடி வருகிறது.*உலககுடியிருப்பு தினம்.*


மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சனை ஏற்படுகிறது. இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா. பொதுச்சபை 1985ஆம்ஆண்டில் ஒருதீர்மானத்தை கொண்டுவந்தது. இதன்படி அக்டோபர் மாதம்முதல்திங்கட்கிழமையை (03.10.2022) உலக குடியிருப்பு தினமாகஅறிவித்தது. நகரத்தை விரிவுப்படுத்துவது மட்டுமல்லாமல், நகரமக்களின் வாழ்க்கைத் தரத்தைஉயர்த்துவது இதன்நோக்கமாகும்.


------------------------------

(04-அக்) *திருப்பூர் குமரன்.*


இந்திய விடுதலைப் போராட்ட தியாகிதிருப்பூர் குமரன் 1904ஆம்ஆண்டுஅக்டோபர் 4ஆம்தேதிஈரோடுமாவட்டம் சென்னிமலையில் பிறந்தார்.


இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்தஅறப்போராட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் பலபோராட்டங்களுக்கு தலைமையேற்றார்.


கடந்த 1932ம் ஆண்டுஜனவரியில், காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாகவீரத்திற்கு பெயர்போனதமிழகமண்ணில் போராட்டம் நடந்தது. இதுவேகுமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.


காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தேமாதரம்...' என்றுமுழங்கிக் கொண்டேஅவரதுஇறுதிமூச்சுநின்றநாள், 1932ஆம்ஆண்டுஜனவரி 11ஆம்தேதியாகும்.*சுப்பிரமணிய சிவா.*


விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமானசுப்பிரமணிய சிவா 1884ஆம்ஆண்டுஅக்டோபர் 4ஆம்தேதிதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.


திருவனந்தபுரத்தில்இளைஞர்களை ஒன்றுதிரட்டி 'தர்மபரிபாலன சமாஜம்' என்றஅமைப்பை உருவாக்கினார்.


'ஞானபானு' என்றமாதஇதழைத்தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்' என்றவாரஇதழைத்தொடங்கினார். அதில்நாரதர்என்றபுனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்சசாதனைரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகசியம் உட்பட 20-க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரதுகவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்றபெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்றுபோற்றப்பட்ட சுப்பிரமணிய சிவாஉடல்நிலை பாதிக்கப்பட்டு 1925ஆம்ஆண்டுமறைந்தார்.


-------------------------------------------------------


(04-அக்) *உலகவனவிலங்குகள் தினம்.*


வனவிலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. வனவிலங்குகளுக்கு எதிரானகொடுமைகளை தடுப்பது பற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகஅக்டோபர் 4ஆம்தேதிஉலகவனவிலங்குகள் தினம்கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த வனஆர்வலர் பிரான்சிஸ் ஆப்அசிசிஎன்பவரின் நினைவுநாளைகுறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது.*உலகவிண்வெளி வாரம்.*


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல்அக்டோபர் 10ஆம்தேதிவரைஉலகவிண்வெளி வாரம்கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதமேம்பாட்டிற்காக தங்கள்பங்களிப்பை கொடுத்து வரும்உலகவிண்வெளி வாரகழகவாரியத்தின் பணிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக 1999ஆம்ஆண்டுஐ.நா பொதுச்சபையால் இத்தினம் அறிவிக்கப்பட்டது.


-------------------------------------------------

(05-அக்) *உலகஆசிரியர் தினம்.*


மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். வேறுஎந்தபணிக்கும் கிடைக்காத பெருமைஆசிரியர்களுக்கு உள்ளதுஎன்பதைஇந்தவாக்கியம் உணர்த்துகிறது. அத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றிசெலுத்தும் விதமாகஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம்தேதிஉலகஆசிரியர் தினம்அனுசரிக்கப்படுகிறது.


ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காகஆற்றிவரும்பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் 1994ஆம்ஆண்டுஇத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடுவித்தியாசப்படுகின்றது.*தேசியடால்பின் தினம்.*


அழிந்துவரும் டால்பின் இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைமக்கள்மத்தியில் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம்தேதிதேசியடால்பின் தினமாககடைபிடிக்கப்படுகிறது.


இந்தியாவில் அசாம், பீகார், ஜார்க்காண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கம்ஆகியமாநிலங்களில் உள்ளநீண்டஆழமானநதிப்பகுதிகளில் டால்பின்கள், நன்னீர் டால்பின் இனங்கள் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்தியநதிகளில் சுமார் 3,700 டால்பின்கள் உள்ளன.-----------------------------------

(05-அக்) *இராமலிங்க அடிகள்.*


சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்கபாடுபட்ட ஞானியுமான 'வள்ளலார்' இராமலிங்க அடிகள் 1823ஆம்ஆண்டுஅக்டோபர் 5ஆம்தேதிசிதம்பரம் அடுத்தமருதூரில் பிறந்தார்.


முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.


பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள்துன்புறுவதை கண்டுதுடித்தார். 'ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்' எனஎடுத்துக் கூறினார்.


'சமரசவேதசன்மார்க்க சங்கம்' என்றஅமைப்பை 1865ஆம்ஆண்டுஉருவாக்கினார். மக்கள்எளிதாகபின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். 'கடவுள்ஒருவரே, உயிர்பலி, புலால்உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிறஉயிர்களை தன்னுயிர் போல்கருதவேண்டும். பசித்தவர்களுக்கு உணவுஅளிப்பது உயர்வான புண்ணியம்' எனஉபதேசித்தார்.


'வாடியபயிரைகண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுகூறியஇராமலிங்க அடிகள் 1874ஆம்ஆண்டுமறைந்தார்.


----------------------

(06-அக்) *மேகநாதசாஃகா.*


இந்திய வானியற்பியலாளர் மேகநாதசாஃகா 1893ஆம்ஆண்டுஅக்டோபர் 6ஆம்தேதிடாக்காவில் பிறந்தார்.


இவர் சாஃகா அயனியாக்க சமன்பாடு என்றபுகழ்பெற்ற சமன்பாட்டை தருவித்தவர். இந்தசமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதிஇயல்புகளை பற்றிஅறியஉதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித்துறையில் இவர்அமைத்தஅடித்தளம் முக்கியமானது.


புகழ்பெற்ற இயற்பியலாளராகஅறியப்பட்டாலும் சாஃகாதீவிரசமுதாயநலநோக்குடைய சமூகஆர்வலராகவே சிறுவயதுமுதல்இருந்தார். இவர் 1956ஆம்ஆண்டுமறைந்தார்.*ரிச்சர்டு டீடிகைண்டு.*


✎ இயற்கணிதம், இயற்கணித எண்கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றிய ரிச்சர்டு டீடிகைண்டு 1831ஆம்ஆண்டுஅக்டோபர் 6ஆம்தேதிஜெர்மனியில் பிறந்தார்.


✎ இவர்கணக்கோட்பாட்டில் ஆற்றியபங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் 1916ஆம்ஆண்டுமறைந்தார்.


------------------------------------------------------------

(07-அக்) *துர்காவதி தேவி.*


⚑ சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1907ஆம்ஆண்டுஅக்டோபர் 7ஆம்தேதிஉத்தரப் பிரதேசமாநிலம் காஜியாபாத்தில் பிறந்தார்.


⚑ இந்தியவிடுதலைப் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பகவதிசரண்வோராஎன்பவரை திருமணம் செய்துகொண்டுஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் செயல்துடிப்பு மிக்கஉறுப்பினராக மாறினார்.


⚑ இருவரும் தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு செலவழித்தனர். லாலாலஜபதிராயின்மரணத்திற்கு பழிவாங்குவதற்கான திட்டம் தீட்டகட்சியின் கூட்டம் இவரதுதலைமையில் நடைபெற்றது.


