top of page

(20-30)September

(20-செப்) *மார்க்கண்டேய கட்சு.*


முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்தமார்க்கண்டேய கட்சு 1946ஆம்ஆண்டுசெப்டம்பர் 20ஆம்தேதிஉத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள லக்னோவில் பிறந்தார்.இவர் 1967ஆம்ஆண்டுஅலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப்படிப்பில் முதல்மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.

இவர் டெல்லி தேசியசட்டப்பல்கலைக்கழகம், லக்னோராம்மனோகர்லோகியாதேசியசட்டப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவப்பேராசிரியராக இருந்தார்.இவர்இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011-2014) இருந்தார்.



*ஜேம்ஸ்திவார்.*


வாக்கும் பிளாஸ்க்கை (Vaccum Flask) கண்டுபிடித்த ஜேம்ஸ்திவார் 1842ஆம்ஆண்டுசெப்டம்பர் 20ஆம்தேதிஸ்காட்லாந்தில் உள்ளகின்கார்டைன் எனும்கிராமத்தில் பிறந்தார்.


இவர் 1897ஆம் ஆண்டுஇரட்டைசுவர்கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும்சிலமாறுதல்களை செய்தபோது, குளிர்நிலையில் மட்டுமல்ல, வெப்பநிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதைகண்டறிந்தார்.


வெற்றிடத்தின்வழியாகவெப்பம் கதிராகவெளியேறி விடமுடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளிமுலாம்பூசி, அதில்சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். பிறகு, 'கார்டைட்' என்றவெடிப்பொருளை கண்டுபிடித்தார்.


இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவிதவாயுக்களை அந்தஇரண்டுசுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்துஉள்ளிருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறாதன்மையை சோதனைசெய்தார்.


கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான, விஞ்ஞான உலகமேபார்த்து வியந்தஜேம்ஸ்திவார், 1923ஆம்ஆண்டுமறைந்தார்.


------------------------------------------------------------------

(21-செப்) *உலகஅமைதிதினம்.*


உலக அமைதி தினம், ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம்ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம்தேதிகொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நாள் 1981ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும்மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. பிறகு 2002ஆம்ஆண்டுமுதல்செப்டம்பர் 21ஆம்தேதிகொண்டாடப்பட்டு வருகிறது.


இன்று உலகில் பலபகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இன்றுமட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனிதவாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதேஇதன்நோக்கம்.


*உலகஅல்சைமர் தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதி உலகஅல்சைமர் தினம்கடைபிடிக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களை சிதைத்து, ஞாபகசக்தியைக் குறைத்து, நம்மைநமக்கேமறக்கவைத்துவிடும் நோய்தான்அல்சைமர். இந்நோய் 65 வயதுதாண்டியவர்களை அதிகம்பாதிக்கிறது.


அல்சைமர் நோயை பற்றியும் அதனால்தொடர்புடைய முதுமைமறதியைபற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


(21-செப்) *தமிழ்ஒளி*


தமிழ் ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) புதுவையில் பிறந்ததமிழ்க் கவிஞர்ஆவார். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடைநாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப்பலஇயற்றியவர். திராவிடர் கழகத்தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராகவளர்ந்தவர். 'தலித்து' என்றுவழங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதியவேறுபாடுகளையும் சாடிகவிதைகள் எழுதினார்.



*ஹெச்.ஜி.வெல்ஸ்.*


வரலாறு, அரசியல், சமூகம்ஆகியஅனைத்து களங்களிலும் தனதுபடைப்புகளால், தனிமுத்திரை பதித்தஹெச்.ஜி.வெல்ஸ் 1866ஆம்ஆண்டுசெப்டம்பர் 21ஆம்தேதிஇங்கிலாந்து தலைநகர் லண்டன்அருகேஉள்ளப்ரூம்ளி நகரில்பிறந்தார்.


இவரது முதல் நாவலான 'திடைம்மெஷின்' 1895ஆம்ஆண்டுவெளிவந்து, மகத்தான வெற்றிபெற்றது. இதன்பின் இவர்இலக்கிய உலகில்பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.


இவர் தொடர்ந்து அறிவியல் புனைக்கதைகள் எழுதிவந்தார். 1920ஆம்ஆண்டுவெளிவந்த 'அவுட்லைன் ஆஃப்ஹிஸ்டிரி' புத்தகம் விற்பனையில் சாதனைபடைத்தது. 'திஐலண்ட்ஆஃப்டாக்டர் மாரோ', 'திஇன்விசிபிள் மேன்', 'திவார்ஆஃப்திவேர்ல்ட்ஸ்', 'திஷேப்ஆஃப்திங்ஸ்டுகம்' ஆகியநூல்கள் இவருக்கு பெயரையும், புகழையும் ஈட்டித் தந்தது.


வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம்எழுத்திற்காக தன்னைஅர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் 1946ஆம்ஆண்டுமறைந்தார்.


-----------------------------------------------------------


(22-செப்)*பி.பி.ஸ்ரீநிவாஸ்.*


பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவருமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1930ஆம்ஆண்டுசெப்டம்பர் 22ஆம்தேதிஆந்திரமாநிலத்தின் காக்கிநாடாவில் பிறந்தார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திஉட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.


இவர் கலைமாமணி, கன்னடராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்படஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.


தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில்நீங்காஇடம்பெற்ற பி.பி.ஸ்ரீநிவாஸ் 2013ஆம்ஆண்டுமறைந்தார்.



*மைக்கேல் ஃபாரடே.*


*'மின்சாரத்தின் தந்தை'* என்றுஅழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791ஆம்ஆண்டுசெப்டம்பர் 22ஆம்தேதிஇங்கிலாந்தில் பிறந்தார்.


காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகளின் மூலம்நிரூபித்த மேதைமைக்கேல் ஃபாரடே. இவர்மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம்மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்றுகண்டறிந்தார்.


உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர்என்றுபோற்றப்படும் இவர் 1867ஆம்ஆண்டுஆகஸ்ட் 25ஆம்தேதிமறைந்தார்.


------------------------------------------------------


(22-செப்) *புற்றுநோய் ரோஜாதினம்.*


புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம்தேதிகொண்டாடப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்த 12 வயதுமெலிண்டா ரோஸ்என்றபெண்குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர்தன்னைபோல்பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜாபூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவேஅவர்இறந்ததினத்தை புற்றுநோய் ரோஜாதினமாககொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தில் புற்றுநோயிலிருந்துமீண்டவர்கள் தங்கள்அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதன்மூலம்புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒருமனஉறுதி ஏற்படுகிறது.



*ஒன்வெப்டே(One Web Day).*


ஒன்வெப்டே செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2006ஆம்ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. சூசன்பி.கிராபோர்டு என்பவர் Internet Corporation of Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். இவர்இணையதளத்தை பற்றியவிழிப்புணர்வை அதிகரிக்க இந்தநாளைஉருவாக்கினார்.



*உலககார்இல்லாததினம்.*


உலக கார் இல்லாததினம் (கார்ஃபிரீடே) ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம்தேதிஅனுசரிக்கப்படுகிறது. வாகனபெருக்கத்தை குறைக்கும் விதத்திலும், உடல்நலபாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாதபோக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்ததினம் 1995ஆம்ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.


------------------------------------------------------------------

(24-செப்) *பிகாஜிருஸ்தம் காமா.*


இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும்இ,பெண்சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல்கொடுத்தவருமான பிகாஜிருஸ்தம் காமா 1861ஆம்ஆண்டுசெப்டம்பர் 24ஆம்தேதிமும்பையில் பிறந்தார்.


1907ஆம்ஆண்டுஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்றஇடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் 'இந்தியசுதந்திரக் கொடி' வடிவமைக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை எழுப்பினார்.


இவர் இந்த மாநாட்டில் இந்தியாவில் மனிதஉரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டிஷிடமிருந்து சுயாட்சி ஆகியகோரிக்கைகளை முன்வைத்தார். பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடினார். தனதுசொத்துக்களில் பெரும்பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதிஒன்றிற்கு எழுதிவைத்தார்.


இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொதுஅமைப்புகளுக்கு பிகாஜிகாமாஅல்லதுமேடம்காமாஎன்றுபெயர்சூட்டப்பட்டுள்ளது. இவரதுஉருவம்பொறிக்கப்பட்ட தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது.


வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பிகாஜிகாமா 1936ஆம்ஆண்டுமறைந்தார்.



*ஜார்ஜ்க்ளாட்.*


பிரஞ்சு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளருமானஜார்ஜ்க்ளாட் 1870ஆம்ஆண்டுசெப்டம்பர் 24ஆம்தேதிபிரான்ஸில் பிறந்தார்.


இவர் நியான் விளக்கு மற்றும் பெருங்கடல் வெப்பஆற்றல்மாற்றம் (Ocean Thermal Energy Conversion) ஆகியவற்றை கண்டுபிடித்தவர்.


