top of page

1 August -15 August(01-ஆக)

*உலக சாரணர் தினம்.* ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். *உலக தாய்ப்பால் தினம்.* உலகம் முழுவதும் இன்று உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. *உலக காகித தினம்.* அன்று முதல் இன்று வரை கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு மற்றும் செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் இருந்து வருகிறது. 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜவஹர்லால் நேரு புனேயில் 'பேப்பர் டெல்ஸ்' என்ற கைவினை காகித ஆலையை துவக்கி வைத்தார். இந்தியாவின் முதல் காகித ஆலை துவங்கப்பட்டதன் அடையாளமாக இந்நாளை காகித தினமாக கொண்டாடுகின்றோம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- *டைகர் வரதாச்சாரியார்.* கர்நாடக இசைப்பாடகர் டைகர் வரதாச்சாரியார் 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் பிறந்தார். இவர் தன்னுடைய 14வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து முறைப்படி இசை பயின்றார். இவர்கள் காலாடிப்பேட்டை சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். மைசூர் நவராத்திரி விழாவில் பாடியபோது இவர் பாடிய பல்லவியை கேட்ட மைசூர் மகாராஜா டைகர் என்ற பட்டத்தை சூட்டி, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக அமர்த்தினார். இவருக்கு 1932ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக்கு பெருமை சேர்த்த இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்.* வண்ணம் தீட்டும் புத்தகங்கள், வண்ண படங்கள் கொண்ட புத்தகங்கள் போன்றவை குழந்தைகள் விரும்புவதில் பிரபலமான ஒன்றாகும். ஆனால், இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர். எனவே, இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (02-ஆக) *பிங்கலி வெங்கய்யா.* இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார். ஆந்திரப்பிரதேசத்தில் இவர் வைரச்சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் வைரம் வெங்கய்யா என்று அழைக்கப்பட்டார். கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றதை பார்த்து, நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது வலியுறுத்தினார். காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார். பிறகு அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 1963ஆம் ஆண்டு மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *தனிநாயகம் அடிகளார்.* 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர ஸ்பானிஷ், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் கற்று தேர்ந்தவராக இருந்தார். 'தமிழ்க் கல்ச்சர்' என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராக 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை இருந்தார். இலங்கை, மலேசியா, லண்டன், பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் போன்ற நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். ஓரு ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்த இவர் 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ (03-ஆக) *மைதிலி சரண் குப்த்.* விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார். இவரது முதல் முக்கிய படைப்பு 'ரங் மைன் பாங்' ஆகும். அதை தொடர்ந்து சாகேத், பாரத் பாரதி, ஜெயத்ரத்வத், கிஸான், விகட் பட் போன்ற பல நூல்களை படைத்துள்ளார். மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இவர் பல விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். மகாத்மா காந்தி இவரை 'ராஷ்டிர கவி' என்று புகழாரம் சூட்டினார். மேலும், இவருக்கு 1954ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது. இவர் சில ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர்ஆம் ஆண்டு 1964 மறைந்தார். *சுனில் சேத்ரி.* 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்தியக் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி பிறந்தார். இவர் இந்தியாவின் கூட்டிணைவில் பங்குபெறும் அணிகளான மோகன் பகன், ஈஸ்ட் பெங்கால் கிளப், ஜெசிடி எஃப்சி, டெம்போ எஸ்.சி போன்ற கால்பந்து கழகங்களுக்காக ஆடியுள்ளார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் பதக்கத்தை வென்றுள்ளார். அன்று முதல் இன்று வரை சர்வதேச அரங்கில் பதினைந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக கோல் போடுவதை மட்டுமே இலக்காக வைத்து இயங்கி வருகிறார் சுனில் சேத்ரி. இதுவரை 115 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 72 கோல்களை அடித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ (04-ஆக) *பராக் ஒபாமா.* அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார். இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர். *ஜி.ராமபத்ரன்.* 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஜி.ராமபத்ரன் பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை மிருதங்க வாத்தியக் கலைஞர் ஆவார். சங்கீத சூடாமணி விருது, சங்கீத கலாநிதி விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ள இவர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி மறைந்தார். *நா.தர்மராஜன்.* 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் பிறந்தார். இவர் தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 120 நூல்களையும், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று *'மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் -* 80' என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (05-ஆக) *நீல் ஆம்ஸ்ட்ராங்.