⚑ பஞ்சாப் சிங்கத்தின் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலைசெய்யமுடிவுசெய்யப்பட்டது. முதலில் தானேஇந்தபணியைமேற்கொள்ள விரும்பினார். ஆனால், இறுதியில் பகத்சிங்மற்றும் சுகதேவிடம் இந்தபணிஒப்படைக்கப்பட்டது.


⚑ இந்தியஅக்னிஎனபோற்றப்பட்ட வீராங்கனையான துர்காவதி தேவி 1999ஆம்ஆண்டுமறைந்தார்.*நீல்ஸ்போர்.*


அணு அமைப்பு பற்றியஆராய்ச்சிகளில் முன்னோடியாக திகழ்ந்த நீல்ஸ்ஹென்றிக் டேவிட்போர் 1885ஆம்ஆண்டுஅக்டோபர் 7ஆம்தேதிடென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹேகனில் பிறந்தார்.


இவர் முதன்முதலாக 1913ஆம்ஆண்டுஎலக்ட்ரான்கள் அணுக்களின் உட்கருவை சுற்றிவட்டப்பாதையில் சுழலுகின்றன என்பதைகண்டறிந்தவர்.


அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கியவர். இதற்காக நீல்ஸ்போர் 1922ஆம்ஆண்டுஇயற்பியலுக்கான நோபல்பரிசினையும் பெற்றார்.


இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலறிஞராகவும், சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்ஸ்போர் 1962ஆம்ஆண்டுமறைந்தார்.*டெஸ்மண்ட் டூட்டு.*


1931ஆம்ஆண்டுஅக்டோபர் 7ஆம்தேதிதென்னாப்பிரிக்காவில் இனவெறிஆட்சியை எதிர்த்து போராடிய பாதிரியார் டெஸ்மண்ட் டூட்டுதென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.


தென்னாப்பிரிக்காவின்வெள்ளையினத்தவர்களின் சிறுபான்மை ஆட்சிக்கு எதிராகவன்முறையற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டமைக்காக 1984ஆம்ஆண்டுடெஸ்மண்ட் டூட்டுக்கு அமைதிக்கான நோபல்பரிசுவழங்கப்பட்டது.


தைரியம், கருணை, பிறர் நலனில்இறுதிவரை அக்கறைகொண்டவராக திகழ்ந்த இவர்தனது 90வதுவயதில்மறைந்தார்.


---------------

(08-அக்) *ஜி.என்.ராமச்சந்திரன்*


இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என்.ராமச்சந்திரன் 1922ஆம்ஆண்டுஅக்டோபர் 8ஆம்தேதிகேரளமாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார்.


1952ஆம்ஆண்டுசென்னைபல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைதலைவராக நியமிக்கப்பட்டார். இயற்பியல் துறையின் கீழ்கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்றபுதியதுறையைநவீனஆய்வுவசதிகளுடன் சர்வதேச தரத்துடன் உருவாக்கினார். இதுநாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகதிகழ்கிறது.


மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றியதசைநார் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (Triple-Elical Model for Structure of Collegen) என்ற இவரதுகண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியது.


இந்திய இயற்பியல் துறையின் சாந்திஸ்வரூப் பட்நாகர் விருது, லண்டன்ராயல்சொசைட்டியின் ஃபெலோஆஃப்விருது, கிரிஸ்டலோகிராஃபி துறையில் இவர்ஆற்றியபணிக்காக இவால்டு விருதுபோன்றபலவிருதுகளைப் பெற்றுள்ளார். அனைவராலும் விரும்பப்படும் மரியாதைக்குரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜி.என்.ராமச்சந்திரன் 2001ஆம்ஆண்டுமறைந்தார்.


*பா.ராகவன்.*


1971ஆம் ஆண்டுஅக்டோபர் 8ஆம்தேதிதமிழகஎழுத்தாளர் பா.ராகவன் பிறந்தார்.


புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.


1990ஆம்ஆண்டுகி.கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்தகணையாழி மாதஇதழில்இவரதுசிறுகதை ஒன்றுபிரசுரமானது.


