top of page

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது


👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.


👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


👉 நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். 1967ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


👉 1974ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று, இறக்கும் வரை பதவியில் இருந்த பக்ருதின் அலி அகமது 1977ஆம் ஆண்டு மறைந்தார்.


சர் ரொனால்டு ராஸ்.


👉 1857ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் சர் ரொனால்டு ராஸ் பிறந்தார்.


👉 இவர் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.


👉 இவர் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------

(14-மே)

உலக வலசை போதல் தினம்.


🐦 பறவைகளின் இடப்பெயர்வையே வலசை போதல் என்கிறார்கள். பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.


🐦 அவ்வாறு செல்லும் பறவைகளைப் பாதுகாத்தல், அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து மே இரண்டாவது வார (14.05.2022) இறுதியில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


(14-மே)

மிருணாள் சென்.


🎬 உலகத் தரத்துக்கு இந்தியத் திரைப்படங்களை உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் 1923ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்தார்.


🎬 இவரது முதல் திரைப்படமான ராத் போர் வெற்றி அடையவில்லை. பிறகு, இரண்டாவதாக வந்த நீர் ஆகாஷெர் நீச்சே என்ற படம் தான் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. மேலும் பைஷேஷ்ரவன், புவன் ஷோம் என்ற படங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.


🎬 இவரது ஏக் தின் பிரதிதின், காரிஜ், கல்கத்தா 71, அமர் புவன் ஆகிய திரைப்படங்களும் பிரபலமானவை. பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றன.


🎬 இவர் 2004ஆம் ஆண்டு சுயசரிதை (Always Being Born) எழுதினார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கௌரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம பூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.


🎬 இந்தியத் திரையுலகின் தலைசிறந்த அடையாளமாக திகழ்ந்த மிருணாள் சென் 2018ஆம் ஆண்டு மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

(15-மே) பியரி கியூரி.


🏆 மனிதகுல மேம்பாட்டுக்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை கண்டறிந்தனர்.


🏆 இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறை கியூரி விதி எனப்படுகிறது.


🏆 தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். இவர்கள்தான் கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்கள்.


🏆 கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903ஆம் ஆண்டு ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தனர். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.


🏆 நோபல் பரிசுக் குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி 1906ஆம் ஆண்டு மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

(16-மே) இலியா மெச்னிகோவ்.


💉 நோய் எதிர்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியான இலியா இல்யிச் மெச்னிகோவ் 1845ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ரஷ்யாவின் பானாசோவ்கா என்ற ஊரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) பிறந்தார்.


💉 இவர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு காட்டிங்கன், கீஸன் பல்கலைக்கழகங்கள், மூனிச் அகாடமி ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்தார்.


💉 இவர் நூற்புழுக்கள் குறித்தும், தட்டைப் புழுக்களின் செல்லக செரிமானம், விலங்கினங்களின் கருவளர்ச்சி குறித்தும் ஆராய்ந்தார்.


💉 நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். நட்சத்திர மீனின் லார்வா குறித்து ஆராய்ந்தார். உயிரினங்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.


💉 இதற்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு பால் எர்லிச் என்பவருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மூப்பியல் (Gerontology) என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.


💉 'நோய் எதிர்ப்பு சக்தி துறையின் தந்தை' என்று போற்றப்படும் இலியா மெச்னிகோவ் 1916ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

(17-மே)

எட்வர்ட் ஜென்னர்.


💉 பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார்.


💉 1765ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (Cow-Pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.


💉 பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.


💉 பின்பு கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார்.


💉 இயற்கையையும், மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 1823ஆம் ஆண்டு மறைந்தார்.



தீரேந்திர வர்மா.


👉 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.


👉 பிரபல இந்தி கவிஞரும், எழுத்தாளரும், மொழியியல் ஆராய்ச்சியாளரும் மற்றும் நிபுணராகவும் அறியப்பட்டவர்.


👉 இந்துஸ்தானி அகாடமியின் உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டவரும், இந்தி இலக்கியத்துக்கு புது வடிவம் கொடுத்தவருமான தீரேந்திர வர்மா, 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தனது 76வது வயதில் மறைந்தார்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------

(18-மே)

சர்வதேச அருங்காட்சியக தினம்.


🌟 ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், அதேபோல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இத்தினம் 1977ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது.


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்.


💉 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.


💉 தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். எச்.ஐ.வி தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒன்றாக இணைந்து செயல்படும் விஞ்ஞானிகளுக்காவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


(18-மே) ஹெச்.டி.தேவ கௌடா.


🌟 ஹெச்.டி.தேவ கௌடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா 1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.


🌟 இவர் இந்தியக் குடியரசின் பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.


🌟 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.


🌟 1999ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கினார்.


வெ.இராதாகிருஷ்ணன்.


👉 1929ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உலகளாவிய புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் பிறந்தார்.


👉 80க்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளை அறிவியல் இதழ்களிலும், அனைத்துலக ஆய்வரங்குகளிலும் வெளியிட்டார்.


