14-மார்ச்(MARCH 14)

(14-மார்ச்)

*ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*

20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு' பிறந்தது.

குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்' என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் 1955ஆம் ஆண்டு மறைந்தார்.

*************************************************************************************************************


*பை (π) தினம்*

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி π தினமாக கொண்டாடப்படுகிறது. இது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்க நாட்காட்டியின்படி 3ஃ14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் π-யைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த π-யின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் π தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.


****************************************************************************************************************

2 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த