top of page

FEBRUARY 22-பிப்ரவரி 22

*தில்லையாடி வள்ளியம்மை*

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.

இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?' என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி' என்றாராம்.


பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் 1914ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.





*ஜார்ஜ் வாஷிங்டன்*

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 1753ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775ஆம் ஆண்டு அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1783ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. இவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் 1789ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாக கருதப்படும் பெருமைக்குரிய இவர் 1799ஆம் ஆண்டு மறைந்தார்.




*பேடன் பவல்*

தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் 1907ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். முதலில் சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. பிறகு தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளை விரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி சிறப்பித்தது.

சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1941ஆம் ஆண்டு மறைந்தார்.




14 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page