top of page

மார்ச் 1- march1

*ஏ.என்.சிவராமன்*

பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.




காந்திஜியின் 'ஹரிஜன்' இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1934ஆம் ஆண்டு 'தினமணி' இதழ் தொடங்கப்பட்டபோது, இவர் உதவி ஆசிரியராக பணியாற்றினர்.

கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.

தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், 'ஏஎன்எஸ்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 2001ஆம் ஆண்டு மறைந்தார்.



*எம்.கே.தியாகராஜ பாகவதர்*


தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்.

இவர் தன்னுடைய 16வது வயதில் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. 'தியாகராஜன் ஒரு பாகவதர்' என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.



திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார். அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, 3 தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.


#மார்ச் 1

7 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page