இவருக்கு 1921ஆம் ஆண்டு Leconte வழங்கப்பட்டது. ஜார்ஜ்க்ளாட் 1960ஆம்ஆண்டுமே 23ஆம்தேதிமறைந்தார்.



*இரண்டாம் சரபோஜி.*


மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி 1777ஆம்ஆண்டுசெப்டம்பர் 24ஆம்தேதிபிறந்தார்.


மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின்மன்னர்களுள் ஒருவராவார்.


இவர் இராச்சியத்தின் கடைசிசுதந்திர மன்னன்ஆவார். இவர்தஞ்சையின் பிரபலமான சரஸ்வதி மகால்நூலகத்தை அமைத்தார்.


அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்த இவர் 1832ஆம்ஆண்டுமார்ச் 7ஆம்தேதிமறைந்தார்.

-----------------------------------------------------------


(25-செப்) *உடுமலைநாராயணகவி.*


பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும், தனதுஎழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசியஉணர்வைஊட்டியவருமான உடுமலைநாராயணகவி 1899ஆம்ஆண்டுசெப்டம்பர் 25ஆம்தேதிகோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்தபூவிளைவாடி என்றகிராமத்தில் பிறந்தார்.


இவர் புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில், கும்மிபோன்றகிராமியக் கலைகளைஆர்வத்துடன் கற்றார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்தகாலக்கட்டம் அது. தேசியஉணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார்.


இவர் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதினார். இவர்முன்னணி பாடல்ஆசிரியராகத் திகழ்ந்தவர். 'கவிராயர்' என்றுஅன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.


இவர் திரையுலகில் தனக்கென்று தனிஇடத்தைப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.


கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப்பன்முகப் பரிமாணம் கொண்டஉடுமலைநாராயணகவி 1981ஆம்ஆண்டுமறைந்தார். இந்தியஅரசுஉடுமலைநாராயணகவி நினைவைபோற்றும் வகையில் 2008ஆம்ஆண்டுஅஞ்சல்தலைவெளியிட்டது. இவர்பிறந்தஊரில்தமிழ்நாடு அரசுஇவரைபோற்றும் வகையில் மணிமண்டபத்தை அமைத்துள்ளது.



*ஓலிகிறிஸ்டியன்சென் ரோமர்.*


டென்மார்க் நாட்டு வானியலாளர், ஓலிகிறிஸ்டியன்சென் ரோமர் 1644ஆம்ஆண்டுசெப்டம்பர் 25ஆம்தேதிடென்மார்க்கில் உள்ளஆர்ஹஸ்என்றஇடத்தில் பிறந்தார்.


இவர் 1676ஆம் ஆண்டுஒளியின் வேகத்தை அளவியற்முறைகளால் முதலில் கண்டறிந்தவர்.


இவர் 1705ஆம் ஆண்டுகோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ஓலிகிறிஸ்டியன்சென் ரோமர் 1710ஆம்ஆண்டுமறைந்தார்.



*சதீஷ்தவான்.*


1920ஆம்ஆண்டுசெப்டம்பர் 25ஆம்தேதிஇந்தியராக்கெட் ஆராய்ச்சியாளர் சதீஷ்தவான்பிறந்தார்.


இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இணைந்து, 42வதுவயதில்அதன்இயக்குநராக உயர்ந்தார்.


இவர் வானூர்திகளின் பாகங்கள் காற்றுடன் உராய்வது பற்றிஆய்வுகள் செய்துதுல்லியமாக அதன்அளவைக்கணக்கிட்டார்.


ஸ்கின் ஃப்ரிக்ஷன் (Skin Friction) என்கிற அந்தத்தொழில்நுட்பம் பின்புஉலகெங்கும் பயன்படுத்தப்பட்டது. இவர் 2002ஆம்ஆண்டுஜனவரி 3ஆம்தேதிமறைந்தார்.


இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளஇஸ்ரோஆய்வுமையத்துக்கு இவருடைய பெயர்இடப்பட்டுள்ளது.


---------------------------------------------

(25-செப்) *உலககாதுகேளாதோர் தினம்.*


உலக காதுகேளாதோர் தினம்ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதகடைசிவாரஞாயிற்றுக்கிழமை (25.09.2022) அனுசரிக்கப்படுகிறது. 1958ஆம்ஆண்டுகாதுகேளாதோர் தினம்தொடங்கப்பட்டது.


சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை அரசுபரிசீலிக்க வேண்டும் என்பதைஇத்தினம் வலியுறுத்துகிறது.



