top of page

1 June



(01-சூன்)

*மர்லின் மன்றோ.*

அமரநட்சத்திரம், ஹாலிவுட்டின் ராணி மர்லின் மன்றோ 1926ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நோர்மா ஜெனி மார்டென்சன்.

1950ஆம் ஆண்டு வெளிவந்த, அஸ்பால்ட் ஜங்கிள்(The Asphalt Jungle), டு நாட் பாதர் டு நாக் படங்கள்(Do not bother to Knock) இவருக்கு புகழை தேடித் தந்தன. இவர் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

ஒரு நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

*கர்ணம் மல்லேஸ்வரி.*

1975ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியுமான கர்ணம் மல்லேஸ்வரி பிறந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருதை வழங்கி கௌரவித்துள்ளது.


(01-சூன்)

*உலக பெற்றோர் தினம்.*

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம் செய்தது.

*உலக பால் தினம்.*

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பால் உற்பத்தியை பெருக்குதல், பால் உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துதல் தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.



0 views0 comments

Recent Posts

See All
bottom of page