3 June

* உலக மிதிவண்டி தினம்.*
2018ஆம் ஆண்டு ஜூன் 03ஆம் தேதி அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) கொண்டாடப்பட்டது.
போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள் இன்று மோட்டார் சைக்கிள்களின் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி உலக சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
*கலைஞர் மு.கருணாநிதி.*
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.
'தூக்குமேடை' நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். பின்பு அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றது.
இவர் தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். தமிழகத்தின் முதல்வராக இவர் ஐந்துமுறை பதவி வகித்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான இவர் 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------