21 June- 29 June

(21-சூன்)
*உலக யோகா தினம்.*
யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.
இதை நினைவுக்கூறும் விதமாக உலக யோகா தினம் (International Yoga Day)ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது.
*உலக இசை தினம்.*
இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு பூர்வமானது இசை. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.
வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
(22-சூன்)
*அடா யோனத்.*
படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.
ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டுகால கடுமையான ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்.
ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.
இவர் நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரியவர்.
------------------------------------------------------------------------------------------------------------
(23-சூன்) *சர்வதேச கைம்பெண்கள் தினம்.*
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
உலகம் முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
*ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்.*
அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஆம் தேதி பொதுச்சேவை தினமாக அறிவித்தது.
சேவை செய்யும் பண்பானது, நல்லொழுக்கத்தின் அடையாளமாக இருக்கிறது. பொதுச்சேவையை ஊக்குவிக்கவும், சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கவும் ஐ.நா. பொதுச்சபை இத்தினத்தை கொண்டாடி வருகிறது.
*அலன் மாத்திசன் டூரிங்.*
தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் 1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
இவரது ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.
இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் எனக் குறிப்பிடப்படுகிறது.
நவீன கணினி, Artificial intelligence, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.
*வில்மா குளோடியன் ருடால்ஃப்.*
1940ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலகின் வேகமான பெண் வில்மா குளோடியன் ருடால்ஃப் (தடகள வீராங்கனை) அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில் பிறந்தார்.
இவர் 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டவர்.
மேலும் 1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
*டான் பிரவுன்.*
கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் பிறந்தார்.
பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்க்கு 1991ஆம் ஆண்டு வந்தார். மேலும், இவர் 'டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்", 'டிஸப்ஷன் பாயின்ட்", 'ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ்" ஆகிய புத்தகங்களை எழுதினார்.
2003ஆம் ஆண்டு வெளிவந்த இவரது 'தி டாவின்சி கோட்" என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
(23-சூன்)
*அலன் மாத்திசன் டூரிங்.*
தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் 1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
இவரது ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.
இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் எனக் குறிப்பிடப்படுகிறது.
நவீன கணினி, Artificial intelligence, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.
*வில்மா குளோடியன் ருடால்ஃப்.*
1940ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலகின் வேகமான பெண் வில்மா குளோடியன் ருடால்ஃப் (தடகள வீராங்கனை) அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில் பிறந்தார்.
இவர் 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டவர்.
மேலும் 1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
(24-சூன்) *கவியரசு கண்ணதாசன்.*
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா.
காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.
இவர் 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்கள், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றை படைத்துள்ளார்.
ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.
*எம்.எஸ்.விஸ்வநாதன்.*
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதிஇ கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
1953ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.
*கா.அப்பாதுரை.*
1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை பிறந்தார்.
அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை கொண்டவர்.
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார்.
பன்மொழிப்புலவர் என அறியப்பட்ட இவர் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மறைந்தார்.
(24-சூன்) *உலக இளம் மருத்துவர்கள் தினம்.*
மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது.
எனவே, இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி இத்தினம் அறிவிக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(25-சூன்) *வி.பி.சிங்.*
இந்தியாவின் முன்னாள் பிரதமரான விஷ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1969ஆம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், 1971ஆம் ஆண்டு முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். பிறகு, 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.
இவர் டிசம்பர் 2, 1989-லிருந்து நவம்பர் 10, 1990 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஜார்ஜ் மவுண்ட்பேட்டன்.*
1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைசிராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்க வைத்துக்கொன்றனர்.
*உலக வெண்புள்ளி தினம்.*
உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*மாலுமிகள் தினம்.*
உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல் சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
(26-சூன்)
*சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்.*
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.
*சர்வதேச ஆதரவு தினம்.*
சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா.சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது.
சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர் கைதிகள்வரை தொடர்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை ஜூன் 26ஆம் தேதியை சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் (அ) சர்வதேச ஆதரவு தினமாக அறிவித்தது.
*ம.பொ.சிவஞானம்.*
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.
வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.
இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி.இ 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
*பெர்ல் பக்.*
1892ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் அமெரிக்காவில் உள்ள ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார்.
பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ஆம் ஆண்டு தொடங்கியது.
இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்றவர்.
The Good Earth என்ற சிறந்த நூலை எழுதிய இவர் 1973ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மறைந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
(27-சூன்) *ஹெலன் கெல்லர்.*
ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.
இவர் ஆனி சலிவன் ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.
மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இது தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (The Miracle Worker) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.
வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.
*அகிலன்.*
தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.
சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.
வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு மறைந்தார்.
*பங்கிம் சந்திர சட்டர்ஜி.*
வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வங்காளத்தின் வடக்கு பர்கானாஸில் பிறந்தார்.
இவரது முதல் நாவலான துர்கேஷ் நந்தினி 1865ஆம் ஆண்டு வெளிவந்தது. நமது தமிழ் இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வையும், பெருமிதத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினார்.
வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம் என்றெல்லாம் தாகூர் இவரை அழைப்பார். 1882ஆம் ஆண்டு வெளிவந்த வந்தே மாதரம் பாடல் இடம்பெற்ற இவரது ஆனந்தமட் நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.
தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.
*மில்ட்ரெட் ஜே.ஹில்.*
1859ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஹேப்பி பர்த் டே டூ யூ பாடலை இயற்றிய மில்ட்ரெட் ஜே.ஹில் அமெரிக்காவில் பிறந்தார்.
இந்தப் பாடல் முதன்முதலில் 1893ஆம் ஆண்டு மழலையர் பள்ளிக்களில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துப் பாடலாக வெளியிடப்பட்டது.
மேலும் இப்பாடல் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பானியம் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
'ஹேப்பி பர்த்டே டு யூ' முதன்முதலில் 1912ஆம் ஆண்டில் 'குட் மார்னிங் டு ஆல்' என்ற மெல்லிசையைப் பயன்படுத்தி வெவ்வேறு பாடல் வரிகளுடன் வெளிவந்தது.
இந்த பாடலின் மூலம் இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இவர் 1916ஆம் ஆண்டு ஜீன் 5ஆம் தேதி மறைந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
(29-சூன்) *பி.சி.மகாலனோபிஸ்.* இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931ஆம் ஆண்டு நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார். அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்ம விபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகாலனோபிஸ் 1972ஆம் ஆண்டு மறைந்தார். *ஆர்.எஸ்.மனோகர்.* தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும் இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்களை பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 2006ஆம் ஆண்டு மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------