top of page

(01-30)December


(01-திச) *உலக எய்ட்ஸ் தினம்.* உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது. 1640ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி போர்ச்சுகல் 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. 1906ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி உலகின் முதல் சினிமாவான "சினிமா ஓம்னியா பாட்டே" பாரிஸில் திறக்கப்பட்டது. 1929ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பிங்கோ விளையாட்டு எட்வின் எஸ் லோவ்-ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன் ராயல் கழகத்தின் எப்.ஆர்.எஸ் விருது பெற்ற இந்திய புவி இயற்பியலாளர் தேவேந்திரலால் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மறைந்தார். தமிழ்க் கவிஞர் பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் இன்குலாப் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மறைந்தார். (01-திச) *வை.மு.கோதைநாயகி.* தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளரும், விடுதலைப் போராட்ட வீராங்கனையுமான வை.மு.கோதைநாயகி 1901ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவரது முதல் நாடக நூல் இந்திர மோகனா, முதல் நாவல் வைதேகி ஆகும். இவர் பெண் விடுதலை நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் ஆகியவற்றை தன் நாவல்கள் மூலம் வலியுறுத்தினார். இவர் மகாத்மாஜி சேவா சங்கம் தொடங்கி ஏழைகள், ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு உதவிகளை செய்தார். நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி 1960ஆம் ஆண்டு 59வது வயதில் மறைந்தார். *மேதா பட்கர்.* ⚑ இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார். ⚑ இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு மக்கள் சார்பாக உரிமைக்குரல் கொடுத்த நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் இவர் நன்கு அறியப்பட்டார். ⚑ இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார் பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும், தொண்டும் இவருடைய கொள்கைகள் மற்றும் கருத்துக்களை செதுக்கின. ⚑ மேதா பட்கர் 1991ஆம் ஆண்டு Right Livelihood 1999ஆம் ஆண்டு எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human rights Aeard) தீனா நாத் மங்கேஷ்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award ), மகாத்மா பூலே பரிசு (Mahatha Phule), 1999ஆம் ஆண்டு கோல்டுமன் சுற்றுச்சூழல் பரிசு (Goldman Environment Prize ), பச்சை நாடா பரிசு (Green Ribbon Award ), மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defenders ) போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------------ (02-திச) *தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்.* தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழிற்சாலை பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இன்று உலக மாசு தடுப்பு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. *உலக கணினி கல்வி தினம்.* உலக கணினி கல்வி தினம் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிப்பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை‘ ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. *சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்.* சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 2006ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. 1982ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 1970ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது. 1991ஆம் ஆண்டு__ டிசம்பர் 2ஆம் தேதிசோவியத் யூனியனிடமிருந்து உக்ரேனின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் முதல் நாடுகளாயின கனடா மற்றும் போலந்து. நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவரான பாண்டித்துரைத் தேவர் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி மறைந்தார். 1973ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி தமிழ் மறவர் என்னும் அடைமொழியை கொண்டவர், தமிழ் ஆசிரியர், பகுத்தறிவுச் சிந்தனையுடையவர், போராளி என பன்முகத்தன்மை கொண்ட வை.பொன்னம்பலம் மறைந்தார் --------------------------------------------------------------------------------- (02-திச) *ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்.* மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். இவர் ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தவர். உணவுப் பழக்கங்களே இதற்கு காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் ஆகியோருடன் இணைந்து, இவர் குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தச்சோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதற்காக இவர்களுடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார். வாழ்நாள் முழுவதும் ரத்தச்சோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கிய ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------- (03-திச) *சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.* மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. *தேசிய வழக்கறிஞர்கள் தினம்.* புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் விடுதலைப் போராட்டக் களத்தில் முழு மூச்சாக இறங்கியவரும், முன்னாள் அரசியல் சாசன தலைவரும், குடியரசு தலைவருமான டாக்டர்.இராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்த நாளை நினைவுக்கூறும் வகையில் தேசிய வழக்கறிஞர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1973ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பயனியர்-10 விண்கலம் வியாழன் கிரகத்தின் முதல் நெருக்கமான படங்களை அனுப்பியது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது. 1979ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் மறைந்தார். பாரதிதாசனாரால் "என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்" என்று பாராட்டப்பெற்ற முடியரசன் 1998ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மறைந்தார். வழக்குரைஞராய் இருந்து தமிழறிஞர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உருது மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்த கோவைக்கிழார் 1969ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மறைந்தார். ராஜேஸ்வரி பத்பநாபன் என்ற இயற்பெயர் கொண்டவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதிய அநுத்தமா 2010ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------- (03-திச) *டாக்டர். இராஜேந்திர பிரசாத்.* இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ’ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற இராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது இராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் 1963ஆம் ஆண்டு மறைந்தார். *குதிராம் போஸ்.* இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம், ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தார். விடுதலை இயக்கத்தின் ஆசானாக விளங்கியவர்களின் சொற்பொழிவுகள் இவரை கவர்ந்ததால்இ விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். இவர் விடுதலை வீரர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட்டின், வாகனத்தின் மீது குண்டு வீசினார். ஆனால, எதிர்பாராத விதமாக அதில் பயணம் செய்த அவரது மனைவியும், மகளும் இறந்தனர். எனவே, ஆங்கில அரசு இவருக்கு தூக்குத்தண்டனை (1908) விதித்தது. அப்போது அவரின் வயது 18. கையில் பகவத்கீதையுடனும், வந்தே மாதரம் முழக்கத்துடனும் இந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. *ரோலண்ட் ஹில்.* நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்த ரோலண்ட் ஹில் 1879ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------- (04-திச) *தேசிய கடற்படை தினம்.* இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள நாடு. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'ஆபரேஷன் டிரிடென்ட்' என்ற பெயரில் டிசம்பர் 4ஆம் தேதி போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுப்படுத்தும் விதமாகவும்இ இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் கடற்படை சார்பில், டிசம்பர் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------------------ (04-திச) *ஆர்.வெங்கட்ராமன்.* சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு சம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். இவர் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்' (1942) ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். பின்பு இவர் லேபர் லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டு வந்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், தாமரைப் பட்டயம் போன்ற விருதுகளையும் மேலும் இவர் எழுதிய சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம் என்ற நூலுக்கு ரஷ்யாவின் 'சோவியத் லேண்ட்' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமன் 2009ஆம் ஆண்டு மறைந்தார். *ஐ.கே.குஜரால்.* இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திர குமார் குஜரால் 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு கொண்டார். இவர் 1971ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரவையிலிருந்து, திட்டத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்பு சோவியத் ஒன்றியத்திற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார். இவர் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து 1998ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இவர் 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி மறைந்தார். *சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன்.* ஒளிச்சிதறல் விளைவுகளில் சர்.சி.வி.இராமன் உடன் இணைந்து பணியாற்றிய சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் 1898ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். இராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927ஆம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை "நேச்சர்" (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதிய இவர் 1961ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மறைந்தார். *ரமேஷ் சந்திர மஜும்தார் .* வரலாற்றுத் துறைப் பேரராசிரியர், பன்னாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர், புகழ் பெற்ற இந்திய வரலாற்று அறிஞர் ரமேஷ் சந்திர மஜும்தார் 1888ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். இவர் முதலில் டாக்கா அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக தனது கல்விப் பணியை துவங்கினார். பின்பு பண்டைய இந்திய வரலாற்றில் அதிகமாக அய்வு செய்தவர். தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஆய்வு நோக்கில் பயணம் செய்து பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதினார். இவர் இறுதியாக எழுதிய இந்திய மக்களின் வரலாறும் பண்பாடும் எனும் நூல் 1977ஆம் ஆண்டு வெளியானது. இந்தியவியல் கல்லூரியின் நிறுவன முதல்வராக பதவி வகித்த ரமேஷ் சந்திர மஜும்தார் 1980ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி மறைந்தார். *நீலகண்ட பிரம்மச்சாரி .* இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில் 20,000 போராளிகளை ஒன்று திரட்டிப் புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடிய நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். நீலகண்ட பிரம்மச்சாரிக்கு சிறை வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டதால் 1931ஆம் ஆண்டு துறவறம் சென்றார். பின்பு டிசம்பர் 1933ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் நந்தி கிராமம் அருகே சென்னகிரியில் ஓம்கார் எனும் பெயரில் ஆசிரமம் அமைத்தார். அமைதியை தேடி கொண்டிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி தனது 1978ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------------------- (05-திச) *சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்.* சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. *உலக மண் வள தினம்.* உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தர் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி 1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். தென்னாப்பிரிக்காவின் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------- (05-திச) *வால்ட் டிஸ்னி.*. உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி 1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் பிறந்தார். இவர் மிக சிறந்த காட்டூன் ஓவியர். இவர் தன்னுடைய பணியார்களும் சேர்ந்து உருவாக்கிய கற்பனை தான் மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றைகளாகும். வால்ட் டிஸ்னி திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். மேலும் இவர் வணிக நோக்குடைய பூங்கா மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனராக இருந்தார். இவர் ஐம்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமிக்கப்பட்டு, இருபத்திரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலக சாதனையாகும். மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் செய்யப்பட்ட வால்ட் டிஸ்னி 1966ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------- (06-திச) *மாக்ஸ் முல்லர்.* பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அரபு, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்திய புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும். ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று. இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார். இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். *'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்'* என்று போற்றிய இவர் 1900ஆம் ஆண்டு மறைந்தார். *சாவித்திரி.* புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாவித்திரி 1936ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். இந்திய அரசு அவரது நினைவாக 2011ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது. கலைமாமணி விருது பெற்ற சாவித்திரி 1981ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மறைந்தார். *ஆர்வி.* தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர், இதழாளர், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்ட ஆர்வி 1918ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். இவர் 22 ஆண்டுகள் கண்ணன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1956ஆம் ஆண்டு கல்கியை தலைவராகக் கொண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக முழுமுயற்சி எடுத்தார். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம் அமைத்து கூட்டுறவு முறையில் நூல்களை வெளியிட்டார். பிற்காலத்தைய பொதுவாசிப்புக்குரிய எழுத்தாளர்களான பாலகுமாரன் போன்றவர்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்வி 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மறைந்தார். *ரவீந்திர ஜடேஜா.* இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா 1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். பன்முக வீரரான இவர் இடதுகை மட்டையாளராகவும், இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் அறியப்படுகிறது. 2009ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International) போட்டியில் அறிமுகமானார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். *ருத்ர பிரதாப் சிங்.* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருத்ர பிரதாப் சிங் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International) மற்றும் டேஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் செப்டம்பர் 2018ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். *ஜஸ்பிரிட் பும்ரா.* இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா 1993ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International), டேஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) பன்னாட்டு இருபது20 (WT20I) ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 28 மட்டையாளர்களை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் புரிந்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ---------------------------------------------------------------------------------------------- (07-திச) *கொடி நாள் (இந்தியா).* இந்தியாவில் கொடி நாள் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். இத்தினத்தை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் 1949ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கின்றன. *சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்.* சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்காக ஒரு அமைப்பு 1944ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்துள்ளது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கலிலியோ விண்கலம் நிலவின் வட துருவத்தை (பீரி க்ரேட்டர்) கடந்தது. 1995ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு விண்கலமான கலிலியோ வியாழனை சுற்றி வந்தது. 1972ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அப்பல்லோ திட்டத்தின் கடைசி விண்கலம் அப்பல்லோ 17 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------- (07-திச) *ஜெரார்டு குயூப்பர்.* வானியல் அறிஞர் ஜெரார்டு குயூப்பர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஹாலந்தில் உள்ள ஹெரன்காஸ்பெல் கிராமத்தில் பிறந்தார். இவர் செவ்வாய் கிரகம், சூரியக் குடும்பம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களின் துணைக் கோள்களான மிரான்டா, நீரிட் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதையும், சனிக்கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கண்டறிந்தவர். நெப்டியூனுக்கு தொலைவில் இவர் கண்டறிந்த குறுங்கோள்கள், இவரது பெயரால் 'குயூப்பர் பெல்ட்' எனக் குறிப்பிடப்படுகிறது. நவீன கோள் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட ஜெரார்டு குயூப்பர் 1973ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------ (08-திச) *நிருபமா வைத்தியநாதன்.* நிருபமா வைத்தியநாதன். கோவையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் டிசம்பர் 8, 1976-ல் , இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்தார் . 1995 தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார். *பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்.* சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசண்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சிமிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். நாட்டின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவரான பாலகிருஷ்ண சர்மா நவீன் 1960ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------- (09-திச) *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.* ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய சட்டசபை, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.வில் இணைந்தது. 1961ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது. 1937ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கலங்கரை விளக்கை உருவாக்கிய நில்ஸ் குஸ்டாப் டேலன் (Nils Gustaf Talen) மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------- (09-திச) *வெ.தட்சிணாமூர்த்தி.* கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். 1950ஆம் ஆண்டு வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசை அமைத்துள்ளார். இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது, சுவர்ணமால்யா யேசுதாசு விருது, கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார். *ஃபிரிட்ஸ் ஹேபர்.* 1868ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வேதிப் போர்முறையின் தந்தை ஃபிரிட்ஸ் ஹேபர் பிறந்தார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஃபிரிட்ஸ் ஹேபர் 1934ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மறைந்தார். *கிரேஸ் ஹாப்பர்.