சாதனைகள்

இரண்டு முறை கின்னஸ் விருதாளர்

ஆசியப் புத்தகம் விருதாளர்

குழந்தையும் குறளும்

அருந்தமிழ் ஒளவை மொழிக்காவலர்

சொல்லரசி,
யுவகலாபாரதி,
சிந்தனைச் சிற்பி

சிறந்த கல்வியாளர் விருது

தன்னிகரற்ற தமிழன் விருது

சிங்கப் பெண் 2020, சிறந்த சாதனைப் பெண் 2020,

உலகத் திருவள்ளுவர் விருது

பெரியார் கண்ட தமிழச்சி, தமிழியல் விருது

தமிழ்ப் பண்பாட்டு கழகத்தில் தமிழ்த்தாய் விருது,

பிரான்ஸ் பெண்ணியம் விருது,
கம்போடியா அரசு திருக்குறள் விருது,
இலங்கையில் சிறந்த ஆய்வாளர்

அமீரக சாதனைப் பெண் 2019

2021 கலாம் விருது

2021 மார்ச் மாதம் உலகத் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சியில் தமிழ்த்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால் தமிழ்ப்பணிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.









































உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற நடவடிக்கைகள் தொடங்கி பன்னாட்டு உணவு நிறுவனங்கள் நம் மக்களின் உணவு கலாசாரத்தை ஜங்க் வகைக்கு மாற்றி விட்டனர். ஆனால், 30 ஆண்டுக்கு முன், 3 வேளையும் அரிசி சாப்பாடுதான் என்றிருந்த நமது கலாசாரத்தில் குறிப்பிட்ட சில சமுதாயத்தில் மட்டும் டிபன் ஒருவேளை உணவாக இருந்தது. எனவே, நம்ம வீட்டிலும் டிபன் செய்ய மாட்டார்களா என ஆசையாக இருக்கும். அதிலும், 4 வயதில் இட்லி எனது தீராத கனவாக இருந்தது. அப்போது தான் அப்பா என்னிடம், ‘‘ஒரு திருக்குறள் ஒப்பித்தால் ஒரு இட்லி“, என்றார். நான் 2 குறள் மனப்பாடமாக ஒப்பித்து 2 இட்லி சாப்பிடுவேன். ஆக, இட்லி தான் என்னை திருக்குறளைப் படிக்க தூண்டியது என்பது உண்மை.ஈரோடு மாவட்டத்தில் 5ம் வகுப்பி ல் 1,330 குறளையும் ஒப்புவித்து உலகச் சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றேன் .அதுதான் திருக்குறள் என்னுள் விதைத்த தொடக்க விதை. அந்த விதை தான் இன்று விருட்சமாக தழைத்து ஓங்கி உள்ளது.
திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும், பல்வேறு சிறப்புகளையும் குறிப்பாக நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணி நயங்கள் பல்வேறு உயிரினங்களை கூறி அதன் மூலம் எடுத்துரைக்கும் அறக்கருத்துக்கள் ஆகியவற்றை விளக்கி இக்கால சமூகத்தினருக்கு வழி நடத்துகிறேன். 5 ஆம் வகுப்பில் இருந்து தமிழ், கலை, மற்றும் இலக்கியம் தொடர்பான பணியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்!!