top of page

பிப்ரவரி 28-FEBRUARY 28

*தேசிய அறிவியல் தினம்*

தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.




சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கின்ற ஆராய்ச்சி முடிவை பிப்ரவரி 28ஆம் தேதி (1928) வெளியிட்டார். இதற்காக அவர் 1930ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு புகழை தேடித்தந்தார். ராமன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தான் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது.

அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.



தி.ஜானகிராமன்

நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார்.




இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துக்கொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது பயண அனுபவங்களை 'உதயசூரியன்', 'கருங்கடலும் கலைக்கடலும்' என்ற தலைப்புகளில் கணையாழி என்ற தன்னுடைய வார இதழில் எழுதினார்.

1964ஆம் ஆண்டு வெளியான இவரது 'மோகமுள்' நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதில் 'சக்தி வைத்தியம்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.

இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டவரும், 'தி.ஜா.' என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான இவர் 1982ஆம் ஆண்டு மறைந்தார்.


*பால் கிரக்மேன்*


1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியருமான பால் கிரக்மேன் பிறந்தார்.




இவர் 2008ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவராவார். புது வணிக தேற்றத்தில் இவருடைய பங்களிப்புக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.


8 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page