1992ஆம்ஆண்டுமுதல் 2000ஆம்ஆண்டுவரைகல்கிவாரஇதழில்துணைஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


பத்து நாவல்களும், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.


சிறந்த நாவலாசிரியர் விருதுஇ இலக்கியப்பீடம் சிறந்தநாவலாசிரியர் விருது, பாரதியபாஷாபரிஷத்போன்றவிருதுகளை பெற்றுள்ளார்.


-------------

(09-அக்) *எம்.பக்தவத்சலம்.*


தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம்தேதிபிறந்தார்.


விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டுஎண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963ஆம்ஆண்டுதமிழகமுதல்வராகப் பொறுப்பேற்ற பின்தமதுநிர்வாகத் திறனைதிறம்பட வெளிப்படுத்தினார்.


இந்துசமய அறநிலையத்துறையின்திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்விடுதிகள் போன்றசமுதாயநலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்றசட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.


1960ஆம்ஆண்டுசோவியத் நாட்டின் அழைப்பை ஏற்றுஅந்நாட்டிற்கு சென்றுவந்தஇவர், இன்னும் இருஐந்தாண்டு திட்டங்களை நாம்நிறைவேற்றி விட்டால் நாமும்அவர்களது நிலையைஅடைந்துவிடலாம் என்றுஅப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.


இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்எம்.பக்தவத்சலம் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.*கோபபந்து தாஸ்.*


'ஒடிசாவின் மாணிக்கம்' (உத்கலமணி) என்றுபோற்றப்பட்ட கோபபந்து தாஸ் 1877ஆம்ஆண்டுஅக்டோபர் 9ஆம்தேதிஒடிசாமாநிலம் பூரிஅருகேஉள்ளசுவாண்டோ கிராமத்தில் பிறந்தார்.


இவர், 'குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடுமுன்னேற தொழிற்கல்வியே முக்கியம்' என்றுவலியுறுத்தினார்.


மனித குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன்வாழ்க்கையை அர்ப்பணித்த கோபபந்து தாஸ் 1928ஆம்ஆண்டுமறைந்தார்.*இம்மானுவேல் சேகரன்.*


1924ஆம்ஆண்டுஅக்டோபர் 9ஆம்தேதிஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒருதமிழகஅரசியல் தலைவர்இம்மானுவேல் சேகரன்பிறந்தார்.


ஆங்கிலம், இந்தி, உருசிய மொழிஉட்படஏழுமொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.


1943ஆம்ஆண்டுஅவர்இந்தியஇராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார்.


'ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்' என்றஅமைப்பைத் தொடங்கினார்.


வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார்.


இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்கு எதிராகவும் மாநாட்டை நடத்திய இவர் 1957ஆம்ஆண்டுசெப்டம்பர் 11ஆம்தேதிமறைந்தார்.


இவர்களின் நினைவாக இந்திய அஞ்சல் துறை 2010ஆம்ஆண்டுஅக்டோபர் 9ஆம்தேதிஅன்றுஅஞ்சல்தலைவெளியிட்டு கௌரவித்தது.


-------------------------

(10-அக்) *தேசியதபால்தினம்.*


இந்தியாவில் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 15ஆம்தேதிவரைதேசியதபால்வாரமாககொண்டாடப்படுகிறது. இதன்நோக்கம் இந்தியஅஞ்சல்துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால்சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ளவழிவகைசெய்வதே ஆகும்.*உலகமனநலதினம்.*


உலக மனநல மையம் (World Mental Health Federation) சார்பில் 1992ஆம்ஆண்டுமுதல்ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம்தேதிஉலகமனநலதினமாககடைபிடிக்கப்படுகிறது. மனிதனின் மனஆரோக்கியம் மற்றும் உலகநல்லெண்ணத்திற்காகவே உலகமனநலதினம்கொண்டாடப்படுகிறது.*உலகமரணதண்டனைஎதிர்ப்பு தினம்.*


