2 June
*இளையராஜா.*

திரையுலகின் முடிசூடா மன்னன் 'இசைஞானி' இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா.
இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் 1976ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவருக்கு 'இளையராஜா' என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து 'பதினாறு வயதினிலே'இ 'பொண்ணு ஊருக்குப் புதுசு' ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
பத்ம பூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
*மணிரத்னம்.*
திரைப்படத்துறையில் ஒரு மாமேதையாக போற்றப்படும் மணிரத்னம் 1956ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்தவர். இவரின் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இவர் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
*தாமஸ் ஹார்டி.*
புதின எழுத்தாளர் மற்றும் கவிஞரான தாமஸ் ஹார்டி 1840ஆம் ஆண்டு ஜுன் 2ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் என்னும் நகரில் பிறந்தார்.
இவர் பள்ளிப்படிப்பை மட்டும் படித்தார். ஜான்ஹிக்சு என்னும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக்கலையை கற்றுக்கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களை படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார்.
இவருடைய த உட்லாண்டர்ஸ், ஏ சேஞ்சிடுமேன், ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட், டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி, த டைனாஸ்ட், ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ், மொமண்ட்ஸ் ஆஃப் விஷன் எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
1910ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்ட இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------