top of page

(4-7)February





(04-பிப்)

*உலக புற்றுநோய் தினம்.*

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோயாகும்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக கருதப்படுகிறது.


(04-பிப்)

*ரோசா பார்க்ஸ்.*

நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என போற்றப்பட்ட ரோசா பார்க்ஸ் 1913ஆம் தேதி பிப்ரவரி 4ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். ரோசா லூசி மெக்காலி என்பது இவரது இயற்பெயர்.

அந்த காலக்கட்டத்தில் இன வேற்றுமை சட்டங்கள் அமலில் இருந்தன. பொது போக்குவரத்துகளில் கருப்பினர்களுக்குத் தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. வெள்ளையர்கள் அதிகமாக இருந்தால் இவர்கள் தங்கள் இடத்தை விட்டுத்தர வேண்டும்.

ஒருமுறை பேருந்து கூட்டமாக இருந்த போது இவர் தன் இருக்கையை அவர்களுக்கு விட்டுத் தர மறுத்துவிட்டார். பிறகு 'மான்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு' என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற அறப்போராட்டப் புயலாக மாறியது.

இறுதியில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்தது. இவரது பிறந்த தினம் மற்றும் இவர் கைது செய்யப்பட்ட தினம் இரண்டுமே 'ரோசா பார்க்ஸ் தினம்' என்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.


(05-பிப்)

*ஜான் பாய்ட் டன்லப்.*

வாகன டயர் கண்டுபிடிப்பாளரான ஜான் பாய்ட் டன்லப் 1840ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார்.

இவர் குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்க காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.


அதே சமயத்தில் 1887ஆம் ஆண்டு அவருடைய மகன் தன் சைக்கிளை கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் ஓட்டுவதற்கு வழி கேட்டான். இவரும் மகனுக்கு உதவ முடியுமா என்று சோதனையில் இறங்கிவிட்டார்.


(06-பிப்)

*கான் அப்துல் கஃபார் கான்.*


பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுபவருமான கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.


காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற அமைப்பை உருவாக்கிய இவர் அதன்மூலம் மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.


பின்பு தனது அமைப்பை காங்கிரஸுடன் இணைத்தார். 1929ஆம் ஆண்டு குதாய் கித்மத்கர் என்ற அமைதி இயக்கத்தை தொடங்கினார். சமூக சீர்திருத்தத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உதவியாக இருந்தது.


இவருக்கு 1987ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான். பாட்ஷா கான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் 1988ஆம் ஆண்டு மறைந்தார்.


*வில்லியம் பாரி மர்பி.*


இரத்த சோகை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி 1892ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி அமெரிக்காவில் விஸ்கொன்சின் என்னுமிடத்தில் பிறந்தார்.


இறப்பினை விளைவிக்கும் கொடிய நோயான இரத்த சோகைக்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர் (மற்ற இருவர் கியார்கு ஹோயித் விப்பிள், கியார்கு ரிச்சர்டு மினோட்). இவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.


மருத்துவ துறையில் மக்களுக்கு மகத்தான தொண்டாற்றிய இவர் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஆர்க்குட் புயுக்கோக்டன்.*


ஆர்க்குட் என்ற சமூக வலைதளத்தை கண்டுபிடித்த ஆர்க்குட் புயுக்கோக்டன் 1975ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியில் பிறந்தார்.


இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது கிளப் நெக்சஸ் (Club Nexuy) என்னும் அமைப்பை உருவாக்கினார்.


கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது ஆர்க்குட் என்னும் சமூக வலை அமைப்பை நிறுவினார். இந்த சமூக வலைதளம் ஜனவரி 22, 2004ஆம் ஆண்டு கூகுளினால் தொடங்கி வைக்கப்பட்டது.


இன்சர்க்கிள் (In circles) என்ற ஒரு சமூகவலை அமைப்பை அஃவ்வினிட்டி எஞ்சின்ஸ் (Affinity Engines) என்னும் நிறுவனத்திற்காக உருவாக்கினார்.


தோட்டத்தில் இருந்த பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை நிரப்பி சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதாக இருந்தது.

அதை மேம்படுத்தி 1888ஆம் ஆண்டு பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஏற்கனவே 1845ஆம் ஆண்டிலேயே ராபர்ட் தாம்சன் இதை கண்டுபிடித்திருந்தார். பிரபலமாகாததால் அது தெரியாமல் போய்விட்டது.


ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த வில்லியம் ஹியூம் என்ற தொழிலதிபர் இவருடன் சேர்ந்து டன்லப் என்ற டயர் நிறுவனத்தை உருவாக்கினார்.

பல தொழிற்சாலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்து சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் பாய்ட் டன்லப் 1921ஆம் ஆண்டு மறைந்தார்.இனவெறிக்கு எதிராக அறவழியில் போராடிய ரோசா பார்க்ஸ் 2005ஆம் ஆண்டு (92வது வயதில்) மறைந்தார்.


(07-பிப்) *தேவநேயப் பாவாணர்.* மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தேவநேசன். 1925ஆம் ஆண்டு சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களை கற்றவர். இவர் 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றவர். மேலும், இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்', 'தமிழ் திராவிட மொழிகளுக்கு தாய்' என்று கூறியவர். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் 1981ஆம் ஆண்டு மறைந்தார். *ஜி.ஹெச்.ஹார்டி.* கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்த ஜி.ஹெச்.ஹார்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தவர். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்திய கணிதமேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்' சூத்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்' என்ற நாவல் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் ராயல் மெடல், சில்வெஸ்ட்டர் மெடல், காப்லே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி 1947ஆம் ஆண்டு மறைந்தார்.


2 views0 comments

Recent Posts

See All
bottom of page