top of page

11June-20June



(11-சூன்) *ராம் பிரசாத் பிஸ்மில்*

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார்.

இவர் சந்திரசேகர ஆசாத்இ பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 'மாத்ரிவேதி' என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.

மேலும், இவர் சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார்.

தனது சகாக்களுடன் இணைந்து காகோரி சதித் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

1925ஆம் ஆண்டு காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டுஇ 1927ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.


------------------------------------------------------------------------------------------------------------------------------

(12-சூன்) *உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்.*

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. எனவே, குழந்தை தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


(12-சூன்) *ஆன் ஃபிராங்க்.*

உலகப் புகழ்பெற்ற நாட்குறிப்பு நூலை எழுதிய ஆன் ஃபிராங்க் 1929ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

ஹிட்லர் ஆட்சியின்போது பல கொடுமைகள் நடந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் வசித்தது. இவருடைய பிறந்தநாளுக்கு இவரின் தந்தையான ஓட்டோ பிராங்க் ஒரு டைரியை பரிசளித்தார். அதற்கு நாவலில் வரும் 'கிட்டி' என்ற கதாபாத்திரத்தின் பெயரையே சூட்டி, அதில் நாட்குறிப்புகளை எழுதி வந்தார்.

தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்டங்கள் குறித்தும் அதில் எழுதினார். 1945ஆம் ஆண்டு குடும்பத்தினர் அனைவரும் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15வது வயதில் ஆன் ஃபிராங்க் மறைந்தார்.

அந்த டைரியை ஒரு பெண் அவளுடைய தந்தையிடம் ஒப்படைத்தார். அந்த நாட்குறிப்பில் 1942ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை பற்றிய பதிவுகள் இருந்தன. அதில் மரணத்துக்கு பின்பும் வாழ வேண்டும் என்று ஆன் ஃபிராங்க் எழுதியிருந்தார். தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய தந்தை அந்த டைரியை வெளியிட்டார்.

இதன் பதிப்பு பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் தன் டைரி மூலம் இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

*ஜார்ஜ் H.W. புஷ்.*

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் 1924ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.

1988ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி மறைந்தார்.

*பத்மினி.*

இந்திய நடிகை மற்றும் பரதநாட்டிய நடன கலைஞரான பத்மினி 1932ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

இவர் 17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குநர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவரை நடிக்க வைத்தார்.

இவர் சிறந்த நடிகை விருது, கலைமாமணி விருது, சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

(13-சூன்) *பான் கி மூன்.*

ஐ.நா.வின் 8வது பொதுச் செயலாளரான பான் கி மூன் 1944ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கொரியாவில் பிறந்தார்.

இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக 2007ஆம் ஆண்டு பதவியேற்றார். அடுத்தடுத்து இரண்டு முறை ஐ.நா. பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ள இவரின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிறைவடைந்தது.

தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்த இவர் கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

*ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்.*

கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 1831ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார்.

இவர் மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முதன்முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். மேலும் 1865ஆம் ஆண்டு மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டை விளக்குவதற்காக புள்ளியியல் முறையை உருவாக்கினார். இது Maxwell Boltzmann-Distribution எனக் குறிப்பிடப்படுகிறது.

இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், 1879ஆம் ஆண்டு மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

(14-சூன்) *கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்.*

இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.

இவர் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்தார். இர்வின் பாப்பருடன் இவர் இணைந்து 1909ஆம் ஆண்டு போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ (Polio Virus) கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1926ஆம் ஆண்டு அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது.

1927ஆம் ஆண்டு பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1943ஆம் ஆண்டு மறைந்தார்.

*சே குவேரா.*

கியூபாவின் விடுதலைக்காக போராடிய சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா 1928ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அர்ஜென்டினாவில் பிறந்தார்.

சே குவேரா தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955ஆம் ஆண்டு மெக்சிகோவில் சந்தித்தார்.1959ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா.

அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

இவர் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 09ஆம் தேதி மறைந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

(14-சூன்)

*உலக இரத்த தான தினம்.*

ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினம் (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

(15-சூன்)

*அண்ணா ஹசாரே.*

சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளை படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். இவர் பத்ம பூஷண், பத்மஸ்ரீ, மஹாவீர் விருது, சர்வதேச ஒருமைப்பாட்டு விருது, சிட் கில் நினைவு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

*இலட்சுமி மித்தல்.*

உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார்.

1969 ஆம் ஆண்டு புனித சேவியர் கல்லூரி கொல்கத்தா கல்லூரியில் இலட்சுமி மித்தல் பட்டம் பெற்றார்.

மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும், இரத்ததானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்ததானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------


(15-சூன்) *உலக காற்று தினம்.*

உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

*முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்.*

உலகில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மரியாதை கொடுக்கவும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஜூன் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்துள்ளது.