👉 விண்ணியற்பியல், வானியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவின் தலைவராக இருந்த இவர் 2011ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------

(19-மே) உலக குடும்ப மருத்துவர் தினம்.


💉 ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு - WONCA) 2010ஆம் ஆண்டு முதன்முதலாக இந்நாளை அறிவித்தது.


💉 குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும், அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


(19-மே)

நீலம் சஞ்சீவ ரெட்டி.


🌟 இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டத்திலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.


🌟 1929ஆம் ஆண்டு அனந்தபூருக்கு மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார்.


🌟 இவர் ஆந்திரப்பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர், 1951ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ஜிய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


🌟 இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை 1964ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.


🌟 இவர் திறமையாகவும், நேர்மையாகவும் பணி ஆற்றியதால் 1977ஆம் ஆண்டு நடந்த குடியரசு தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக இந்தியாவின் குடியரசு தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் 1996ஆம் ஆண்டு மறைந்தார்.


கிரீஷ் கர்னாட்.


🕵 1938ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் கிரீஷ் கர்னாட் பிறந்தார். இவர் கன்னடத்திற்கான ஞானபீட விருதையும் பெற்றவர்.


🕵இவருக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.


🕵 நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்த இவர் 2019ஆம் ஆண்டு ஜீன் 10ஆம் தேதி மறைந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

(20-மே)

பாலு மகேந்திரா.


🎞 இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மகேந்திரா.


🎞 இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு, செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.


🎞 பிறகு 1977ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.


🎞 சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.


🎞 சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.

அயோத்தி தாசர்.


✍ 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவரான அயோத்தி தாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.


✍ திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர்.


✍ 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.


✍ திராவிட மகாஜன சபை இவரால் கி.பி.1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


✍ அயோத்தி தாசர் 1885ஆம் ஆண்டில் திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார்.


✍ சுமார் 25 நூல்கள், 30 தொடர்கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதிய இவர் 1914ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மறைந்தார்.


நானா சாகிப்.


🤴 1824ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நானா சாகிப் பிறந்தார்.


🤴 இவர் 1859ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.


(20-மே)

உலக அளவியல் தினம்.


👉 நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.


👉 முதன் முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

(21-மே)

உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்.


👥 கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.


👥 ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.


(21-மே)

மேரி அன்னிங்.


🐲 புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டோர்செட் நகரில் பிறந்தார்.


🐲 இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார். அதனால் பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் திறமை பெற்றார்.


🐲 1823ஆம் ஆண்டு முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். அதன் பிறகு டிராகன் எலும்பு, ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டையும் கண்டுபிடித்தார். பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.


🐲 பழைய சரித்திரத்தை எதிர்வரும் சந்ததிகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங் 1847ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(22-மே) உலக பல்லுயிர் பெருக்க தினம்.


🌟 உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


🌟 மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.



உலக கோத் தினம்.


👉 உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள்.


👉 பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


(22-மே)

இராஜாராம் மோகன் ராய்.


🌸 இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய இராஜாராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.


🌸 இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.


🌸 இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.


🌸 தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜாராம் மோகன் ராய் 1833ஆம் ஆண்டு மறைந்தார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

(23-மே)

உலக ஆமைகள் தினம்.


🐢 உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.



சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்.


💉 வளரும் நாடுகளில் சுமார் 2 முதல் 3.5 மில்லியன் வரை இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இந்நோயினால் பாதிப்படைகின்றனர்.


💉 ஆகவே, இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.


(23-மே)

கார்ல் லின்னேயஸ்.


👉 நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.


👉 இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.


👉 புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

------------------------------------------------------------------------------------------------------------------------------

(24-மே)

அலெக்சாண்ட்ரினா விக்டோரியா.


👰 இங்கிலாந்தின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


👰 இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.


👰 இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.


👰 'ஐரோப்பாவின் பாட்டி' எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 1901ஆம் ஆண்டு மறைந்தார்.



டேனியல் பாரன்ஹீட்.


👉 பாதரச கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மானிய இயற்பியலாளர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் 1686ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பிறந்தார்.


👉 இவர் ஆல்கஹால் தெர்மாமீட்டர் (Alcohol Thermometer) கருவியை கண்டுபிடித்தார். மேலும், பாரன்ஹீட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.


👉 இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஹீட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவர் 1736ஆம் ஆண்டு மறைந்தார்.


👉 1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.


👉 தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 1778ஆம் ஆண்டு மறைந்தார்.


👉 சகோதரர்கள் தினம் :.

நம் வாழ்க்கையில் சகோதரர்களுக்கு அன்பும், மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


👉 1543ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மறைந்தார்.


👉 1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

(25-மே)

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.


👦 ஒவ்வொரு வருடமும் மே 25ஆம் தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


👦 எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் இந்த உலகத்தின் எதிர்கால சொத்துக்கள் ஆவார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.


(25-மே)

மு.சி.பூர்ணலிங்கம்.


✍ தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.