* நிலாவில் முதன்முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார். இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார். 1962ஆம் ஆண்டு நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். 1969ஆம் ஆண்டு மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இந்த பயணத்தின்போது தான் இவர் முதன் முதலாக நிலவில் காலடி எடுத்து வைத்தார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். ஏராளமான பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்று நூலான 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்' 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார். *ராஜமாணிக்கம் பிள்ளை.* 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார். சங்கீத கலாநிதி விருதுஇ சங்கீத நாடக அகாடமி விருது, இசைப்பேரறிஞர் விருது போன்ற விருதுகளை பெற்ற இவர் 1970ஆம் ஆண்டு மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (06-ஆக) *ஹிரோஷிமா நினைவு தினம்.* 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி யுரேனியம் என்ற வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, லிட்டில் பாய் என்ற அணு குண்டை ஹிரோஷிமா மீதும், புளூட்டோனியம் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட, ஃபேட் மேன் என்ற அணு குண்டை நாகசாகி மீதும் அமெரிக்கா வீசியதில் சுமார் 2,00,000 பேர் இறந்தனர். இந்த பேரழிவின் நினைவு தினமாக ஹிரோஷிமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. *அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்.* பென்சிலின் மருந்தைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். 20 வயதில் நோய்த்தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போல தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என நினைத்து அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அவற்றில் திடீரென்று தோன்றிய நீல நிற பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தார். 1945ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனித குலத்திற்கு நன்மை சேர்த்து பல கோடி உயிர்களைக் காப்பாற்றிய இவர் 1955ஆம் ஆண்டு மறைந்தார். *ஜான் பாஸ்டல்.* 1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெரிக்க கணினி அறிவியல் மேதை ஜான் பாஸ்டல் பிறந்தார். இவர் இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்கும் வழி முறையை வடிவத்தை கொடுத்தார். கணினி இனையதளத்தை வடிவமைப்பதில் சிறப்பாக செயல்பட்ட இவர் 1998ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி இறந்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (07-ஆக) *தேசிய கைத்தறி தினம்.* தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஆடைகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. *நண்பர்கள் தினம்..* உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம். அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *எம்.எஸ்.சுவாமிநாதன்.* பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது 'இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்' என்று பல நாடுகள் கூறினர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (08-ஆக) *உலிமிரி இராமலிங்கசுவாமி.* இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். இவர் புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1969), பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. ஊட்டச்சத்து இயலில் ஆராய்ச்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர் 2001ஆம் ஆண்டு மறைந்தார். *சி.கே.பிரகலாத்.* 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகின் பல முன்னணி வணிக நிறுவனங்களால் மேலாண்மை குறித்த அறிவுரைக்காக நாடப்படும் புகழ்பெற்ற பேராசிரியர் சி.கே.பிரகலாத் (கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்) கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரின் கல்விச்சேவைக்காக 2009ஆம் ஆண்டு இந்திய அரசினால் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டார். முன்னதாக பிரவாசி பாரதீய சம்மான் (வெளிநாட்டு இந்தியருக்கான விருது) வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். இவர் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மறைந்தார். *ரோஜர் பெடரர்.* 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனான ரோஜர் பெடரர் பிறந்தார். இவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 20 கிராண்ட் சிலாம் எனப்படும் பெருந்தொடர்களை வென்றுள்ளார். இவரை பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ என்றும் புகழப்படுகின்றனர். *சாரா டீஸ்டேல்.* 1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அமெரிக்கப் பெண் கவிஞர் சாரா டீஸ்டேல் பிறந்தார். இவரின் முதல் கவிதை 'ரீடிஸ் மிர்ரர்' செய்தித்தாளில் வெளிவந்தது. பின் முதல் கவிதைத் தொகுப்பு 1907ஆம் ஆண்டிலும், இரண்டாம் கவிதை தொகுப்பு 1911ஆம் ஆண்டிலும் கவிதைகள் வெளிவந்தன. இவர் 1918ஆம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்றார். இவர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மறைந்தார். *உலக பூனை தினம்...* மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவைகள் சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (09-ஆக) *நாகசாகி தினம்.* அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (Bat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின் மீது வீசியது. இக்குண்டு சுமார் 3.5மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. *சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்.* ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது. பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல்- இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------------------------------------- (09-ஆக) *விநாயக கிருஷ்ண கோகாக்* கன்னட இலக்கியப் படைப்பாளி விநாயக கிருஷ்ண கோகாக் 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார். இவர் கன்னடத்தில் எழுதி 1982ஆம் ஆண்டு வெளிவந்த 'பாரத சிந்து” ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றவர். இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். இவர் 1992ஆம் ஆண்டு மறைந்தார். *ஈ.கிருஷ்ண ஐயர்.* 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஈ.கிருஷ்ண ஐயர் சென்னை மாகாணம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார். 1930ஆம் ஆண்டு இந்தியத் தேசியக் காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களைப் பிரபலப் படுத்தினார். சட்டப்பூர்வமாக ஒழிக்கப்படும் நிலையிலிருந்த சதிர் ஆட்டத்திற்குப் பரதநாட்டியம் எனப் பெயர் சூட்டிய ஈ.கிருஷ்ண ஐயர் 1968ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------- (10-ஆக) *வி.வி.கிரி.* இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார். 1914ஆம் ஆண்டு காந்தியை சந்தித்த பிறகு, சட்டம் பயில்வதை விட, விடுதலை போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார். 1936ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். அதன்பின் துணை குடியரசு தலைவர் (1967), குடியரசு தலைவர் (1969 இடைக்காலப் பதவி), அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார். 1975ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் 1980ஆம் ஆண்டு மறைந்தார். *சாவி.* தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான 'சாவி' (சா.விஸ்வநாதன்) 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் பிறந்தார். எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. அதனால், கல்கியில் அவ்வப்பொழுது 'விடாக்கண்டர்' என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் 'கல்கி' ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார். பிறகு 'சாவி' என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய 'மாறுவேஷத்தில் மந்திரி', 'சூயஸ் கால்வாயின் கதை' உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாவி 2001ஆம் ஆண்டு மறைந்தார். *வைணு பாப்பு.* 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய வானியலாளர் வைணு பாப்பு சென்னையில் பிறந்தார். இவர் 1960 ஆம் ஆண்டில் கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். வானில் உள்ள விண்வெளிப் பொருட்களை உற்று கவனிக்க ஏற்ற இடமாக ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரை இவரே கண்டறிந்தார். காவலூரில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட காரணத்தினால் இது காவலூர் வானியல் ஆய்வகம் என்று பெயர் வந்தது. தொலைநோக்கியை ஆராய்ந்த வைணு பாப்பு 1982ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------- (11-ஆக) *எனிட் பிளைட்டன்.* குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது. இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன. 'மாடர்ன் டீச்சிங்', 'விஷ்ஷிங் சேர்' தொடர், 'தி ஃபேமஸ் ஃபைவ்', 'சீக்ரட் செவன்', 'லிட்டில் நூடி சீரிஸ்' ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன. தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968ஆம் ஆண்டு மறைந்தார். *ஸ்டீவ் ஓனியாக்.* 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார். அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976ஆம் ஆண்டு ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார். 1970ஆம் ஆண்டு ஆப்பிள் - 1 மற்றும் ஆப்பிள் - 2 ஆகிய கணினிகளைக் தனியாக வடிவமைத்ததுடன், சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கினார். *வீ.துரைசுவாமி.* 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார். இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன சமாஜத்தில் 1943ஆம் ஆண்டு நடைபெற்றது. சென்னையில் முதன்முதலாக 1944ஆம் ஆண்டு ரசிக ரஞ்சனி சபா ஏற்பாடு செய்த இசைக்கச்சேரியில் வீணை வாசித்தார். சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சிறப்பித்தது. சிறிது காலம் கல்லீரல் அழற்சியால் (Hepatitis) பாதிக்கப்பட்டிருந்த துரைசுவாமி பெங்களூருவில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ (12-ஆக) *சர்வதேச இளைஞர் தினம்.* நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. எனவே இத்தகைய இளைஞர்களின் பிரச்சனைகளையும், செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. *தேசிய நூலக தினம்.* இந்தியாவில் தேசிய நூலக தினம் ஆகஸ்ட் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நூலகத்தின் தந்தை என்றழைக்கப்படும் இராமாமிர்த அரங்கநாதன் பிறந்த தினமான ஆகஸ்ட் 12ஆம் தேதி தேசிய நூலக தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. *உலக யானைகள் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்கவும், அவற்றைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும். நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. (12-ஆக) *விக்ரம் சாராபாய்.* இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார். இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி என ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு மறைந்தார். *இராம.பெரியகருப்பன்.* 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழறிஞர், தமிழண்ணல் என்கிற இராம.