*உலகஆறுகள்தினம்.*


ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமைஉலகஆறுகள்தினமாககொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 25ஆம்தேதிஉலகஆறுகள்தினம்கொண்டாடப்படுகிறது. உலகநீர்வழிகளை கொண்டாடும் விதமாகஐ.நா. சபை எடுத்தமுயற்சி காரணமாக 2005ஆம்ஆண்டுமுதல்ஆறுகள்தினம்கொண்டாடப்படுகிறது.



--------------

(26-செப்) *மன்மோகன் சிங்.*


இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர்.மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டுசெப்டம்பர் 26ஆம்தேதிதற்போது பாகிஸ்தானிலுள்ள கா (புயா) என்னும் ஊரில்பிறந்தார்.


மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத்தலைவர், இந்தியரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்என்றுபல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.


டாக்டர்.மன்மோகன் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில்முக்கியமானது இந்தியக் குடிமைவிருதுகளில் இரண்டாவது உயரியவிருதான பத்மவிபூஷண், இந்தியஅறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேருநூற்றாண்டு பிறந்தநாள்விருது (1995), சிறந்தநிதியமைச்சருக்கான யூரோசெலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம்ஸ்மித்பரிசு (1956) ஆகியவற்றை இவர்பெற்றுள்ளார்.


தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர்.மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ஆம்ஆண்டில் இருந்து இருக்கிறார். இவர் 1998ஆம்ஆண்டுமுதல் 2004ஆம்ஆண்டுவரைஎதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.


2004ஆம்ஆண்டுநடந்தமக்களவைத் தேர்தலில் டாக்டர்.மன்மோகன் சிங்இந்தியபிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டு 2004ஆம்ஆண்டுமுதல் 2009ஆம்ஆண்டுவரைபதவிவகித்தார். பிறகு 2009ஆம்ஆண்டுநடந்தமக்களவைத் தேர்தலில் மீண்டும் டாக்டர்.மன்மோகன் சிங்இந்தியபிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம்ஆண்டுமுதல் 2014ஆம்ஆண்டுவரைபதவிவகித்தார்.



*பாபநாசம் சிவன்.*


1890ஆம் ஆண்டுசெப்டம்பர் 26ஆம்தேதிகர்நாடக இசைஅறிஞர்பாபநாசம் சிவன்தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ளபோலகம்என்னும் ஊரில்பிறந்தார்.


பாபநாசம் சிவன் தனது முத்திரையாக 'ராமதாஸ' என்பதைவைத்துகிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளிஆகியபலஇசைவடிவங்களை இயற்றியுள்ளார்.


இவருடைய படைப்புகளை இவரின் மகள் ருக்மணி ரமணிவெளியிட்டுள்ளார்.


பத்ம பூஷண் விருது, சங்கீதகலாசிகாமணி விருது, சங்கீதகலாநிதி விருது, இசைப்பேரறிஞர் விருதுபோன்றவிருதுகளை பெற்றபாபநாசம் சிவன் 1973ஆம்ஆண்டுஅக்டோபர் 1ஆம்தேதிமறைந்தார்.



*ம.ப.பெரியசாமித்தூரன்.*


1908ஆம்ஆண்டுசெப்டம்பர் 26ஆம்தேதிதமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞர்பத்மபூஷண் ம.ப.பெரியசாமித்தூரன் தமிழ்நாடுஇ ஈரோடுமாவட்டத்தில் பிறந்தார்.


இவர் ஒரு சிறந்தஎழுத்தாளர் ஆவார். இவர்பெ.தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும், தமிழ்ப் புலவராகவும், கர்நாடக இசைவல்லுநராகவும் அறியப்பட்டவர்.


இவர் நாடகங்களும், இசைப்பாடல்களும், சிறுகதைகளும், சிறுவர் இலக்கியங்களும் போன்றவை எழுதியுள்ளார்.


இவரின் நூல்கள் சிலநாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பத்மபூஷன் விருதினை பெற்றஇவர் 1987ஆம்ஆண்டுஜனவரி 20ஆம்தேதிமறைந்தார்.

-----------------

(27-செப்) *உலகசுற்றுலா தினம்.*


உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ஆம்தேதி 1980ஆம்ஆண்டிலிருந்து உலகெங்கும் உலகசுற்றுலா தினம்கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கியநாடுகள் உலகசுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொதுஅவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


சுற்றுலாவின் முக்கியத்துவத்தைஉலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலா எப்படிமக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைஎடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது


-------------

(27-செப்) *நாகேஷ்.*


தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலசாதனைகள் படைத்தபெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம்ஆண்டுசெப்டம்பர் 27ஆம்தேதிதிருப்பூர் மாவட்டத்தில் உள்ளதாராபுரத்தில் பிறந்தார்.