குற்றம் புரிந்தவர்களுக்குஅளிக்கப்படும் தண்டனைகளில் மிககொடுமையான தண்டனைமரணதண்டனையாகும். பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனைஇல்லை. தற்போது மரணதண்டனையைக் கொண்டுள்ள நாடுகளும் அதைகைவிடவேண்டும் என்றநோக்கத்தில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


2002ஆம்ஆண்டுமே 13ஆம்தேதிரோமில்கூடியஎன்.ஜி.ஓ.க்கள்கூட்டத்தில் மரணதண்டனையை ரத்துசெய்யவும், மரணதண்டனைஎதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003ஆம்ஆண்டுஅக்டோபர் 10ஆம்தேதிமரணதண்டனைஎதிர்ப்பு தினமாகஅறிவிக்கப்பட்டது.


---------------------------------

(11-அக்) *சாமுவேல் வேதநாயகம் பிள்ளை.*


புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ஆம்ஆண்டுஅக்டோபர் 11ஆம்தேதிதிருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்தார்.


மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளைஎன்றேஅழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொதுநீதிகள், பெண்கல்வி, ஒற்றுமை உணர்வு, புதியசிந்தனைகள், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவைஇவரதுகவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.


தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது தன்சொத்துக்கள் அனைத்தையும் தானமாகவழங்கினார். தமிழின் முதல்புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூகசீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1889ஆம்ஆண்டுமறைந்தார்.*ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ்.*


தற்காலப் பேரண்டவியல் கருத்துக்களுக்குமுன்னோடியாக அரியசிந்தனையை எழுப்பிய ஜெர்மானிய மருத்துவர், வானவியலாளர் ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் 1758ஆம்ஆண்டுஅக்டோபர் 11ஆம்தேதிபிறந்தார்.


வால் நட்சத்திரம் மற்றும் வால்நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை கணிக்கும்முறையை கண்டறிந்தவர். சிறுகோள் பாறைகளான பல்லாஸ், வெஸ்டாஆகியவற்றை கண்டறிந்தவர். வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் 1840ஆம்ஆண்டுமறைந்தார்.


(12-அக்) *உலகஆர்த்ரிடிஸ் தினம்.*


1996ஆம்ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம்தேதியைசர்வதேச மூட்டுஅழற்சிநோய்தினம் (அ) உலகஆர்த்ரிடிஸ் தினமாககடைபிடிக்கப்படுகிறது.


இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றியவிழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.


நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூகவலைதளங்களின் மூலம்பராமரிப்பாளர்களுக்கு தகவல்தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.


---------------

(12-அக்)

*எல்மர்அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி.*


கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (Gyrocompass) கண்டறிந்த எல்மர்அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம்ஆண்டுஅக்டோபர் 12ஆம்தேதிஅமெரிக்காவில் பிறந்தார்.


இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.


அமெரிக்க கண்டுபிடிப்பாளரானஎல்மர்அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம்ஆண்டுநியூயார்க்கில் மறைந்தார்.*கிருஷ்ண குமார்பிர்லா.*


1918ஆம்ஆண்டுஅக்டோபர் 12ஆம்தேதிஇந்தியதொழிலதிபர் கிருஷ்ண குமார்பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார்.


இவர் இந்துஸ்தான் டைம்ஸ்ஆங்கிலநாளிதழ் மற்றும் பல்வேறு பிர்லாகுழுமநிறுவனங்களின் தலைவராக திகழ்ந்தவர்.


1997ஆம்ஆண்டுஇவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்வழங்கிக் கௌரவித்தது. 1997ஆம்ஆண்டுகல்கத்தா ஷெரீப்ஆகபதவிவகித்தார்.


18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ராஜ்யசபைஉறுப்பினராக பதவிவகித்தஇவர் 2008ஆம்ஆண்டுஆகஸ்ட் 30ஆம்தேதிமறைந்தார்.