* அமெரிக்க கணினியியலாளர், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரலாகப் பணியாற்றிய கிரேஸ் ஹாப்பர் ஹாப்பர் 1906ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிறந்தார். இவர் கணினியில் பணியாற்றிய முதல் நிரலாளர்களில் ஒருவரும், கணினிகளுக்கு முதன்முதலாக நிரல்மொழிமாற்றி எழுதியவரும் ஆவார். கணிப்பொறியை அடிப்படையாகக் கொள்ளாத நிரலாக்கமொழி குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரது கருத்தாக்கத்தின் வழியிலேயே உயர்நிலை கணினி நிரலாக்க மொழிகளில் முதலாவதான கோபால் (நிரலாக்க மொழி) உருவாக்கப்பட்டது. "வியத்தகு கிரேஸ்" (Amezing Grace) எனக் குறிப்பிடப்படும் இவர் 1992ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மறைந்தார். *சுப.சதாசிவம்.* சித்த மருத்துவச் சுடர் எனும் பட்டம் பெற்ற சுப.சதாசிவம் 1930ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிறந்தார். இவர் மூலிகை மருந்துகள், விஞ்ஞான நோக்கில் நோய் தீர்க்கும் மூலிகைகள் உட்பட ஆறு நூல்களை எழுதியிருக்கிறார். இவர் தினமணி, தினமலர், தினகரன் உட்பட பல நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் சித்த மருத்துவக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "அனுபோக வைத்தியத் திரட்டு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) என்னும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ---------------------------------------------------------------------------------------------------------------- (10-திச) *உலக மனித உரிமைகள் தினம்.* உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.பொதுச்சபை 1948ஆம் ஆண்டு இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. மனிதர்களை சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி வேறுபடுத்தக்கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது *நோபல் பரிசு விழா.* இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து இப்பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதியில் நோபல் பரிசு விழா நடைபெறுகிறது. *சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்.* சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும் என விலங்குகளின் நலன் கருதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------ (10-திச) *மூதறிஞர் ராஜாஜி.* சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ராஜகோபாலாச்சாரி 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்ட ராஜாஜி 1972ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------ (11-திச) *சர்வதேச மலைகள் தினம்.* மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு இத்தினத்தை உருவாக்கியது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா.சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது. 1972ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அப்பல்லோ 17விண்கலம் சந்திரனில் இறங்கியது. கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------- (11-திச) *சுப்பிரமணிய பாரதியார்.* தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும், முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது. இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்திய மகாகவி 1921ஆம் ஆண்டு மறைந்தார். *விஸ்வநாதன் ஆனந்த்.* இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் 1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை என்ற இடத்தில் பிறந்தார். இவர் 1987ஆம் ஆண்டு உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அர்ஜுனா விருது(1985), பத்ம ஸ்ரீ விருது(1987), தேசிய குடிமகன் விருது(1987), ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது(1991), புக் ஆஃப் தி இயர் விருது(1998), பத்ம பூஷண் விருது(2000), சதுரங்க ஆஸ்கார் விருது(ஆறுமுறை), பத்ம விபூஷண் விருது(2007) போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். *பிரணாப் முகர்ஜி.* முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். 1952-1964ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இவர், 1969ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-1984ஆம் ஆண்டு நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-1989ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். இவர் 2012ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் தேதி வரை இந்தியாவின் குடியரசுத்தலைவராக பதவி வகித்துள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------- (12-திச) *சர்வதேச கன உலோக தினம்.* சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடங்கள், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. *சர்வதேச கரலாகட்டை தினம்.* டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும். --------------------------------------------------------------------------------------------- (12-திச) *ரஜினிகாந்த்.* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் 'சென்னை திரைப்படக் கல்லூரியில்' சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலமொழி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பத்ம பூஷண், வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். *சௌகார் ஜானகி.* பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார். 1949ஆம் ஆண்டு சௌகார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சௌகார் ஜானகி என்னும் பெயரை பெற்றார். இவர் நான் கண்ட சொர்க்கம், காவிய தலைவி, பாக்ய லட்சுமி, பல்லும் போன்ற பல மொழி படங்களில் வெற்றி பெற்று பிரபலமான நடிகையானார். இவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவில் இரண்டு முறை நடுவர் உறுப்பினராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சௌகார் ஜானகி, பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாநதி சாவித்திரி விருது, நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக அரசால் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது, தமிழக அரசின் புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது என பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். *யுவராஜ் சிங்.* புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார். ஒன் டே இன்டர்நேஷ்னல் (One Day International), டெஸ்ட் கிரிக்கெட் (Test Cricket), பன்னாட்டு இருபது (WT20) ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவருக்கு 2012ஆம் ஆண்டில் இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்ம ஸ்ரீ இவருக்கு வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி அன்று யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். --------------------------------------------------------------------------------------------------------------------- (13-திச) *லட்சுமி சந்த் ஜெயின்.* சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணரான லட்சுமி சந்த் ஜெயின் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மேலும் இந்தியத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்பட்டதற்கும், அதன் கொள்கைகளை கைவினைப் பொருட்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார். 1966ஆம் ஆண்டு நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருட்கள் நியாய விலையில் கிடைக்க வழிவகுத்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, ரமோன் மக்சேசே விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளருமான இவர் பாவர்ட்டி, என்விரான்மென்ட் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக இறுதிவரை பாடுபட்டு வந்த லட்சுமி சந்த் ஜெயின் 2010ஆம் ஆண்டு மறைந்தார். *இலாசந்திர ஜோஷி.* இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களை எழுதிய இலாசந்திர ஜோஷி 1903ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தார். இவருடைய முதல் கதை வெளிவந்தபோது இவருக்கு வயது 12. 1929ஆம் ஆண்டு வெளிவந்த 'கிருணாமயீ' நாவல் இவருக்கு இலக்கிய உலகில் ஓரளவு அறிமுகத்தை பெற்றுத் தந்தது. 1940ஆம் ஆண்டு வெளியான 'சன்யாசி' நாவலால் இவர் பெரும் புகழை பெற்றார். லஜ்ஜா, பர்தே கீ ராணி, முக்திபத், ஜிப்ஸி, சுபஹ், நிர்வாசித், பிரேத் அவுர் சாயா உள்ளிட்ட இவரது நாவல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும் இவர் தாகூரின் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இந்தி இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட இலாசந்திர ஜோஷி 1982ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- (14-திச) *விஜய் அமிர்தராஜ்.* டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் 1953ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தார். இவர் 1970ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். 1974ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை அடைந்த Indian Davis Cup குழுவுக்குத் தலைமை தாங்கினார். இவர் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பவராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஐ.நா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார். *பாலூர் துரைசாமி கண்ணப்பர்.* தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், உரையாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட பாலூர் துரைசாமி கண்ணப்பர் 1908ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தார். கண்ணப்பர் செய்த தமிழ்த் தொண்டினையும், சைவ தொண்டினையும் பாராட்டி செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளியில் 14 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின் 16 ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக இருந்தார். சென்னை பல்கலைக்கழக பாடத் திட்டக்குழுவில் பணியாற்றிய பாலூர் துரைசாமி கண்ணப்பர் 1971ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------- (14-திச) *இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்.* எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன. 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர். 1900ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார். 1959ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------ (15-திச) *சர்வதேச தேயிலை தினம்.* சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2005ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்தியாவின் *'இரும்பு மனிதர்'* என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் மறைந்தார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------ (15-திச) *ஹென்றி பெக்கெரல்.* கதிரியக்கத்தை கண்டுபிடித்த ஹென்றி பெக்கெரல் 1852ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். பெக்கெரல் 1896ஆம் ஆண்டு யுரேனியம் உப்பில் ஒளிர்வை (Phosphorescence) ஆராயும்போது கதிரியக்கத்தை கண்டுபிடித்தார். 1903ஆம் ஆண்டு மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து கதிரியக்கத்தை கண்டுபிடித்தமைக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கதிரியக்கத்தின் எஸ்.ஐ (S I)) அலகு முறை இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது. இவர் 1908ஆம் ஆண்டு மறைந்தார். *ஜீவ் மில்க்கா சிங்.* இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்க்கா சிங் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார். இவர் அமெரிக்காவில் அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் கோல்ஃப் அணியில் விளையாடி NCAA Division II Golf Championship பட்டத்தைப் பெற்றார். இவர் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். ------------------------------------------------------------------------------ (16-திச) *அடையார் கே.லட்சுமணன்.* இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியருமான அடையார் கே.லட்சுமணன் 1933ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். பரதநாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். இவர் பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1954ஆம் ஆண்டு இவர் பரதநாட்டியம், கர்நாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். மேலும் 1969ஆம் ஆண்டு பரதசூடாமணி அகாடமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி பல கலைஞர்களை உருவாக்கினார். இவர் பத்மஸ்ரீ விருது(1989), சங்கீத நாடக அகாடமி விருது(1991), கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவிய அடையார் கே.லட்சுமணன் 2014ஆம் ஆண்டு மறைந்தார். ---------------------------------------------------------------------------- (16-திச) *விஜய் திவாஸ் தினம்.* பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றி ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதியன்று 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்துவார்கள். --------------------------------------------------------------------------------------- (17-திச) *ஓய்வூதியர் தினம்.* இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1982ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம், அரசுத்துறைகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுக்கூறும் வகையில், இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் முதன்முதலில் 12 வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் (Wright Flyer) என்ற விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர். --------------------------------------------------------------------------------------- (17-திச) *வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி.* அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி 1908ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கொலராடோவிலுள்ள கிராண்ட் பள்ளத்தாக்கு (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்க கரிம காலக்கணிப்பு (Radio carbon Dating ) முறையின் வளர்ச்சியில் இவர் அளித்த பங்களிப்பு காரணமாக புகழ் பெற்றார். இவர் எலியட் க்ரெஸ்ஸான் பதக்கம் (1957), வில்லார்ட் கிப்ஸ் பரிசு (1958), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது (1959), வேதியியலுக்கான நோபல் பரிசு (1960) போன்ற பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி 1980ஆம் ஆண்டு மறைந்தார். *ஜோசப் ஹென்றி.* தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராக பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஜோசப் ஹென்றி 1797ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தார். இவரது பெயராலேயே மின்தூண்டலுக்கான சர்வதேச அலகு *"ஹென்றி அலகு"* என குறிக்கப்படுகிறது. மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கிய ஜோசப் ஹென்றி 1878ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------------------------------------------- (18-திச) *சர்வதேச இடம்பெயர்வோர் தினம்.* சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்காக பலரும் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்கள் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. ------------------------------------------------------------------------------------- (18-திச) *ஜெ.ஜெ.தாம்சன்.* நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்க குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தை செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. *நா.பார்த்தசாரதி.* தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார். 1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல நூல்களையும் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி, கம்பராமாயணத் தத்துவக் கடல் போன்ற பல விருதுகளைப் பெற்ற நா.பார்த்தசாரதி 1987ஆம் ஆண்டு மறைந்தார். *ஆறுமுக நாவலர்.* 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தமிழ் மொழி செழிக்க பாடுபட்ட ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் பிறந்தார். தமிழ் நூல்களை முதன் முறையாக செவ்வையான வகையில் பதிப்பித்தவர் இவர் தான். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றி பதித்தார். தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாக நின்ற இவர் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார். *எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்.* 1890ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பண்பலையைக் (FM) கண்டுபிடித்த எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்காவில் பிறந்தார். இவர் ஒரு அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்ற இவர் 1954ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------ (19-திச) *பிரதீபா பாட்டில்.* இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபா தேவிசிங் பாட்டில் அவர்கள் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார். இவர் ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவரது 27வது வயதில், ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, இவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்துள்ளார். 1967ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய இவர், பொது சுகாதாரத்துறையிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத்துறை போன்ற பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். இவர் 2004ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். பின்பு 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2012ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை இந்தியாவின் குடியரசு தலைவராகப் பதவி வகித்துள்ளார். *ருடால்ஃப் ஹெல்.* வீடியோ கேமரா ட்யூபை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இச்சாதனமே முன்னோடியாக திகழ்ந்தது. இவரது 'ஹெல் ரெக்கார்டர்' கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929ஆம் ஆண்டு சொந்த நிறுவனத்தை தொடங்கினார். இவர் 1932ஆம் ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரிண்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார். வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையின் ஆசானாக போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் 2002ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------- (20-திச) *ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்.* அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள் குறித்து பல நூல்களைப் படித்தார். பின்பு அலபாமா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1924ஆம் ஆண்டு மேரி க்யூரி அணுக்கருவை குறித்து சில செயல்முறை விளக்கங்களை கொடுத்ததை கண்டு கவரப்பட்ட இவர் அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். மேலும், இவர் மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்துள்ளார். கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கி இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார். இந்த ஜெனரேட்டருக்கு 1935ஆம் ஆண்டு உரிமம் பெற்றார். இது மருத்துவத்துறைக்கு உதவியாக இருந்தது. இரண்டாம் உலகப்போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்பு அணு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனங்களைக் கண்டுபிடித்த வான் டி கிராஃப் 1967ஆம் ஆண்டு மறைந்தார். [20/12/2022, 3:36 am] +91 94434 95323: *இன்றைய நாள்.* (20-திச) *சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.* சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியத்தை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களிடம் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. *முக்கிய நிகழ்வுகள்..* 1955ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கார்டிஃப், வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பெண் இயக்கத்திற்காக பாடுபட்ட சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர் சகோதரி சுபலட்சுமி மறைந்தார். --------------------------------------------------------------------------------------------- (21-திச) *யு.