இவர் 1959ஆம் ஆண்டுதிரைப்படத்துறையில் புகுந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். அதுமிகவும் வெற்றிப் படமாகஅமைந்தது.


1974ஆம்ஆண்டுகலைமாமணி விருதுவழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழகஅரசுஇவருக்கு, சிறந்தநகைச்சுவை நடிகருக்கான விருதுவழங்கியது. இவர் 2009ஆம்ஆண்டுஜனவரி 31ஆம்தேதிமறைந்தார்.



*மாதாஅமிர்தானந்தமயி.*


1953ஆம்ஆண்டுசெப்டம்பர் 27ஆம்தேதிஇந்தியஆன்மிகவாதி மாதாஅமிர்தானந்தமயி கேரளாவில் பிறந்தார்.


இவர் பக்தர்களால் அம்மாமற்றும் அம்மாச்சி என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னைஎன்றும் அழைக்கப்படுகிறார்.


இவர் 1993ஆம் ஆண்டில் உலகசமயநாடாளுமன்றத்தின் 100ஆம்ஆண்டுவிழாவில் சொற்பொழிவாற்றினார்.


2004 சுனாமிக்கு பிறகுஇவர்இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடிரூபாய்கணக்கில் உதவிதிட்டத்தை உருவாக்கினார்.



*சி.பா.ஆதித்தனார்.*


1905ஆம்ஆண்டுசெப்டம்பர் 27ஆம்தேதிதினத்தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் பிறந்தார்.


இவர் தொடங்கிய முதல்பத்திரிகை தமிழன்என்னும் வாரஇதழ்ஆகும்.


அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர்தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.


சட்டத்துறையில்கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டதனதுகொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிக்கைத் துறையிலேயே தனதுகவனத்தை செலுத்தினார்.


இவர் 1981 ஆம் ஆண்டுமேமாதம் 24ஆம்தேதிதனது 76ஆம்வயதில்மறைந்தார்.


சென்னையில் உள்ள எழும்பூர் செல்லும் அண்ணாசாலைக்கு இவரதுநினைவாக ஆதித்தனார் சாலைபெயரிடப்பட்டது.

----------------------------------------------------


(28-செப்) *உலகரேபிஸ்நோய்தினம்.*


ரேபிஸ் எனும் வைரஸ்வீட்டுவிலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ்வைரஸ்தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லதுஅவ்விலங்குகளால் கடிபட்ட பிறவிலங்குகள் மூலமாகவோ ரேபிஸ்நோய்பரவுகிறது.


இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம்ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர்மறைந்தசெப்டம்பர் 28ஆம்தேதியேஉலகரேபிஸ்தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



*பசுமைநுகர்வோர் தினம்.*


பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால்சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவேஇயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம்பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உலகின்பலபகுதிகளில் பசுமைநுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே செப்டம்பர் 28ஆம்தேதிபசுமைநுகர்வோர் தினம்கொண்டாடப்படுகிறது.


--------------------------------------------

(28-செப்) *பகத்சிங்.*


விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமானபகத்சிங் 1907ஆம்ஆண்டுசெப்டம்பர் 28ஆம்தேதிபாகிஸ்தானிலுள்ள பங்காஎன்றகிராமத்தில் பிறந்தார்.


கோதுமை வயலில் துப்பாக்கி விளையவைத்துவெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்றுசிறுவயதிலேயே கனவுகண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.


துப்பாக்கியும், புத்தகங்களும் இவரதுநெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பதுஇவரதுதாரகமந்திரம்.


இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர்திடோர்டுடெத், ஐடியல்ஆப்சோஷலிஸம் போன்றநூல்களை எழுதினார்.


ஏராளமான இளைஞர்களுக்குஊக்கம்அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்தபுரட்சியாளரான மாவீரன் பகத்சிங் 1931ஆம்ஆண்டுஆங்கிலஅரசால்தூக்கிலிடப்பட்டார்.



*அபினவ்பிந்த்ரா.*


இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா 1982ஆம்ஆண்டுசெப்டம்பர் 28ஆம்தேதிஉத்தராகண்ட் மாநிலத்திலுள்ள தேராதூன் மாவட்டத்தில் பிறந்தார்.


