top of page

May 29




*சர்வதேச அமைதி காப்போர் தினம்.*

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

*உலக தம்பதியர் தினம்.*

உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


உலக அளவில் பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

*ஜான் எஃப் கென்னடி.*

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அப்போது ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இச்செயலுக்காக 'பர்பிள் ஹார்ட்' என்ற வீரப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

போரின் முடிவில் இவர் அரசியலுக்குத் திரும்பினார். இவர் எழுதிய *Profile in Courage* என்ற நூலுக்காக 1957ஆம் ஆண்டு *'புலிட்சர் பரிசு'* வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக 43வது வயதில் பதவி ஏற்றார்.

உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த இவர் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.

*இரண்டாம் சார்லஸ்.*

1630ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்தில் பிறந்தார்.

இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.

இவர் 1685ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 views0 comments

Recent Posts

See All
bottom of page