ஆர்.அனந்தமூர்த்தி.* தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தராகவும், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சாகித்ய அகாடமி தலைவராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய 'சம்ஸ்காரா', 'பவா', 'திவ்யா', 'அவஸ்தே', 'மௌனி' உள்ளிட்ட பல படைப்புகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதி வந்த கட்டுரைகள் 8 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இவர் 'தமிழ் தனித்துவம் வாய்ந்தது, தமிழரின் கலாச்சார வேர்கள் வலிமையானவை' என்பார். குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்று மொழியாக தாய்மொழி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியவர். இவர் 1994ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றார். ராஜ்யோத்சவா, பத்மபூஷண் விருது மற்றும் இலக்கிய சாதனைக்காக பல முக்கிய விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு இவரது 'பாரதிபுரா' படைப்பு 'தி இந்து' இலக்கியப் பரிசுக்காகவும், 2013ஆம் ஆண்டு இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி 2014ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------- (22-திச) *இராமானுஜன்.* இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருடைய வாழ்வில் A Synopsis of elementary Resuls in pure and applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்க தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார். இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (Magic Square), தொடர் பின்னம் (Continued Fractions) பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (Hiper Geometric Series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும். இராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன. 1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார். *ஸ்ரீ சாரதா தேவி.* இராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து, ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் பிறந்தார். தன்னுடைய கணவர் இராமகிருஷ்ணர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு தானும் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார். அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண மடம் 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனவே இவரை சங்க ஜனனி என்று போற்றினார், விவேகானந்தர். மொத்த உலகமும் உங்கள் சொந்தம் என்று உபதேசித்த அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 1920ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------------- (23-திச) *இந்திய விவசாயிகள் தினம்.* இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம்... விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். 1947ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுக்கூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.கக்கன் மறைந்தார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மறைந்தார். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------- (23-திச) *சரண் சிங்.* இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார். சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் Collectivist நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மேலும் இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண் சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மறைந்தார். [24/12/2022, 3:44 am] +91 94434 95323: *இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-திச) *பாண்டுரங்க சதாசிவ சானே.* சுதந்திரப் போராட்ட வீரரும், படைப்பாளியுமான பாண்டுரங்க சதாசிவ சானே 1899ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மும்பையிலுள்ள பால்கட் என்ற கிராமத்தில் பிறந்தார். அமால்னர் நகரில் உள்ள பிரதாப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர், 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கிய வேளையில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறந்த படைப்பாளியான இவர் மொத்தம் 135 நூல்களை எழுதியுள்ளார். இவரது ஸ்யாமசி ஆயீ என்ற படைப்பு இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை மராத்தியில் மொழிபெயர்த்துள்ளார். தேசத்தின் குரு என போற்றப்பட்ட பாண்டுரங்க சதாசிவ சானே 1950ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------- (24-திச) *தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்.* இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும், மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தார். 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பகுத்தறிவின் சிற்பி ஈ.வெ.இராமசாமி மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------- (25-திச) *அடல் பிஹாரி வாஜ்பாய்.* சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, லோகமான்ய திலகர் விருது, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது, பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------- (26-திச) *சார்லஸ் பாபேஜ்.* கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார். 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்து கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். இவர் நியமத் தொடருந்துப் பாதை (Railway Track) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் 1871ஆம் ஆண்டு மறைந்தார். *பாபா ஆம்தே.* 'பாபா ஆம்தே' என்று அன்புடன் அழைக்கப்பட்ட முரளிதர் தேவிதாஸ் ஆம்தே 1914ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார். இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களுக்காக வாதாடினார். காந்தி இவரை அபய சாதகன் (துணிவுடன் சத்தியத்தைத் தேடுபவன்) என்று அழைப்பார். இவர் தொழுநோயைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை மையத்தை தொடங்கினார். இவருக்கு அரசு சிறிது நிலம் வழங்கியது. அங்கே சிறு குடில்களை அமைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சி கற்றுக்கொடுத்து, அதில் கிடைத்த லாபத்தை வைத்து பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். 1988ஆம் ஆண்டு இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரையை தொடங்கினார். பத்ம விபூஷண், காந்தி அமைதிப் பரிசு போன்ற ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். தன் இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்டு வந்த பாபா ஆம்தே 2008ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------ (27-திச) *கெப்ளர்.* ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார். இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்' என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார். இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா', 'ஹார்மோனிஸ் முன்டி' ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துக்கள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன. கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா' என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்' என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 1630ஆம் ஆண்டு மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. *லூயி பாஸ்டர்.* நோய் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார். ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1895ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------- (28-திச) *ரத்தன் டாடா.* இந்திய டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டாடா ஸ்டீல்77, டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய டாடா“ நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு நானோ காரை வடிவமைத்தார். 2008ஆம் ஆண்டு, NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2008) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். *திருபாய் அம்பானி.* இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. இவர் மும்பையில் ஒரு துணி வியாபாரியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் புகழ் பெற்றார். 1982ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர் 1996இ 1998 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட (பவர்-50) ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும், இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும் தேர்வு செய்யப்பட்டார். ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, பங்குசந்தைகளின் முடிசூடா மன்னனாக விளங்கிய திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு மறைந்தார். *எஸ்.பாலசுப்ரமணியன்.* திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விகடன் குழுமத்தின் உரிமையாளருமான எஸ்.பாலசுப்ரமணியன் சென்னையில் 1936ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தார். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும். எஸ்.எஸ்.பாலன் என அறியப்படும் எஸ்.பாலசுப்ரமணியன் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சென்னையில் மாரடைப்பினால் மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------- (29-திச) *ராஜேஷ் கன்னா.* இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றி படங்களை தொடர்ந்து தந்து 'சூப்பர் ஸ்டார்" அந்தஸ்தைப் பெற்றார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை 'இந்தித் திரையுலகின் சிவாஜி" என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார். இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார். இந்தி திரையுலகின்” முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 2012ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. *குவெம்பு.* இந்திய எழுத்தாளர் கு.வெ.புட்டப்பா என்றுை பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும். இவர் பத்ம பூஷண், & பத்ம விபூஷண்,& சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் 1994ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------- (30-திச) *இரமண மகரிஷி.* தமிழகத்தை சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடராமன். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இரமண மகரிஷியின் நினைவாக திருவண்ணாமலையில் 'இரமண ஆசிரமம்' இயங்கி வருகிறது. இவரை பின்பற்றியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் ஆவார். இவர் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார். *பாய் மோகன் சிங்.* மருந்து நிறுவனமான ரான்பாக்ஸி லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனர் பாய் மோகன் சிங் 1917ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ராவல்பிண்டி மாவட்டத்தில் பிறந்தார். இந்தியாவின் மருந்துத் துறையின் அதிபதி என அழைக்கப்படுபவர். இவர் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பாய் மோகன் சிங் 2006ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி மறைந்தார். *பிரகாஷ் வீர் சாஸ்திரி.* தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் "என்னைவிட சிறந்த பேச்சாளர்" என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துகள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார். உத்தரப்பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார். ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியரான பிரகாஷ் வீர் சாஸ்திரி 1977ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார். -------------------------------------------------------------------------------------------------------- (31-திச) *ச.வே.சுப்பிரமணியன்.* செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிறந்தார். மூன்றாண்டுகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக வழிநடத்தினார். இவர் இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கை கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 1969ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 'தமிழூர்' என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்தார். இவரது வீட்டின் பெயரே 'தமிழகம்'. இவர் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, அவ்வை தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சாகித்ய அகாடமியின் 'பாஷா சம்மான்' விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர். Tholkappiyam is the first Universel Grammar in the Universe என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். 'தமிழ் ஞாயிறு', 'சாதனைச் செம்மல் ச.வே.சு.' ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியம், 2017ஆம் ஆண்டு மறைந்தார். *நாஞ்சில் நாடன்.* நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் 1947ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தார். இவரது படைப்புகளில் வட்டார பேச்சும், நகைச்சுவையும் வெளிப்படும். தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள் என்ற சிறுகதை தொகுதி மூலம் புகழ்பெற்றார். இவரின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள் என்பதை, சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கினார் இயக்குநர் தங்கர்பச்சான். இவர் இயல் விருது, சாகித்ய அகாடமி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

1 view0 comments

Recent Posts

See All

Comments


bottom of page