top of page

7July-10July

(07-சூலை)

*மகேந்திரசிங் தோனி.*




இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார்.

இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர் (CB Series) மற்றும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது.

2008 மற்றும் 2009ல் ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது (ICC ODI Player of the Year), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ல் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்றது.

*ருடால்ஃப் உல்ஃப்.*

வானியல் ஆராய்ச்சியாளரும் கணித வல்லுநருமான ருடால்ஃப் உல்ஃப் 1816ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.

சூரியப் புள்ளி சுழற்சிக்கும், பூமியின் காந்தசக்தி செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர்களில் ஒருவராவார். இவர் சூரியப் புள்ளி சுழற்சிக் காலம் என்பது 11.1 ஆண்டுகள் என்றும் துல்லியமாக கணித்தார்.

சூரியனின் செயல்பாடுகளை அளவிடும் முறையான உல்ஃப்ஸ் சன்ஸ்பாட் நம்பர்ஸ் இவரால் கண்டறியப்பட்டது. அறிவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ருடால்ஃப் உல்ஃப் 1893ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

(08-சூலை)

*சௌரவ் கங்குலி.*

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of the off Side) என அழைக்கப்படுகிறார்.

இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார்.

*ராஜசேகர ரெட்டி.*

1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி புலிவெந்துலா மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த முதல் தலைவர் ஆவார்.

மேலும் இரண்டு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசித் திட்டம், 'ஆரோக்கியஸ்ரீ' எனப்படும் ஏழை எளியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்தார்.

இவ்வாறு பல்வேறு திட்டத்தை கொண்டுவந்த இவர் 2009ஆம் ஆண்டுஇ செப்டம்பர் 2ஆம் தேதி வானூர்தி விபத்தில் மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------

(09-சூலை) *கே.பாலசந்தர்.*

தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர் 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது.

இவர் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது (2010), தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

திரையுலகில் வெற்றி உலா வந்த கலையுலக பாரதி கே.பாலசந்தர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.


*எலியாஸ் ஓவே.*

1819ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார்.

கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டுவந்தார்.

1846ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான காப்புரிமையை முதன் முதலாகப் பெற்றார்.

1867ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது.


இவர் 1867ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தன்னுடைய 48ஆவது வயதில் மறைந்தார்.

*நாஞ்சில் நாரண.தொல்காப்பியன்.*

1943ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாரண.தொல்காப்பியன் கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் எனும் ஊரில் பிறந்தார்.

நாளைய புரட்சி, தமிழுக்குத் தலை (குமணன் காவியம்) எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். மரபுக் கவிதைகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

இவர் எழுதிய 'முப்பால் முதல்வன்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(10-சூலை)

*சுனில் கவாஸ்கர்.*

உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவர் 1966-67ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1975-76ஆம் ஆண்டு நடந்த போட்டியின் 2, 3-வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் விளாசினார்.

இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பத்ம பூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

*ஆலிஸ் ஆன் முன்ரோ.*

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் விங்காம் என்ற பகுதியில் பிறந்தார்.

இவரது முதல் நூல் தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ (The Diamention of a Shadow) டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ் (Dance of the Happy Shades) முதல் கதைத் தொகுப்பாகும். தொடர்ந்து பல்வேறு பிரபலமான பத்திரிகைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.

இவர் கனடாவின் புனைக் கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General ) மூன்று முறையும், மான் புக்கர் விருது (Man Booker), ஓ ஹென்றி விருது, எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம், டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் என்றும், கனடாவின் செக்கோவ் (Chekhov) என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

*ஜி.ஏ.குல்கர்னி.*

1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார்.

காஜல்மாயா என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1973ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜிஏவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் கிராந்தி கானடே 'சைத்ரா' என்ற குறும்படத்தை உருவாக்கினார், அது 2002ஆம் ஆண்டு ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.

இவர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 view0 comments

Recent Posts

See All
bottom of page