-------------------------------

(13-அக்)

*மார்கரெட் ஹில்டாதாட்சர்.*


இங்கிலாந்தின்முதல்பெண்பிரதமரான மார்கரெட் ஹில்டாதாட்சர் 1925ஆம்ஆண்டுஅக்டோபர் 13ஆம்தேதிஇங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ளகிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.


இவர் இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம்பொறுப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979ஆம்ஆண்டுமுதல் 1990ஆம்ஆண்டுவரைதொடர்ச்சியாக பணியாற்றினார். இவர்மூன்றுமுறைதொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி' எனஅழைக்கப்பட்டார். இவரால்செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்' எனஅழைக்கப்பட்டது. இவர் 2013ஆம்ஆண்டுமறைந்தார்.


------------------------------------------------

(14-அக்)

*உலகத்தரநிர்ணயதினம்.*


உலகத் தர நிர்ணயதினம் (World Standard Day) என்பதுஆண்டுதோறும் அக்டோபர் 14ஆம்தேதிஉலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகில் மனிதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம்மற்றும் தரநிர்ணயம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு புகுத்தவே சர்வதேச தரநிர்ணயநிறுவனம் IEC, ISO மற்றும் ITU அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1970ஆம்ஆண்டிலிருந்து அக்டோபர் 14ஆம்தேதியைஉலகத்தரநிர்ணயதினமாகஅனுசரித்து வருகின்றன.*உலகமுட்டைதினம்.*


முட்டையின் முக்கியத்துவத்தைஉணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14), உலகமுட்டைதினமாக 1996-லிருந்து கொண்டாடப்படுகிறது.


முட்டையின் நன்மைகளை பரவலாக தெரியப்படுத்துவதற்காகவும், முட்டையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இதுகொண்டாடப்படுகிறது.


--------------------------------------------------------------

(14-அக்)

*லாலாஹர்தயாள்.*


விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த படைப்பாளியுமான லாலாஹர்தயாள் 1884ஆம்ஆண்டுஅக்டோபர் 14ஆம்தேதிடெல்லியில் பிறந்தார்.


அமெரிக்கா சென்ற இவர் சிலருடன் இணைந்து 'கதர்' (Ghadar) என்றபத்திரிக்கையை தொடங்கினார். மேலும்இவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க பசிபிக் பிராந்திய ஹிந்த்கழகம்என்றகட்சியைத் தொடங்கினார்.


இந்தியாவில் ஆங்கில அரசு செய்துவந்தகொடுமைகளை இப்பத்திரிக்கை உலகுக்கு வெளிப்படுத்தியது. உலகின்கவனம்இந்தியா பக்கம்திரும்பியது. இந்தியா விடுதலை பெறஆயுதப்புரட்சிக்கான முனைப்புகளை மேற்கொண்டார்.


பல்வேறு நாடுகளுக்குச்சென்றுஇந்தியவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவுதிரட்டிய லாலாஹர்தயாள், 1939ஆம்ஆண்டுமறைந்தார்.*முதலாம் பகதூர்சா.*


1643ஆம்ஆண்டுஅக்டோபர் 14ஆம்தேதிமுகலாயப் பேரரசர் முதலாம் பகதூர்சாபிறந்தார்.


1707ஆம்ஆண்டுமுதல் 1712ஆம்ஆண்டுவரைஇந்தியாவை ஆட்சிசெய்தமுகலாயப் பேரரசர் ஆவார்.


இவரது இயற்பெயர் குதுப்உத்-தீன் முகம்மத் முவாசம் ஆகும்.


இவர் 1712ஆம் ஆண்டுபிப்ரவரி 27ஆம்தேதிமறைந்தார்.


