top of page

*அறிவின் கலங்கரை விளக்கம் - புத்தக வடிவிலான துபாய் முகம்மது பின் ராஷித் நூலகம்*

அமீரகம் பிரம்மாண்ட கட்டட அமைப்புகளை உருவாக்குவதில் தனித்தன்மை வாய்ந்த நாடாக உள்ளது. அதிலும் அதிகமாக துபாய் நகரத்தில் உள்ள கட்டட அமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் வேறு எங்கும் இல்லாதஅளவுக்கு பிரத்யேகமாகவும் அனைவரையும் உற்றுநோக்க செய்வதுமாகவும் உள்ளது.




பல்வேறு கட்டமைப்புகள் அவ்வப்போது உருவாகிக் கொண்டு இருந்தாலும் தற்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எடுக்கக்கூடிய கட்டிடமாக முகமதுபின்ராஷித்நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.





துபாய் அரசு நகரத்தில் சுற்றுலாவுக்காக பல்வேறு கட்டடஅமைப்புகளை செய்திருந்தாலும் தற்காலத்தில் அறிவுசார் தொழில்நுட்பங்கள் மற்றும் வாசிப்பதில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள துபாய் மாநகராட்சியின் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா மற்றும் கல்விக்காக தொடங்கப்பட்ட திட்டம் முகமதுபின்ராஷித் நூலகமாகும். முகமதுபின்ராஷித் நூலகம் துபாயில் மாநகராட்சி சார்பில் கிரீக் பகுதியில் உள்ள அல்ஜதாப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட நூலககட்டிடத்திற்காக 100 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கப்பட்டு இந்த நூலகம் முகமது பின் ராஷித் நூலக அறக்கட்டளை ஆதரவில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல்மக்தூம் வழிகாட்டுதலின் பேரில் கட்டமைக்கப்பட்டு துபாய் மாநகராட்சியின் கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் புதுமையான கட்டிட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் விரித்து வைக்கப்பட்ட புத்தகத்தின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துபடிக்கும் நிலையில் உள்ளது போல தோற்றமளிக்கிறது.





மொத்தம் 66 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்தபுத்தகவடிவிலான நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலக கட்டிடத்தில் 7 அடுக்குகள் உள்ளன.இந்த அடுக்குகளில் உள்ள தளங்களில் புத்தகங்களை பாதுகாக்க ஆய்வுக்கூடங்கள் ,தகவல்மையம் ,வாசிக்கும் அறைகள்,ஆட்சியாளரின் அரிய வகை,புத்தகங்களின் சேகரிப்பு,நிரந்தர கண்காட்சி அரங்கம், தற்காலிக கண்காட்சி அரங்கம், மேடைஅரங்கம், சினிமாஅரங்கு ஆகிய வசதிகள் உள்ளது.




மேலும் பல்வேறு பிரிவுகளில் அரபுமொழிநூலகம் ,குழந்தை நூலகம், குடும்ப நூலகம், சர்வதேச நூலகம், ஊடகநூலகம், பதிப்பகங்கள் நூலகம், இளைஞர் முதியவர்களுக்கான பிரத்யேக நூலகம், வர்த்தக நூலகம், வீடியோகாட்சி மற்றும் ஒலிவடிவ புத்தகங்களின் நூலகம் ஆகிய 9 சிறப்பு நூல்கள் உள்ளே பெயரிடப்பட்டுள்ளது.

21-வதுநூற்றாண்டின் அனைத்து நூல்களையும் இந்த பிரம்மாண்ட நூலகத்தில் இடம்பெற உள்ளது. இதில் புத்தகங்களை சேமிக்கும் கிடங்கு ஒன்றும் இதனுள்ளே உள்ளது.உலகில் மிகப்பெரிய மின்னணு தகவல் சேமிப்பு மையம் இங்கு நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.





இங்குள்ள அருங்காட்சியகத்தில் மனிதஇனத்தின் வரலாறு மற்றும் நாகரிக வளர்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்பெட்டகமாக உள்ளது.


இங்கு 60 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள்,சுமார் 73,000 இசைக் கோர்வைகள், சுமார் 75,000 வீடியோ பதிவுகளையும், கிட்டத்தட்ட 13,000 கட்டுரைகள், 325 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகள், உலகம் முழுவதிலிருந்து வெளிவரும் சுமார் 35,000 அச்சு & மின் நாளிதழ்கள் உள்ளது. கலாச்சாரம் மற்றும் சிந்தனையை ஒருங்கிணைத்து நமது தலைமுறைகள் சார்புடன் உருவாக்குவதே இதன் இலக்காகும்.






இலட்சக்கணக்கானபுத்தகங்களில் நமதுவளர்ச்சி மற்றும் செயல்முறையின் முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் இருக்கின்றன.





சுற்றிலும் கடல் தண்ணீர் வெளியே "Language Garden" என்று பல ஊக்குவிப்பு மொழிகளாலும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் வண்ணநிறங்களில் இயற்கையோடு அமைத்திருப்பது வாசிப்பு கேற்றஅமைதியான இடமாகாவும் உள்ளேகண்ணாடி செய்யும் மாயஜாலங்கள் வியக்கவைக்கிறது. சூரியஒளிக்கேற்பத் தன்மையை மாற்றிவெப்பத்தை நூலகத்திற்குள் செல்வதை கட்டுப்படுத்துகிறது.




அமீரகத்தின் வரலாற்றை பிரம்மிப்பாக ஒவ்வொரு வண்ண படங்களுடன் ஆட்சியாளர்களின் புகைப்படங்களையும் “UAE past and present photographic journey” மூலம் நம்மை கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலம்வரைமற்றும் எதிர்காலத்தின் செயல்பாடுகளுடன் அழைத்துச் செல்வது மிகச்சிறப்பு.





எங்கும் ஆங்கிலமும்,அரபி மொழியும் மட்டுமே தற்போது புத்தகங்கள் உள்ளன.மேலும் பல மொழிகளில் விரைவில் புத்தகங்கள் சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.





அன்புடன் முனைவர் ஸ்ரீரோகிணி உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம்

234 views0 comments

Recent Posts

See All
bottom of page