✍ இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.


✍ தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.


✍ தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை 1947ஆம் ஆண்டு மறைந்தார்.



பீட்டர் சீமன்.


👨‍🔬 1865ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் நெதர்லாந்தில் பிறந்தார்.


👨‍🔬 இவர் டச்சு இயற்பியலாளர் ஆவார். சீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும், கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.


👨‍🔬 1923ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் கட்டப்பட்ட ஒரு புதிய ஆய்வகம் 1940ஆம் ஆண்டு சீமன் ஆய்வகமாக மறுபெயரிடப்பட்டது.


👨‍🔬 1921ஆம் ஆண்டு டிராப்பர் பதக்கத்தையும், பல விருதுகளையும் மற்றும் கௌரவ பட்டங்களையும் பெற்ற இவர் 1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மறைந்தார்.



ராஷ் பிஹாரி போஸ்.


👳 1886ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மேற்கு வங்காளத்தில் பிறந்தார்.


👳 மேலும் சிம்மசொப்பனம், வீரம், புரட்சி என்று படித்தால், உடனே நம் நினைவிற்கு வருபவர் ராஷ் பிஹாரி போஸ்.


👳 இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிஹாரி போஸ் தான்.


👳 இவர் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி போரில் கொல்லப்பட்டார். அதற்கு பின் இவரது மறைவை போற்றும் வகையில் ஜப்பான் அரசு 'Order of Rising Sun' என்ற உயர் விருதை வழங்கி சிறப்பித்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

(26-மே)

சாலி ரைட்.


🚀 அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் விண்வெளி வீரரான சாலி ரைட் 1951ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார்.


🚀 இவர் 1978ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். மேலும், 1983ஆம் ஆண்டு விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்ற வரலாற்றை படைத்தார். இவர் மொத்தம் 343 மணிநேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.


🚀 ஆர்பிட்டர் சேலஞ்சரில் இரண்டு முறை பறந்து சென்ற பிறகு, இவர் 1987ஆம் ஆண்டு நாசாவை விட்டுச் சென்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.


🚀 தேசிய வீராங்கனையாக மதிக்கப்படும் இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார்.



மனோரமா.


🎥 ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.


🎥 தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.


🎥 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.


🎥 இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

(27-மே)

ரவி சாஸ்திரி.


🏏 இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.


🏏 இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். பிறகு ஆல்ரவுண்டராக மாறினார்.


🏏 இவர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக பங்கேற்று முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானார்.


🏏 கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கிறார்.



ரேச்சல் லூயிஸ் கார்சன்.


👩‍🔬 1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் அமெரிக்காவில் பிறந்தார்.


👩‍🔬 1936ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கக் கடல் தொழில் பணியகத்தில் முழுநேர வேலைக்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது பெண்மணியானார்.


👩‍🔬 1951ஆம் ஆண்டு வெளியான இவரது புத்தகம் 'த சீ அரௌண்ட் அஸ்' (The Sea Around us), புகழையும், பணத்தையும் இவருக்கு பெற்றுத் தந்தது.


👩‍🔬 15 வருடங்கள் அமெரிக்கக் கடல் தொழில் பணியகத்தில் பணிபுரிந்த இவர் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

(28-மே)

உலக பட்டினி தினம்.


🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அப்போதே பாரதியார் பாடினார்.


🍝 ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.


🍝 மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.


(28-மே)

என்.டி.ராமாராவ்.


👤 என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ்.


👤 இவர் 1949ஆம் ஆண்டு மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1951ஆம் ஆண்டு வெளிவந்த பாதாள பைரவி, திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்று தந்தது. 1968ஆம் ஆண்டு தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.


👤 பிறகு, திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1995ஆம் ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.


👤 மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமாராவ் 1996ஆம் ஆண்டு மறைந்தார்.



மைசூர் வாசுதேவாச்சாரியார்.


🎼 சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.


🎼 இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. பத்ம பூஷண், சங்கீத கலாநிதி விருது, மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விஷாரத், சரஸகான சிரோன்மணி என பல விருதுகளைப் பெற்றார்.


🎼 தலைசிறந்த கர்நாடக இசை நட்சத்திரமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1961ஆம் ஆண்டு மறைந்தார்.



டி.எம்.தியாகராஜன்.


🎻 1923ஆம் ஆண்டு மே வர 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.தியாகராஜன் தஞ்சாவூரில் பிறந்தார்.


🎻 சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியராகவும், உதவித் தலைவராகவும் பணியாற்றி 1981ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


🎻 கலைமாமணி விருது, சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத கலா நிபுணா, சங்கீத சூடாமணி விருது ஆகிய விருதுகளை பெற்ற இவர் 2007ஆம் ஆண்டு ஜீன் 27ஆம் தேதி மறைந்தார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------




5 views0 comments

Recent Posts

See All

(24 ஏப்ரல் - 30 ஏப்ரல்)

(24-ஏப்) *உலக ஆய்வக விலங்குகள் தினம்* உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் து

bottom of page