--------------------------------------------

(15-அக்)

*உலககைகழுவும் தினம்..*


உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம்தேதியைஉலககைகழுவும் நாளாககடைபிடிக்கிறது. இந்நாளில் கைகழுவும் முறைபற்றியும், அதனால்உண்டாகும் நன்மைபற்றியும் உலகம்முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.*உலகவெண்மைத்தடி தினம்.*


வெண்மைத்தடி பயன்படுத்தும்முறைஎன்பது 1931ஆம்ஆண்டிலிருந்து உலகம்முழுவதும் நடைமுறைக்கு வந்தது. உலகெங்கும் வாழும்இலட்சக்கணக்கான பார்வையற்ற மக்களுக்கு உதவும்நோக்கத்துடன் இத்தினம் அக்டோபர் 15ஆம்தேதிஅனுசரிக்கப்படுகிறது.*சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்.*


வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன்பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில் மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தெற்குஆசியநாடுகளில் 60 சதவீதபெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.


இவர்களை அங்கீகரிக்கும்விதத்தில் 2008ஆம்ஆண்டுமுதல்அக்டோபர் 15ஆம்தேதிசர்வதேச கிராமப்புற பெண்கள் தினமாககடைபிடிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர இத்தினம் வலியுறுத்துகிறது.-----------------------------------------------------


(15-அக்)

*ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.*


இந்திய ஏவுகணை நாயகன்டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1931ஆம்ஆண்டுஅக்டோபர் 15ஆம்தேதிதமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு சிறந்தமுன்னுதாரணமாக விளங்கிய இவரின்பிறந்தநாளைஐநாசபை 2010ல்உலகமாணவர்கள் தினமாகஅறிவித்தது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம்ஆண்டு SLV-lll ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி-l என்றதுணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமைசேர்த்தார்.


இவர் பத்மபூஷண் (1981), பத்மவிபூஷண் (1990), பாரத ரத்னா (1997) போன்றவிருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னிசிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகியபுத்தகங்கள் புகழ்பெற்றவைகள்.


இவர் 1999ஆம் ஆண்டுபொக்ரான் அணுஆயுதசோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம்ஆண்டுநடந்தகுடியரசுத் தலைவர்தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியாவின் 11வதுகுடியரசுத் தலைவராக 2007ஆம்ஆண்டுஜூலை 25ஆம்தேதிவரைபணியாற்றினார். இந்தியாவை அணுஆயுதவல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம்அவர்கள் 2015ஆம்ஆண்டுமறைந்தார்.*அக்பர்.*


1542ஆம்ஆண்டுஅக்டோபர் 15ஆம்தேதிமுகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற அக்பர்பிறந்தார்.


அக்பர் 1556ஆம் ஆண்டுமுதல் 1605ஆம்ஆண்டுவரைஆட்சிபுரிந்தார். அக்பரின் சக்தியும், செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. இதற்குமுக்கிய காரணம்முகலாயராணுவஇஅரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகும்.


இவர் கலைகள், ஓவியங்கள் மற்றும் கட்டிடக்கலைகள் எனஅனைத்திலும் இந்திய-பாரசீக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகஉருவாகஆரம்பித்தார்.


தொலைநோக்கு பார்வையுடைய பல சமூக சீர்திருத்தங்களையும் இவர்அறிமுகப்படுத்தினார். சதிதடைஇவிதவைமறுமணம், திருமணவயதுஉயர்த்தல் எனசீர்திருத்தங்களை செய்தஇவர் 1605ஆம்ஆண்டுஅக்டோபர் 27ஆம்தேதிமறைந்தார்.


--------------------------------------

(16-அக்)

*உலகஉணவுதினம்.*


உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம்தேதிஉலகஉணவுதினமாககடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம்ஆண்டுஐக்கியநாடுகள் சபையின் உணவுமற்றும் வேளாண்அமைப்பின் மூலம்இந்ததினம்அறிவிக்கப்பட்டது.


பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவுகிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் உலகஉணவுதினம்கடைபிடிக்கப்படுகிறது.*உலகமயக்கவியல் தினம்.*


1847ஆம்ஆண்டுஅக்டோபர் 16ஆம்தேதிமுதன்முறையாக ஈதர்பயன்படுத்தி அறுவைசிகிச்சை நடைபெற்றது. மருத்துவ உலகில்வரலாற்று முக்கியத்துவம் கொண்டஇந்தநிகழ்வை போற்றும் விதமாகஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம்தேதிஉலகமயக்கவியல் தினமாக (உலகஅனஸ்தீஸியா தினம் (அ) ஈதர்தினம்) கடைபிடிக்கப்படுகிறது.


