top of page

Galileo Galilei (கலீலியோ கலிலி)

*கலீலியோ கலிலி*

அறிவியலில் புரட்சியை ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

இவர் தூர உள்ள பொருட்களை கிட்டவாக பார்க்கும் பொருளை கண்டறிய ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டுமென ஆராய்ச்சி மேற்கொண்டார். விடாமுயற்சிக்கு பிறகு 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தார்.




இவர் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்கள் மற்றும் வியாழனை நான்கு பெரிய நிலாக்கள் (இவரது புகழைச் சொல்லும் வகையில் கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) சுற்றி வருவதாகவும் கண்டறிந்தார்.

மேலும் கலீலியோ மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைக்காட்டி உட்பட பல்வேறு கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

கலீலியோவின் சூரிய மைய கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக 1632ஆம் ஆண்டு கலீலியோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.

பிறகு தனது இருவகை முதன்மை உலக கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் என்ற புத்தகத்தில் இவருடைய சூரிய மைய கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார்.

கலீலியோ வீட்டுச்சிறையில் இருந்தபோது தான், தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும், இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். அதில் இயங்கியல், பொருட்களின் வலிமை போன்ற துறைகளைப் பற்றிய ஆய்வுகளை தொகுத்து அளித்தார்.

'நோக்கு வானியலின் தந்தை', 'நவீன இயற்பியலின் தந்தை', 'நவீன அறிவியலின் தந்தை' என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படும் இவர் 1642ஆம் ஆண்டு மறைந்தார்.


13 views0 comments

Recent Posts

See All

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page