2008ஆம்ஆண்டுஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை பெற்றார். இவர்ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர்போட்டிகளில் தங்கப்பதக்கத்தை பெற்றவர்களில் முதல்இந்தியர் ஆவார்.


---------------------------------------------

(29-செப்)*அரங்க சீனிவாசன்.*


1920ஆம்ஆண்டுசெப்டம்பர் 29ஆம்தேதிகவித்தென்றல் அரங்கசீனிவாசன் பர்மாவின் பெகுமாவட்டம், சுவண்டி என்றசிற்றூரில் பிறந்தார்.


இவர் மனித தெய்வம் காந்திகாதைஎன்றநூல்எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்துகாண்டங்கள், 77 படலங்கள், 183 பாடல்களை கொண்டகாவியம் இது. இவரதுகாவடிச் சிந்தும், கவிஞன்வரலாறும் என்றஆய்வுநூல்தமிழகஅரசின்பரிசுபெற்றது.


சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைகவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ்வளர்ச்சி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, தமிழ்கலைக்களஞ்சியம் உருவாகஒத்துழைத்தார்.


வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாகதீபம், தேசியகீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் 1996ஆம்ஆண்டுமறைந்தார்.



*பிரஜேஷ் சந்திரமிஸ்ரா.*


1928ஆம்ஆண்டுசெப்டம்பர் 29ஆம்தேதிஇந்தியாவின் முதல்தேசியபாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் சந்திரமிஸ்ராபிறந்தார்.


இவர் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமரின் முதன்மை செயலர்ஆவார்.


முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதல்தேசியபாதுகாப்பு ஆலோசகராகவும், முதன்மை செயலாளராகவும் இருந்தஇவர் 2012ஆம்ஆண்டுசெப்டம்பர் 28ஆம்தேதிமறைந்தார்.



*ராபர்ட் கிளைவ்.*


1725ஆம்ஆண்டுசெப்டம்பர் 29ஆம்தேதிஆங்கிலேய அரசியல்வாதி ராபர்ட் கிளைவ்பிறந்தார்.


இவர் வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவமற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒருபிரித்தானிய அதிகாரி ஆவர்.


பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபராக கருதப்பட்ட இவர் 1774ஆம்ஆண்டுநவம்பர் 22ஆம்தேதிமறைந்தார்.


------------------------

(30-செப்)

*சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.*


சர்வதேச மொழிபெயர்ப்புதினம்செப்டம்பர் 30ஆம்தேதிஉலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனிதஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.


பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின்கூட்டமைப்பு என்றஅமைப்பு 1953ஆம்ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டை காட்டும் முகமாகஇவ்வமைப்பு 1991ஆம்ஆண்டில் இந்நாளை பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.


----------------------------------

(30-செப்) *ஜீன்பாப்டிஸ்ட் பெர்ரின்.*


1870ஆம்ஆண்டுசெப்டம்பர் 30ஆம்தேதிபிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன்பாப்டிஸ்ட் பெர்ரின் பிறந்தார்.


பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் 'பிரௌனியன் இயக்கத்தை' பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதிசெய்தார். இதற்காக 1926ஆம்ஆண்டுஇயற்பியலுக்கான நோபல்பரிசுபெற்றார்.


1914-18ஆம் ஆண்டுகளில் நடந்தபோரின்போதுபொறியாளர் படைக்குத் தலைமைஅலுவலராகப் பொறுப்பேற்றார். ஜீன்பாப்டிஸ்ட் பெர்ரின் 1942ஆம்ஆண்டுமறைந்தார்.



*கமலேஷ்சர்மா.*


1941ஆம்ஆண்டுசெப்டம்பர் 30ஆம்தேதிபொதுநலவாய நாடுகளின் 5வதுசெயலாளர் கமலேஷ்சர்மாபிறந்தார்.


இதற்கு முன்னதாக லண்டனில் உள்ளஇந்தியஉயர்ஆணையராக (நாட்டுப் பேராளர்) பொறுப்பு வகித்துள்ளார்.


1965ஆம்ஆண்டுமுதல் 2001ஆம்ஆண்டுவரைஇந்தியவெளிநாட்டு சேவையில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.


2004ஆம்ஆண்டுஇந்தியாவின் உயர்ஆணையராகப் பிரித்தானியாவிற்கு நியமிக்கப்பட்டார்.


அரச பொதுநலவாய சமூகத்தின் உதவிதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குயின்சு பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பில் உள்ளார்.

0 views0 comments

Recent Posts

See All
bottom of page