top of page

06-மார்ச் - MARCH 6

(06-மார்ச்)

*வாலண்டினா டெரெஷ்கோவா*

முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா 1937ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது.




இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார்.

வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார்.

இவர் 'ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்' என்ற பதக்கம், 'லெனின் விருது' மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.

**************************************************************************************************************

*மைக்கலாஞ்சலோ*


உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ, 1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி

இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார். தனது 23வது வயதில் (பியெட்டா) அன்னை மேரி, இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.




அதன்பிறகு, 17 அடி உயரத்தில் 'டேவிட்' சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது. இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மேலை மரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர், இசைக்கு பீத்தோவன் என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில், சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ 1564ஆம் ஆண்டு மறைந்தார்.


***********************************************************************************************************************

2 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page