top of page

25,26,27 மார்ச்-March
(25-மார்ச்)

சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்.


👉 கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண்இ பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும், மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------


(25-மார்ச்)

நார்மன் எர்னஸ்ட் போர்லாக்.


🏆 பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில் பிறந்தார்.


🏆 இவர் மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் 20 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார்.


🏆 இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது. உணவு உற்பத்தியை பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்டதற்காக 1970ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.


🏆 மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம், அதிபரின் ஃபிரீடம் பதக்கம், நோபல் பரிசு ஆகிய 3 உயர்ந்த விருதுகளை பெற்றார். இந்தியாவின் பத்ம விபூஷண் விருதும் பெற்றவர். நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.அடால்ஃப் எங்லர்.


🌳 ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர், ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் 1844ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஸாகன் (தற்போது போலந்தில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.


🌳 1879ஆம் ஆண்டு இவர் பல்லுயிர் நில அமைப்பியல் காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு உயிர் புவியியல் பகுதிகளையும் வரையறுத்தார்.


🌳 இவருடைய தி நேச்சுரல் பிளான்ட் ஃபேமிலீஸ், தி பிளான்ட் கிங்டம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 1881ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாள் இறுதிவரை பொட்டானிக்கல் இயர்புக்ஸ் ஃபார் சிஸ்டமாடிக்ஸ் என்ற இதழை வெளியிட்டு வந்தார்.


🌳 லின்னேயன் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகளை பெற்றுள்ளார். தாவர வகைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு இவரது பெயரில் பதக்கம் வழங்கி வருகிறது.


🌳 தாவரவியல் உலகின் முன்னோடியாக கருதப்படும் அடால்ஃப் எங்லர் 1930ஆம் ஆண்டு மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------


(26-மார்ச்)

மகாதேவி வர்மா.


🏁 இந்தி இலக்கியத்தில் முக்கியமானவரும், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவருமான மகாதேவி வர்மா 1907ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் பிறந்தார்.


🏁 இவரது படைப்புகளில் சொந்த அனுபவங்களை உள்ளடக்கிய ஸ்ம்ருதி கீ ரேகாயே, அதீத் கே சலசித்ர ஆகிய நினைவுச் சித்திரங்கள் மிகவும் பிரபலமானவை.


🏁 அடிமை இந்தியாவில் நிலவிய துன்பங்களைக் கண்டு வேதனை அடைந்து, அவற்றைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். சமூகப் பிரச்சனைகள், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சிந்தனைகளை ஸ்ருங்கலா கீ கடியா என்ற தொகுப்பில் எழுதியுள்ளார்.


🏁 மகாத்மா காந்தியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளால் கவரப்பட்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டார். சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், ஞானபீட விருது மட்டுமின்றி, இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.


🏁 மார்டன் மீரா என்று போற்றப்பட்ட மகாதேவி வர்மா 1987ஆம் ஆண்டு மறைந்தார்.ரிச்சர்ட் டாக்கின்ஸ்.


👉 பரவலாக அறியப்பட்ட படிவளர்ச்சி உயிரியலாளர் கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ் 1941ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார்.


👉 இவரது செல்ஃபிஷ் ஜீன் நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக உதவியது.


👉 2006ஆம் ஆண்டில் இவர் எழுதிய தி காடு டில்யூசன் என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் மீம் என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார்.


👉 இதனை தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு என்று கூறியுள்ளார்.ராபர்ட் ஃப்ராஸ்ட்.


📝 1874ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கவிதை இலக்கியத்துக்கான புலிட்ஸர் விருதுகளை 4 முறை பெற்ற அமெரிக்க கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தார்.


📝 இவர் அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான கவிஞர் என்ற அந்தஸ்து பெற்றார். இவரது படைப்புகள் இலக்கியத் தரத்துடனும், அதே சமயத்தில் மிக எளிமையாகவும் இருந்தன.


📝 பிரின்ஸ்டன், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 40 பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டு இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இறுதிவரை தொடர்ந்து கவிதை எழுதிவந்த ராபர்ட் ஃப்ராஸ்ட் 89வது வயதில் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

(27-மார்ச்)

உலக திரையரங்க தினம்.


🎬 ஒவ்வொரு ஆண்டும் உலக திரையரங்க தினம் மார்ச் 27ஆம் தேதி சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.


🎬 யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

(27-மார்ச்)

வில்லெம் ரோண்ட்கன்.


🔆 எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் 1845ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் பிறந்தார்.


🔆 இவர் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் செய்தார். அப்பொழுது வெற்றிடக்குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் ஒளிர்வதை கண்டார்.


🔆 மேலும், இவர் இருட்டு அறையில், சில சோதனைகளை செய்து பார்த்தப்போது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார்.


🔆 இதை அவர் நவம்பர் 8, 1895ஆம் ஆண்டு கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.


🔆 கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை என போற்றப்படும் இவர் 1923ஆம் ஆண்டு மறைந்தார்.3 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

Comments


bottom of page