top of page

மார்ச் 4 -March 4

(04-மார்ச்)

*தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்*

இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.




தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


**************************************************************************************************************


(04-மார்ச்)

*கர்ரெட் மார்கன்*


பல கருவிகளை கண்டறிந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் 1877ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார்.

மார்கன், சிறுவயதிலேயே படிப்பை கைவிட்டார். பல இடங்களில் கூலி வேலை செய்து வந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்து கல்வி கற்றார்.

இவர் தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கான வழியை கண்டுபிடித்த பிறகு, மிகவும் பிரபலமானார். 1907ஆம் ஆண்டு தையல் இயந்திரம், ஷூ பழுது பார்க்கும் கடையை தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார்.

1914ஆம் ஆண்டு புகை, நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம், சீப்பு, கூந்தல் சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.எளிமையான, திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதை பயன்படுத்தி விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.




'100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ்' என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து, பல சாதனைகளை படைத்த கர்ரெட் மார்கன் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.

**********************************************************************************************************

*ரோகன் போபண்ணா*

1980ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோகன் போபண்ணா பிறந்தார்.



2010ஆம் ஆண்டு டேவிசு கோப்பை போட்டியில் இந்தியா பிரேசிலை வெல்வதற்கு போபண்ணா பெரும் பங்காற்றினார். இதனால் 1988க்குப் பிறகு இந்தியா முதன்முறையாக உலக குழு போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.


****************************************************************************************************************

12 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page