-------------------------------------------------------------------------------------------------------------------

(16-சூன்) *கருமுத்து தியாகராஜன்.*

கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம்வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

(17-சூன்)

*உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்.*

உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது.


இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்தது.


*லியாண்டர் பயஸ்.*

புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 1973ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி கோவாவில் பிறந்தார்.

இவருடைய தாயார் (ஜெனிபர் பயஸ்) இந்திய கூடைப்பந்து அணிக்கு தலைமை வகித்தவர். தந்தை (வெஸ் பயஸ்) 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர். மேலும், இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.

இவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன், சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன் போட்டி என அனைத்திலும் பட்டங்களை வென்றவர். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

*வீனஸ் வில்லியம்ஸ்.*

1980ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லின்வுட்டில் பிறந்தார்.

2000 மற்றும் 2001ஆம் ஆண்டில் விம்பிள்டன் பட்டமும், யு.எஸ்.ஓபன் பட்டமும் பெறுள்ளார்.

2000ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் ஒற்றையர் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------

(18-சூன்) *பி.கக்கன்.*

விடுதலைப் போராட்ட வீரர்இ தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்த பி.கக்கன் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.

*கோபுலு.*

பிரபல ஓவியர் கோபுலு 1924ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோபாலன்.

இவருக்கு இளம் வயதில் ஓவியத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஓவிய மேதை மாலியால் ஈர்க்கப்பட்டு அவரை சந்தித்து அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். 1941ஆம் ஆண்டு தீபாவளி மலருக்காக ராமர் பட்டாபிஷேகம் படத்தை வரைந்து வருமாறு மாலி கூறினார். அந்த ஓவியம் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு இவரது பெயரை கோபுலு என்று மாலி மாற்றினார்.

தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு போன்ற கதைகளின் கதாபாத்திரங்கள் இவரது கையில் உயிர்பெற்று வாசகர்களின் உள்ளத்தை கவர்ந்தவைகள். கலைமாமணி, எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.

பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்த சாதனையாளர் கோபுலு, 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------

(19-சூன்) *பிலைசு பாஸ்கல்.*

உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார்.

இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல் ஆராய்ச்சி நூலில் கூம்பு வெட்டுகளைப் (Essay on Conics) பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், பாஸ்கல் தேற்றம் என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

1642ஆம் ஆண்டு தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதற்கு உதவியாக, கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி தந்தார். மேலும், இவர் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார்.

நிகழ்தகவு கோட்பாடு, பாஸ்கல் விதி, பாய்ம இயக்கவியல் விதி ஆகியவற்றை கண்டறிந்தார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அழுத்தத்தின் SI அலகிற்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

தனது தன்னம்பிக்கையால் விடாமுயற்சியுடன் சாதனை படைத்த பிலைசு பாஸ்கல் 1662ஆம் ஆண்டு மறைந்தார்.

*சல்மான் ருஷ்டி.*

உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி 1947ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

1981ஆம் ஆண்டு வெளிவந்த இவரது 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' புதினம் உலகளவில் பிரபலமாகி, புக்கர் பரிசை வென்றது.

இவர் இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். 1988ஆம் ஆண்டு இவர் 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை வெளியிட்டார். இவருக்கு இலக்கிய சேவைகளுக்காக 2007ஆம் ஆண்டு (Knight Bachelor) என்ற 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

1945ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13வது இடத்தை 'தி டைம்ஸ்' நாளிதழ் வழங்கியது. 2005ஆம் ஆண்டு இவரது 'ஷாலிமார் தி கிளவுன்' நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க 'ஹட்ச் கிராஸ்வேர்டு புக்' விருது கிடைத்தது. --------------------------------------------------------------------------------------------------------------------------

(20-சூன்) *விக்ரம் சேத்.*

இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் 1952ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவர் தனது முதல் கவிதைத் தொகுப்பை மேப்பிங்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். இவர் 'ஃபிரம் ஹெவன் லேக்', 'தி கோல்டன் கேட்', 'எ சூட்டபிள் பாய்' உள்ளிட்ட நாவல்கள், 'பீஸ்ட்லி டேல்ஸ்', 'தி ஃப்ராக் அண்ட் தி நைட்டிங்கேல்' உள்ளிட்ட கவிதைகள், பயண நூல்கள் என பல துறைகளில் முத்திரை பதித்துள்ளார்.

தாமஸ் குக் பயண நூல் விருது, காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா), சாகித்ய அகாடமி (ஆங்கிலம்), ஐரிஷ் டைம்ஸ் இன்டர்நேஷனல் ஃபிக்ஷன் பரிசு, பத்மஸ்ரீ போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------


0 views0 comments

Recent Posts

See All
bottom of page