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தார். இவர் 3 ஆண்டுகள் காரைக்குடியில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார். இரண்டாண்டுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்க்குடிமகன், கா.காளிமுத்து உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும், சாகித்ய அகாதெமியில் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். தமிழ் இலக்கணம் குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆய்வில் துறைகள் விரிவாக அமைய பல அடிப்படை நூல்கள் எழுதியுள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------- (13-ஆக) *சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்.* உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ஆம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது. (13-ஆக) *டி.கே.மூர்த்தி.* தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர். சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது இடம்பெற்றது. இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். *ஃபிரெட்ரிக் சேங்கர்.* 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த ஃபிரெட்ரிக் சேங்கர் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் நியுக்ளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக 1980ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக வேதியியலுக்கான நோபல் பரிசை வால்டர் கில்பெர்க் என்பவருடன் இணைந்து வென்றார். இதன்மூலம் இவர் 2 முறை நோபல் பரிசை வென்ற 4வது நபராகவும், வேதியலுக்காக 2 முறை நோபல் பரிசை வென்ற ஒரே விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றார். இவர் ஒற்றை இழை வார்ப்புருக்களிலிருந்து புதிய டிஎன்ஏ போக்குகளை (Strands) உருவாக்க கதிரியக்க நியூக்ளியோடைட்களை அறிமுகம் செய்தார். காப்ளே பதக்கம் பெற்ற ஃபிரெட்ரிக் சேங்கர் 2013ஆம் ஆண்டு தனது 95வது வயதில் மறைந்தார். *பிடல் காஸ்ட்ரோ.* 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். கியூபாவில் 1959ஆம் ஆண்டு தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிடல் காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், 1976ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல் காஸ்ட்ரோ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். பிடல் காஸ்ட்ரோ உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் ஆவார். பன்னாட்டளவில் பிடல் காஸ்ட்ரோ 1979ஆம் ஆண்டு இருந்து 1983ஆம் ஆண்டு வரை மற்றும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்துள்ள இவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------- (14-ஆக) *பிரிவினை கொடுமைகள் தினம்.* கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நடந்த வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வன்முறையில் உயிரிழந்த மக்களை நினைகூறும் விதமாக இந்தநாளை பிரிவினை கொடுமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. (14-ஆக) *வேதாத்திரி மகரிஷி .* 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்ற தாரக மந்திரத்துடன் உடற்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது தியானம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கி வருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. உலக மக்களுக்காக இவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். மேலும், இவர் ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்திரி மகரிஷி 2006ஆம் ஆண்டு மறைந்தார். *என்.எம்.ஆர்.சுப்பராமன்.* 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் பிறந்தார். காந்தியடிகளின் வழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் *'மதுரை காந்தி'* என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். 1923ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். மதுரை நகராட்சியின் தலைவராக 1935ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்து மக்களுக்காக பணியாற்றினார். 'அகில இந்திய காந்தி நினவு நிதி' அமைப்பு துவக்கப்பட்ட போது, சுப்பராமன்இ தமிழ்நாட்டில் அதன் அமைப்புச் செயலராகவும், பின் அதன் தலைவராகவும் பணியாற்றிய இவர் 1983ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (15-ஆக) *இந்திய சுதந்திர தினம்.* 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26. இது 1950ஆம் ஆண்டுமுதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. (15-ஆக) *ஸ்ரீ அரவிந்தர் கோஷ்.* விடுதலை இயக்க வீரரும்இ ஆன்மிக ஞானியுமான ஸ்ரீ அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் அரவிந்தகோஷ். பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தேசிய விழிப்புணர்வு, சுதேசி இயக்கம், ஒத்துழையாமை, தேசியக் கல்வி இயக்கங்களுக்கு ஆதரவு திரட்டினார். திலகர், சகோதரி நிவேதிதா உடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார். இவர் சீடர்களுக்கு எழுதிய ஆயிரக்கணக்கான குறிப்புகள் திரட்டப்பட்டு லெட்டர்ஸ் ஆன் யோகா என்ற நூலாக வெளியிடப்பட்டது. சிறந்த கவிஞர், சரித்திரப் பேராசிரியர், அரசியல்ஞானி, எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட அரவிந்தர் 1950ஆம் ஆண்டு மறைந்தார். *நெப்போலியன் போனபார்ட்.* பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கோர்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார். இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785ஆம் ஆண்டு பதவி ஏற்றார். 1796ஆம் ஆண்டு படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். பல போர்களில் வெற்றியை குவித்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1821ஆம் ஆண்டு மறைந்தார்.

2 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page