1 July
(01-சூலை)
*மருத்துவர்கள் தினம்.*

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.
*டாக்டர் பி.சி.ராய்.*
மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார்.
பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார். இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல், சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார்.
இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது. இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.
*டயானா.*
1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வேல்ஸ் இளவரசி டயானா பிறந்தார்.
வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி டயானா.
இவர்களது பிள்ளைகள் இளவரசர் வில்லியம், ஹாரி ஆவார்.
பாரிசில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி டயானா சாலை விபத்தில் மறைந்தார்.
*ஏ.எம்.ராஜா.*
1929ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா பிறந்தார்.
1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி ஆவார்.
ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ஆம் ஆண்டு வந்த 'சோபா' பெரும் வெற்றிப்படம் ஆகும்.
1960ஆம் ஆண்டு வெளிவந்த 'பெல்லி காணுகா' அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.
*சந்திரசேகர்.*
1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான சந்திரசேகர் உத்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.
1955ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு அவர் மாநில பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் 'இளம் துருக்கியர்' என்றழைக்கக்கப்பட்டார்.
இவர் 1990ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி எட்டாவது இந்திய பிரதமர் ஆனார்.
சந்திரசேகர் பாராளுமன்ற மரபுகளை அனுசரித்து நடந்ததால் சிறந்த 1995 இல் பாராளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்று கெளரவிக்கப்பட்டார்.