--------------------

(16-அக்)

*நோவாவெப்ஸ்டர்.*


அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும், எழுத்திலக்கணத்திற்கும் காரணியான நோவாவெப்ஸ்டர் 1758ஆம்ஆண்டுஅக்டோபர் 16 ஆம்தேதிமேற்குஹார்ட்பர்டில் பிறந்தார். இவர்பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்கவேண்டும் என்பதைவலியுறுத்தினார்.


1783ஆம்ஆண்டுமுதல்அமெரிக்க ஆங்கிலசொல்லிலக்கணப் புத்தகத்தை வெளியிட்டார். அவரதுமொழிசீர்த்திருத்தமைப்பில் அமைந்தஆங்கிலஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றையஅமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.


1828ஆம்ஆண்டுமுதல்அமெரிக்க ஆங்கிலஅகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே. இவர் 1843ஆம்ஆண்டுமறைந்தார்.

--------------------------------------

(17-அக்)

*ரிச்சர்ட் மென்டர் ஜான்சன்.*


அமெரிக்காவின்ஒன்பதாவது துணைஜனாதிபதியான ரிச்சர்ட் ஜான்சன் 1780 ஆம்ஆண்டுஅக்டோபர் 17 ஆம்தேதிஅமெரிக்காவின் கென்டக்கியில் உள்ளலூயுவில் பிறந்தார்.


இவர் பன்னிரண்டாவது சட்டத்திருத்தத்தின் கீழ்அமெரிக்க செனட்மூலம்தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேதுணைத்தலைவர்ஆவார்.


இவர் 1806 ஆம் ஆண்டுஅமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இவர் 1850 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம்தேதிமறைந்தார்.*அனில்கும்ப்ளே.*


1970ஆம்ஆண்டுஅக்டோபர் 17ஆம்தேதிஇந்தியகிரிக்கெட் வீரர்அனில்கும்ப்ளே கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் பிறந்தார்.


இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவராக இருந்தார்.


இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலதுகைசுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இலக்குகள் எடுத்துள்ளார். இவர்ஜம்போஎன்றும் அழைக்கப்படுகிறார்.


1993ஆம்ஆண்டின் சிறந்ததுடுப்பாட்ட வீரராகஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்டார்.


1996ஆம்ஆண்டின் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். இவர்இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.


-------------------------------------------------

(18-அக்)

*உலகவேசெக்டொமி தினம்.*


உலக வேசெக்டொமி தினம்அக்டோபர் 18ஆம்தேதிகடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அளவானகுடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிறவிழிப்புணர்வை கொண்டுவர இத்தினம் 2013ஆம்ஆண்டுஅறிவிக்கப்பட்டது.------------------------------------------------


(19-அக்)

*நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கம் பிள்ளை.*


சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதிநாமக்கலை அடுத்தமோகனூரில் பிறந்தார்.


இவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர்போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழுமூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகுகாங்கிரஸில் இணைந்தார்.


இவர் திருச்சி மாவட்டகாங்கிரஸ் செயலாளர், கரூர்வட்டாரகாங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டாரகாங்கிரஸ் தலைவர்ஆகியபதவிகளை வகித்துள்ளார். உப்புசத்தியாகிரக தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர்இயற்றித் தந்ததுதான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்றபாடல்.


இலக்கியத்தின்அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தஇவர்மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடுவிடுதலை அடைந்தபிறகுதமிழகத்தின் முதல்அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர்பத்மபூஷண் விருதுபெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.


தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர்என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை 1972ஆம்ஆண்டுமறைந்தார்.*சுப்பிரமணியன் சந்திரசேகர்.*